Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
உணவுக்குப் பிறகு ஒரு கிராம்பு சாப்பிட்டால் உடலுக்கு என்ன பலன்?
[Thursday 2026-04-16 16:00]

தினமும் உணவுக்குப் பின்னர் ஒரு கிராம்பை சாப்பிடுவதால் உடலுக்கு பல எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் அது என்னவென்பதை பதிவில் பார்க்கலாம். நம் சமையலறைகளில் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், மருத்துவ குணங்களுக்காகவும் பயன்படும் பல பொருட்கள் உள்ளன. அந்த லிஸ்டில் இடம்பிடிப்பது கிராம்பும் தான். கிராம்பு அதன் வலுவான நறுமணம் மற்றும் காரமான சுவைக்காக அறியப்படுகிறது. இது சமையலுக்காக பயன்படும் ஒரு பொருள்.

ஆனால், உணவுக்குப் பிறகு ஒன்று அல்லது இரண்டு கிராம்புகளை சாப்பிட்டால் உடலுக்கு என்ன நன்மை என்பதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். இந்தச் சிறிய கிராம்புகள் ஆரோக்கியத்தின் புதையல் என ஆயுள்வேதத்தில் கூறுகின்றனர்.

எனவே, உணவுக்குப் பிறகு ஒரு கிராம்பு சாப்பிடுவது உடலுக்கு என்ன நன்மை கொண்டு வரும் என்பதை பார்க்கலாம்.

செரிமானத்தை மேம்படுத்துகிறது சாப்பிட்ட பிறகு கிராம்பை சாப்பிடுவது உமிழ்நீர் உற்பத்தியை அதிகரிக்கிறது. கிராம்பில் உள்ள யூஜெனால் என்ற சேர்மம் செரிமான நொதிகளைச் செயல்படுத்தி, வாயு மற்றும் வயிறு உப்புசத்தைக் குறைக்கிறது. மேலும், இது உணவை வேகமாகச் செரிக்கவும், அமிலத்தன்மையிலிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது.

வாய் ஆரோக்கியத்திற்கு: கிராம்பில் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. அவை வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொன்று, வாய் துர்நாற்றத்தை நீக்கி, பல்வலி மற்றும் ஈறு வீக்கத்தைத் தடுக்க உதவுகின்றன.

இரத்தச் சர்க்கரைக் கட்டுப்பாடு: சில ஆய்வுகளின்படி, கிராம்பு இன்சுலின் செயல்திறனை அதிகரிக்க உதவக்கூடும். உணவுக்குப் பிறகு கராம்பு உட்கொள்வது, இரத்தச் சர்க்கரை அளவில் ஏற்படும் திடீர் உயர்வுகளைத் தடுக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்புச் சக்தி கிராம்பில் வைட்டமின் சி மற்றும் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்கவும் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா