Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ரோட்டு கடை Egg Rice செய்வது எப்படி?
[Tuesday 2026-05-19 16:00]

ரோட்டு கடை ஸ்டைலில் சுவையான Egg Rice எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் சிறியவர்கள் கடைகளில் வாங்கும் உணவினை தான் அதிகமாக விரும்புகின்றனர். அதிலும் ஃபாஸ்ட் புட் வகைகள் அதிகமாகவே சாப்பிடுகின்றனர். ரோட்டு கடைகளில் விற்கப்படும் முட்டை ரைஸ்க்கு அதிக வரவேற்பு கிடைக்கின்றது. இதனை வீட்டில் செய்து சாப்பிடவும் பலரும் விரும்புகின்றனர். ஆனால் ரோட்டு கடையில் கிடைக்கும் ருசி வீட்டு சமையலில் கிடைப்பதில்லை. இவை உடம்பிற்கு கெடுதல் ஏற்படுத்தும் என்றாலும் அதன் சுவை நமது நாவை கட்டிப் போட்டு வைத்துள்ளது.

தற்போது ரோட்டு கடை ஸ்டைலில் முட்டை ரைஸ் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

சாதம் வேக வைக்க

அரிசி - 1 கப்

தேவையான அளவு - தண்ணீர்

உப்பு - அரை ஸ்பூன்

எண்ணெய் - 1 ஸ்பூன்

முட்டையை சமைக்க

முட்டை - 5

மிளகுத்தூள் - 2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

Egg Rice செய்வதற்கு

நெய் - 1 ஸ்பூன்

எண்ணெய் - 1 ஸ்பூன்

நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்

இஞ்சி-பூண்டு விழுது - 1 1/2 ஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்

காஷ்மீரி மிளகாய்த்தூள்

1 ஸ்பூன் - மஞ்சள்தூள்

1/2 ஸ்பூன் - கரம் மசாலா தூள்

1 ஸ்பூன் - சோயா சாஸ்

1 ஸ்பூன் - உப்பு

தேவையான அளவு - சிறிது நறுக்கிய கொத்தமல்லி

மிளகுத்தூள் -2 ஸ்பூன்

செய்முறை

அரிசியை கழுவி ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும். மற்றொரு புறம் பவுலில் ஒன்றில் முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.

ஊற வைத்த அரிசியிலிருந்து வடிகட்டிய தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் சிறிதளவு உப்பு மற்றும் வெண்ணெய் சேர்த்து சாதம் வெந்ததும் வடித்துவிடவும்.

மற்றொரு கடாய் ஒன்றில் எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, இதனுடன் இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வாசனை வரும்வரை வதக்கவும்.

இதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கி, சிறிதளது தண்ணீர், சோயா சாஸ் சேர்த்து, கலந்து வைத்துள்ள முட்டையையும் சேர்க்கவும்.

கடைசியாக வடித்த சாதத்தினை சேர்த்து கலந்து சிறிது கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் ரோட்டு கடை Egg Rice தயார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா