Untitled Document
October 24, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்குமா?
[Friday 2026-05-29 17:00]

முட்டை சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது, ஆனால் அதன் மஞ்சள் கருவைச் சாப்பிடுவது உண்மையிலேயே உடல் எடை அதிகரிக்குமா என்பதை பதிவில் நிபுணர் விளக்த்தோடு தெரிந்து கொள்ளலாம். முட்டை புரதத்தின் சிறந்த ஆதாரமாகக் கருதப்படுகின்றன. ஆனால் முட்டையின் மஞ்சள் கருவில் அதிக கெட்ட கொழுப்பு இருப்பதாகவும் அதனை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிப்பதாகவும் மக்கள் கருதுகின்றனர்.

இதன் காரணமாக பலர், உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில், முட்டையை சாப்பிடும் போது வெள்ளைக் கருவைச் சாப்பிட்டுவிட்டு மஞ்சள் கருவை சாப்பிட மாட்டார்கள்.

அந்த வகையில் PSRI மருத்துவமனையின் உணவியல் துறைத் தலைவர் டாக்டர் ஷாலினி பிளிஸ் இதை பற்றி விளக்கி உள்ளார்.

அவரின் கூற்றுப்படி முட்டையின் மஞ்சள் கருவில் ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் ஏ, டி, ஈ, கே, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் கோலின் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

முட்டையின் வெள்ளைக் கருவை விட இதில் கலோரிகள் அதிகம், எனவே இதை அதிகமாக உட்கொள்வதும், குறைந்த உடல் செயல்பாடும் உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

இதை முறையாக குறைவான அளவில் சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்காது.

ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, உடல் எடை அதிகரிப்பு என்பது ஒரே ஒரு உணவால் ஏற்படுவதில்லை, மாறாக ஒட்டுமொத்த உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் கலோரி சமநிலையால் ஏற்படுகிறது.

நீங்கள் சமச்சீரான உணவை உட்கொண்டு, தவறாமல் உடற்பயிற்சி செய்து, உங்கள் உடலுக்குத் தேவையான கலோரிகளைப் பெற்றால், ஒன்று அல்லது இரண்டு முட்டையின் மஞ்சள் கருக்களைச் சாப்பிடுவது பொதுவாக உடல் எடையை அதிகரிக்காது.

ஆனால் அதிக கொலஸ்ட்ரால், இதய நோய் அல்லது சில உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் மருத்துவர்களை ஆலோசித்த பின்னர் முட்டை சாப்பிடுவது சிறந்தது.

ஆரோக்கியமான ஒருவருக்கு, முழு முட்டைகளை மிதமான அளவில் சாப்பிடுவது ஆரோக்கியமான உணவுமுறையின் ஒரு பகுதியாக அமையலாம்.

எனவே, முட்டையின் மஞ்சள் கருவைச் சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடும் என்ற பயத்தின் காரணமாக, அதை முற்றிலுமாகத் தவிர்க்காமல் மருத்துவ ஆரோசனை உடற்பயிற்ச்சி சீரான உணவு முறையுடன் உடுத்துக்கொள்வது அவசியம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா