Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தாகம் எடுக்காமல் தண்ணீர் குடிப்பது இவ்வுளவு சிக்கலா?
[Saturday 2026-04-25 19:00]

தாகம் இல்லாமல் அடிக்கடி தண்ணீர் குடிப்பது என்னென்ன ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் மிகவும் அவசியம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த தண்ணீரே நமக்கு ஆபத்தையும் ஏற்படுத்துகின்றது. அளவு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு எந்தவொரு பொருளையும் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது பல சிக்கல்களை கொண்டு வருகின்றது.

அந்த வகையில் தண்ணீரும் அப்படித்தான். அளவுக்கு மீறி தண்ணீர் பருகினால் Over Hydration (அளவுக்கு மீறிய நீரேற்றம்) என்ற பிரச்சனை ஏற்படுகின்றது.

உடலை சுத்தப்படுத்தும் என்பதற்காக தாகம் எடுக்காத நேரத்திலும் தண்ணீரை அதிகமாக எடுத்துக் கொள்வது சிறுநீரகத்திற்கு கூடுதலான அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது.

சிறுநீரகத்தின் பணியானது ரத்தத்தில் உள்ள கழிவுகளையும், நச்சுக்களையும், அதிகப்படியான நீரையும் வடிகட்டுவதே ஆகும்.

அதிகப்படியான தண்ணீர் பருகும் போது சிறுநீரகம் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகின்றது, மேலும் சரியாக செயல்பட முடியாமல், நச்சுக்களும் உள்ளே தங்கிவிடும்.

உடல் எடைக்கு ஏற்ப தண்ணீர் பருகுவது சிறந்தது. அதாவது குழந்தைகள் இரண்டு லிட்டர் தண்ணீரும், பெரியவர்கள் உடல் எடையின் ஒவ்வொரு கிலோவிற்கும் 30 முதல் 35 மில்லி தண்ணீர் எடுக்கவும்.

40 கிலோவாக இருந்தால் ஒரு நாளைக்கு 2 லிட்டர் போதுமானதாகும். அதுவே 80 கிலோ உடல் எடை காணப்பட்டால் 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

அதுவே வெயிலில் அதிக நேரம் வேலை செய்பவர்கள், கூடுதலாக அரை லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தாகம் எடுக்காமல் தண்ணீர எடுத்துக் கொள்வது ஆபத்தாகும்.

அதிகளவு தண்ணீர் பருகுவதால், ஹைபோநெட்ரீமியா ஆபத்து ஏற்படும். அதாவது ரத்தத்தில் ரதத்தில் நீரின் அளவு அதிகரிக்கும் போது, உடம்பில் சோடியத்தின் அளவும் குறைகின்றது.

சோடியமானது செல்களுக்கு உள்ளே மற்றும் வெளியே உள்ள திரவத்தை சமநிலைப்படுத்துவதில் முக்கிய பங்கு ஆகும்.

இவை குறைவதால் செல்கள் வீக்கம் ஏற்படுவதுடன், மூளைக்கும், மற்ற உள் உறுப்புகளுக்கும் மிகவும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது.

சில தருணங்களில் உயிருக்கு ஆபத்தையும் கூட ஏற்படுத்தலாம். ஆகவே உடம்பிற்கு தேவையான தண்ணீரை மட்டும் பருகினால் ஆரோக்கியமாக இருக்கலாம்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா