Untitled Document
October 24, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
14 நாட்கள் தொடர்ந்து முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
[Friday 2026-09-11 16:00]

மலிவு விலையில் எளிதாகக் கிடைக்கும் சத்தான உணவுகளில் முட்டைக்கு எப்போதுமே முக்கிய இடம் உண்டு. புரதத்தின் சிறந்த மூலமாக விளங்கும் முட்டை, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது. உடலுக்குத் தேவையான பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் முட்டையில் நிறைந்துள்ளதால், இது ஒரு முழுமையான உணவாகவும் கருதப்படுகிறது. ஒரு முட்டையை உட்கொள்வதன் மூலம் சுமார் 75–76 கலோரிகள், 6–7 கிராம் புரதம், 5 கிராம் கொழுப்பு மற்றும் 1.6 கிராம் நிறைவுற்ற கொழுப்பு கிடைக்கிறது.

முட்டையில் உள்ள இந்த ஊட்டச்சத்துக்கள் தசைகளின் வளர்ச்சிக்கு உதவுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பேணவும், புதிய செல்கள் மற்றும் திசுக்களின் உருவாக்கத்திற்கும் பங்களிக்கின்றன.

இத்தனை நன்மைகளைக் கொண்ட முட்டையை அவ்வப்போது சாப்பிடுவதைவிட, தினமும் ஒன்று என்ற அடிப்படையில் தொடர்ந்து 14 நாட்கள் சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது குறித்து எய்ம்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்ஃபோர்டில் பயிற்சி பெற்ற, 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இரைப்பைக் குடலியல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளபடி, தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

மூளைக்கு நல்லது: முட்டையில் உள்ள கோலைன், நினைவாற்றல் மற்றும் கவனத்தை மேம்படுத்த உதவுகிறது.

கொலஸ்ட்ரால்: முட்டை நல்ல கொலஸ்ட்ரால் (HDL) அளவை மேம்படுத்த உதவுவதுடன், சமச்சீரான உணவின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளும்போது இதய ஆரோக்கியத்திற்கும் துணைப்புரியும் என டாக்டர் சௌரப் சேத்தி குறிப்பிடுகின்றார்.

கண்களுக்கு நல்லது: மஞ்சள் கருவில் உள்ள லுடீன் மற்றும் ஸீக்ஸாந்தின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகின்றன.

முடி, சருமம், நகங்களுக்கு: முட்டையில் உள்ள புரதம் மற்றும் சல்பர் சார்ந்த அமினோ அமிலங்கள் கெராட்டின் உற்பத்திக்கு உதவுகின்றன.

முக்கிய ஊட்டச்சத்துக்கள்: முட்டையில் உயர்தர புரதம், கோலைன், இரும்பு, அயோடின், ஒமேகா-3, வைட்டமின்கள் A, D, E, B12 உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.

பசியைக் கட்டுப்படுத்தும்: காலை உணவில் முட்டையை சேர்த்துக்கொள்வது நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தர உதவும்.

முட்டை சாப்பிடாதவர்கள் டோஃபு, டெம்பே, எடமாமே போன்ற சோயா உணவுகளை தாவர அடிப்படையிலான புரதத்தின் நல்ல ஆதாரங்களாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா