Untitled Document
October 24, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்பை கரைக்க வேண்டுமா?
[Monday 2026-06-08 16:00]

தினமும் சியா விதைகளை சாப்பிட்டு வந்தால் உடம்பில் நடைபெறும் நன்மையினைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் உணவுமுறை என்பது பலருக்கும் வித்தியாசமாக மாறியுள்ளது. அதாவது எண்ணெய்யில் பொரித்த உணவுகள், ஜங்க் புட், ஃபாஸ்ட் புட் உணவுகள் இவற்றினை தான் விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் இவை ரத்த நாளங்களில் கொழுப்பை படிய வைத்து இதயத்திற்கு செல்லும் ரத்தத்தினை தடைசெய்கின்றது.

இறுதியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரே போகும் நிலையும் ஏற்படுகின்றது. அந்த வகையில் ரத்த நாளங்களில் படியும் கொழுப்பினை குறைக்கும் சியா விதையினைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் சியா விதையில் சத்துக்கள் ஏராளமாக இருக்கின்றது. முக்கியமாக ஒமேகா 3 கொழுப்பு அமிலம், நார்ச்சத்து, கால்சியம், புரோட்டீன், ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகமாகவே இருக்கின்றது. இவை ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்பினை கரைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்கின்றது.

சியா விதையினை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவது சிறந்ததாகும். ஒரு ஸ்பூன் சியா விதையினை ஒரு டம்ளர் தண்ணீரில் 30 நிமிடம் ஊறவைக்கவும். அவ்வாறு இல்லையெனில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீரோடு விதையையும் சேர்த்து குடிக்கவும்.

இவை மெட்டாபாலிசத்தை அதிகப்படுத்துவதுடன், ரத்த குழாயையும் சுத்தம் செய்கின்றது. தண்ணீரில் கலந்து குடிப்பதற்கு பிடிக்கவில்லை எனில் அன்றாட உணவில் கூட சேர்த்துக் கொள்ளலாம்.

அதாவது நாம் பருகும் பழச்சாறு அல்லது ஸ்மூத்தியில் ஊற வைத்த சியா விதையினை சேர்த்து குடிக்கலாம். இவை வயிறு நிறைந்த உணர்வை அளிக்கின்றது.

காய்கறி மற்றும் பழ சாலட் இவற்றின் மேலே விதைகளை தூவி சாப்பிடலாம்.

காலை நேரத்தில் ஓட்ஸ் அல்லது ராகி கஞ்சியுடன் கலந்து குடிப்பதால் சத்துக்கள் இரட்டிப்பாக கிடைக்குமாம்.

பாலுடன் சியா விதை, கொஞ்சம் தேன் கலந்து புட்டிங் போன்று செய்து சாப்பிட்டாலும் நல்ல பலனை பெற முடியும்.

சியா விதைகள் எடையை குறைப்பதுடன், செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை நீக்குகின்றது. அதுமட்டுமின்றி ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைப்பதற்கும் எலும்புகளை உறுதியாக்கவும் செய்கின்றது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா