Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மணமணக்கும் கல்யாண வீட்டு ரசம் எப்படி வைப்பது?
[Monday 2026-04-13 16:00]

கல்யாண வீட்டு சுவையில் மணமணக்கும் ரசம் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக இந்திய மக்களின் உணவில் ரசம் என்பது மிகவும் விரும்பும் ஒரு சமையலாக இருக்கின்றது. சளி, இருமல், செரிமானம் இவற்றிற்கு நல்ல நிவாரணம் அளிக்கின்றது. ரசத்தில் தக்காளி ரசம், மிளகு ரசம், பூண்டு ரசம் என்று பல வகைகள் உள்ளன. நாம் வீட்டில் வைக்கும் ரசத்தை விட கல்யாண வீட்டில் சாப்பிடும் ரசத்தின் சுவை அட்டகாசமாகவே இருக்கும்.

இந்த பதிவில் கல்யாண வீட்டு ரசம் எவ்வாறு சமைக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

வதக்கி அரைப்பதற்கு...

எண்ணெய் - 1 ஸ்பூன்

மல்லி - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

மிளகு - 1/2 டீஸ்பூன்

வரமிளகாய் - 2

பச்சை மிளகாய் - 1

பூண்டு - 7 பல்

ரசத்திற்கு

புளி - 1 எலுமிச்சை அளவு

தக்காளி - 3 (2 அரைத்தது+ 1 நறுக்கியது)

துவரம் பருப்பு - 2 ஸ்பூன் (வேக வைத்து அரைத்தது)

கொத்தமல்லி - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - சுவைக்கேற்ப

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

வெல்லம் - 1/4 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு

எண்ணெய் - 1 ஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை

புளியை ஊற வைத்து கரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, வறுப்பதற்கு கொடுத்த பொருட்களை வறுத்து, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

தக்காளி, வேக வைத்த துவரம்பருப்பு இவற்றினை அரைத்து தனியாக வைக்கவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து அரைத்து வைத்துள்ள பொருட்கள், தக்காளி, பருப்பு, புளி கரைசல், தண்ணீர் சேர்த்து ரச பதத்திற்கு வைக்கவும்.

பின்னர் மஞ்சள் தூள், உப்பு, வெல்லம், கொத்தமல்லி, நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க வைத்த இறக்கினால் கல்யாண வீட்டு ரசம் தயார்.

கடைசியாக தாளிக்க கொடுத்த பொருட்களைக் கொண்டு தாளித்து முடித்தால் போதும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா