Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தினமும் வேகவைத்த நெல்லிக்காயைச் சாப்பிட்டால் என்ன நன்மை?
[Thursday 2026-04-30 16:00]

நெல்லிக்காயில் அதிக சத்து இருக்கிறது. அந்த வகையில் தினமும் அவித்த ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் உடலுக்கு என்ன நன்மை என்பதை பதிவில் பார்க்கலாம். நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு அமிர்தமாக விளங்குகிறது. பண்டைய காலத்தில் இந்த நெல்லிக்காயின் ஆரோக்கிய நன்மைக்கு ஒரு புராணக்கதையே உள்ளது. அதியமான் மன்னன் ஔவையார் நூறு வருடங்கள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக ஒரு நெல்லிகாய் வழங்கிய கதை எல்லாம் இருக்கிறது.

அந்த வகையில் தினமும் ஒரு நெல்லிக்காயை வேகவைத்துச் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். வேகவைப்பதால் அதன் துவர்ப்புத்தன்மை குறைந்து, எளிதில் செரிமானம் ஆகிறது.

நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதை தினமும் சாப்பிடுவது சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளைக் குறைக்க உதவும்.

வேகவைத்த நெல்லிக்காய் வயிற்றுக்கு இலேசானது மற்றும் வாயு, மலச்சிக்கலை போக்க உதவுகிறது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்த உதவும்.

தினமும் வேகவைத்த நெல்லிக்காயை சாப்பிடுவது சருமத்தை பாதுகாக்கும். அதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களால் சருமத்தைப் பொலிவாக்கவும் கூந்தலை வலுப்படுத்தவும் உதவுகிறது. இது முடி உதிர்வையும் குறைக்கக்கூடும்.

நெல்லிக்காய் கொலஸ்ட்ரால் அளவைச் சமநிலைப்படுத்த உதவும் ஒரு முக்கியமான பொருள். இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திப்பது மட்டுமல்லாமல் இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கும் இது நன்மை தரும் எனப்படுகின்றது.

வேகவைத்த நெல்லிக்காய் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும். இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

நெல்லிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி ஆகியவை கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி, அதை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா