Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் கிரீன் டீ!
[Tuesday 2026-04-14 16:00]

கிரீன் டீ குடிப்பதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் மக்கள் அதிகமாக கிரீன் டீ பருகுவதை வழக்கமாக வைத்துள்ளனர். உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் பாலிபினால்கள் கிரீன் டீயில் நிறைந்துள்ளது. கிரீன் டீ பருகுவது நல்லது என்றாலும், அளவிற்கு அதிகமானால் நஞ்சாக மாறிவிடுகின்றது. நாள் ஒன்றிற்கு நினைத்த நேரத்தில் கிரீன் டீ பருகுவதைத் தவிர்க்கவும்.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் கிரீன் டீ-யை கணக்கில்லாமல் அடிக்கடி எடுத்துக் கொள்கின்றனர். கிரீன் டீ அதிகம் பருகுவதால் உடல் எடை சட்டென குறைந்துவிடாது. ஆனால் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றது.

உடல் எடையைக் குறைப்பதற்கு உதவியாக கிரீன் டீ காணப்பட்டாலும், நாள் ஒன்றிற்கு இரண்டு முதல் 3 கப் வரை எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த அளவிற்கு அதிகமாக குடிப்பதால் உடல்நலப்பிரச்சனைகள் ஏற்படும் என்று கூறப்படுகின்றது. அதாவது கிரீன் டீயில் உள்ள டானிக்கள் உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாடு அபாயத்தினை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகின்றது.

உயர்ரத்த அழுத்த பிரச்சனைகள் உள்ளவர்கள் கிரீன் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதிகமாக கிரீன் டீ பருகினால் எலும்புகள் பலவீனமடைகின்றது.

அதே போன்று நீரிழிவு நோயாளிகளும் கிரீன் டீ குடிப்பதைக் கட்டாயம் தவிர்க்கவும். அவ்வாறு குடிக்க வேண்டும் என்றால் மருத்துவரின் ஆலோசனைக்கு பின்பே குடிக்கவும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா