Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மத்தி மீனை உணவில் கட்டாயம் எடுத்துக்கோங்க!
[Thursday 2026-05-07 16:00]

கடல் உணவுகளில் முக்கியமாக இருக்கும் மீன் உணவுகளில் மத்தி மீனின் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். மீன்களில் பலவகைகள் உள்ள நிலையில், கடல்வகை உணவுகள் அனைத்தும் உடம்பிற்கு அதிக ஆரோக்கியத்தினை அளிக்கின்றது. அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் அதிகம் இருக்கும் மீனை பல வகைகளில் சமைத்து சாப்பிடுகின்றோம். குழம்பு, வறுவல், சைனிஸ் வகைகள் என செய்து சாப்பிடும் நமக்கு எந்தெந்த மீன்களில் எவ்வளவு சத்து உள்ளது என்பது அவ்வளவாக தெரிவதில்லை.

இந்த பதிவில் மத்தி மீனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மையினைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மத்தி மீனில் வைட்டமின் டி, கால்சியம், பாஸ்பரஸ் அதிகமாக இருப்பதால் எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகின்றது. எலும்புகளின் ஆரோக்கியத்தினை மேம்படுத்த நினைப்பவர்கள் இதனை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

இதில் வைட்டமின் பி12 நரம்புகளின் செயல்பாட்டை மேம்படுவதுடன், நரம்பு தொடர்பான பிரச்சனைகளையும் தீர்க்கின்றது.

மத்தி மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றது. இதனால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

இந்த மீனில் உள்ள புரோட்டீன் தசைகளின் வலிமைக்கு உதவி செய்வதுடன், எனவே ஜிம் செல்பவர்கள் மத்தி மீன்கள் தங்களது உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

இரும்புச்சத்து மற்றும் செலினியம் அதிகம் கொண்ட மத்தி மீனை சாப்பிடுவதால் நோயெதிர்ப்பு சக்தியினை மேம்படுத்துவதுடன், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் செய்கின்றது. ஆதலால் குழந்தைகள் பெரியவர்கள் இதனை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா