Untitled Document
October 24, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நரைமுடி பிரச்சினைக்கு இயற்கை தீர்வு!
[Thursday 2026-08-13 16:00]

இன்றைய காலகட்டத்தில் தலைமுடி தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, முறையற்ற உணவுப்பழக்கம், ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம், போதிய தூக்கமின்மை, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் தலைமுடியைப் பராமரிப்பதில் நாம் செய்யும் சில தவறுகள் போன்ற பல காரணிகள் தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடும்.

அவற்றில் முக்கியமான ஒன்றாக இளவயதிலேயே தலைமுடி நரைப்பது காணப்படுகிறது. ஒரு சிலருக்கு மரபியல் காரணங்களாலும் இளம் வயதிலேயே நரைமுடி தோன்றலாம். இதனால் நரைமுடியை மறைப்பதற்காக பலரும் சந்தைகளில் கிடைக்கும் பல்வேறு வகையான ஹேர் கலர் மற்றும் டை போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.

நரைமுடியை மறைப்பதற்கு ஹேர் கலர் பயன்படுத்துவது உடனடி அழகியல் மாற்றத்தைத் தரக்கூடியது. ஆனால், சில முடி வண்ணப் பொருட்களில் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் எரிச்சல், வறட்சி அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய இரசாயனப் பொருட்களால் கூந்தலும் வலுவாக பாதிப்படைகின்றது.

அதே நேரத்தில், நரைமுடியை மறைப்பதற்காக இரசாயனப் பொருட்களை மட்டுமே நம்பாமல், தலைமுடியின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இயற்கையான பராமரிப்பு முறைகளையும் முயற்சி செய்யலாம். அந்த வகையில், நம் வீடுகளில் எளிதாகக் கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டு தலைமுடிக்கு ஊட்டமளிக்கும் பாரம்பரிய முறைகள் குறித்து இந்த காணொளி வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம்.

1. நெல்லிக்காய்

நெல்லிக்காய் பாரம்பரியமாக தலைமுடி பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு முக்கியமான இயற்கைப் பொருளாகும். இதில் வைட்டமின் C மற்றும் பல்வேறு தாவரச் சேர்மங்கள் உள்ளன. நெல்லிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதுடன், நெல்லிக்காய் அடிப்படையிலான தலைமுடி பராமரிப்புப் பொருட்களையும் பயன்படுத்தலாம். இது இளநரைக்கு இயற்கை முறையில் தீர்வு கொடுக்கும்.

2. கறிவேப்பிலை

கறிவேப்பிலை நமது சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருள் மட்டுமல்லாமல், பாரம்பரிய தலைமுடி பராமரிப்பிலும் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாவரச் சேர்மங்கள் காணப்படுகின்றன. கறிவேப்பிலையை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொள்வதும், தலைமுடி பராமரிப்பில் பொருத்தமான முறையில் பயன்படுத்துவதும் தலைமுடியின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

3. தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் தலைமுடி பராமரிப்பில் பரவலாகப் பயன்படுத்தப்படும் இயற்கை எண்ணெய்களில் ஒன்றாகும். இது தலைமுடியின் வறட்சியைக் குறைத்து, முடி நார்களுக்கு ஈரப்பதத்தை வழங்க உதவக்கூடும். மேலும் இளநரைக்கு இயற்கை முறையில் தீர்வு கொடுக்கும் என்றும் ஆயுர்வேத மருத்துவ குறிப்புகள் காணப்படுகின்றது. இவற்றுடன் முறையான மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சையும் எடுத்துக்கொள்வதால், இளநரை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெறலாம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா