Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வேக வைத்த முட்டையை ப்ரிட்ஜில் எத்தனை நாட்கள் வைக்கலாம்?
[Saturday 2026-04-18 15:00]

வேக வைத்த முட்டைகளை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்வது ஆரோக்கியமானதா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மனிதர்களுக்கு ஆரோக்கியத்தினை அள்ளித்தரும் முட்டையை நீங்கள் எவ்வாறு சாப்பிடுகின்றீர்கள் என்பதை பொறுத்தே உங்களது ஆரோக்கியம் இருக்கின்றது. புரதச்சத்து நிறைந்த முட்டையினை தினமும் சாப்பிடுவதற்கு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதிலும் குழந்தைகளுக்கு தினமும் கொடுப்பது மிக மிக முக்கியமாகும்.

முட்டையை எவ்வாறு சேமித்து வைக்க வேண்டும் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. அது போன்று முட்டை நன்றாக இருக்கின்றதா என்பதை தெரிந்து கொள்ள தண்ணீரில் பச்சைமுட்டையை போட்டு சோதனை செய்வது அவசியம்.

முட்டை தண்ணீருக்கு மேலே மிதந்து வந்தால் அவை கெட்டுப்போனதாக அர்த்தம். அதே போன்று முட்டையை ப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைக்கும் பழக்கமும் அதிகமாக இருக்கின்றது.

இந்நிலையில் முட்டையை பச்சை ஸ்டோர் செய்யும் போது சால்மோனெல்லா என்ற பாக்டீரியா பரவக்கூடும். அப்படியெனில் அவித்த முட்டையை ப்ரிஜில் வைத்தால் கெட்டுப்போகாது என்ற எண்ணம் அதிகமாக மக்களிடம் இருந்து வருகின்றது..

வேக வைத்த முட்டைகளில் சால்மோனெல்லா பாக்டீரியாக்கள் அதிகமாக குடியிருக்குமாம். இவை உடலுக்கு விஷமாக மாறிவிடுகின்றது.

வேக வைத்த முட்டையை ப்ரிஜில் சேமிக்கும் போது சரியான முறையினை பின்பற்ற வேண்டும். அதாவது குளிர்சாதனப்பெட்டியில் அவித்த முட்டையை ஓடு நீக்காமல் 40°F (4°C) அல்லது அதற்கு குறைவான வெப்பநிலையில் சேமித்து வைத்தால் 7 நாட்கள் நன்றாக இருக்குமாம்.

முட்டை ஓடுகளை நீக்கி குளிர்சாதானப்பெட்டியில் வைத்தால் இரண்டு நாட்களுக்குள் சாப்பிட்டு விடவும். ஓடு நீக்கப்பட்ட முட்டைகள் உலர்ந்து போகாமல் இருப்பதற்கு ஈரமான காகித துண்டுடன் காற்று போகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

வேக வைத்த முட்டையினை வெளியில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் வைத்திருப்பது கூடாது. வேக வைத்த முட்டை கெட்டுப்போய்விட்டதா என்பதை சில வழிமுறைகளை வைத்து கண்டறியலாம்.

முட்டையை உரிக்கும் போது பூஞ்சை, அம்மோனியா அல்லது கந்தக வாசனை ஏற்பட்டால் உடனே அகற்றிவிட வேண்டும். முட்டை ஓடு விரிசல் ஏற்பட்டாலோ, முட்டை தளர்வாக தெரிந்தாலோ அதற்குள்ளும் பாக்டீரியாக நுழைந்திருக்கும்.

முட்டையின் வெள்ளை கருவில் இளஞ்சிவப்பு, பச்சை அல்லது கருப்பு புள்ளிகள் இந்தாலும் முட்டை கெட்டுப்போய்விட்டதாக அர்த்தமாம்.

சில தருணங்களில் மஞ்சள் கரு வழக்கத்திற்கு மாறாக கருப்பாகவோ, பிசுபிசுப்பாகவே இருந்தால் உடனே அகற்றிவிடவும்.

முட்டையின் மஞ்சள் கருவைச் சுற்றி சாம்பல் அல்லது பச்சை நிறம் தென்பட்டால், அவை சாப்பிட உகந்ததாக இருக்கின்றது. செரிமானத்திற்கு, வேகவைத்த முட்டைகளுடன் உப்பு அல்லது மிளகுத்தூள் சேர்த்துப் பயன்படுத்தவும்; இது ஆற்றலைத் தக்கவைக்க உதவுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா