Untitled Document
October 24, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அத்திக்காய் ஊறுகாய்!
[Saturday 2026-07-11 16:00]

அத்திப்பழம் சாப்பிட்டிருப்பவர்கள் அத்திக்காயில் ஊறுகாய் செய்து பலரும் சாப்பிட்டிருக்க மாட்டார்கள். தற்போது அத்திக்காய் ஊறுகாய் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

அத்திக்காய்- 1/4 கிலோ

காய்ந்த மிளகாய்-50 கிராம்

மிளகு, தனியா, மஞ்சள்- தலா 5 கிராம்

ஓமம், பெருங்காயம்- தலா 5 கிராம்

உப்பு - 20 கிராம்

செய்முறை

அத்திக்காய் தவிர அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக லேசாக வறுத்து அரைத்துக் கொள்ளவும். பின்னர் அத்திக்காயை காம்பு நீக்கி இரண்டாக அரிந்து ஒரு பாத்திரத்தில் போட்டு, அரைத்து வைத்துள்ள விழுதையும் அதோடு சேர்த்து நன்றாக கலக்கவும்.

அதை ஓர் உலர்ந்த பாத்திரத்தில் இட்டு, அதன் வாயில் துணியைக் கட்டி ஒரு வாரம் வரை வெயிலில் வைத்திருந்து பின்னர் உபயோகிக்கவும்

இந்த ஊறுகாயை உண்டு வர, நன்கு செரிமானம் ஏற்படும். பித்தம் தணியும். இதய நோயாளிகளுக்கு ஏற்றது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா