Untitled Document
October 24, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பச்சை திராட்சை மற்றும் கருப்பு திராட்சை: எது உடல்நலத்திற்கு சிறந்தது?
[Monday 2026-09-28 16:00]

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் திராட்சையும் ஒன்று. பச்சை மற்றும் கருப்பு திராட்சைகள் இரண்டுமே உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்களைக் கொண்டுள்ளன. ஆனால் இவற்றில் எது அதிக இனிப்பு, எது ஆரோக்கியமானது என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. பச்சை மற்றும் கருப்பு திராட்சைகளில் இயற்கையான சர்க்கரை உள்ளது. இருப்பினும், கருப்பு திராட்சையில் சர்க்கரை அளவு சற்று அதிகமாக இருப்பதால், அவை அதிக இனிப்புச் சுவையுடன் இருக்கும்.

பச்சை திராட்சை இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவையைக் கொண்டிருக்கும். கருப்பு திராட்சையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ரெஸ்வெராட்ரோல் போன்ற சேர்மங்கள் உள்ளன. இவை இதய ஆரோக்கியத்திற்கு உதவக்கூடும்.

மேலும், இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கவும், உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கவும் கருப்பு திராட்சை உதவும். பச்சை திராட்சையில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே போன்ற சத்துக்கள் உள்ளன.

இவை நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. அதிக நீர்ச்சத்து இருப்பதால், உடலுக்கு நீர்ச்சத்தையும் வழங்குகிறது.

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் பச்சை திராட்சையை அளவோடு உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் உள்ள நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து வயிறு நிறைந்த உணர்வைத் தர உதவும்.

பச்சை மற்றும் கருப்பு திராட்சைகள் இரண்டுமே சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடும்.

கருப்பு திராட்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தைப் பாதுகாக்க உதவுகின்றன. மேலும், பச்சை திராட்சையில் உள்ள நீர்ச்சத்து சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.

பச்சை திராட்சை எளிதில் செரிமானமாகும் தன்மை கொண்டது. செரிமானம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் பச்சை திராட்சையை எடுத்துக்கொள்ளலாம்.

ஒட்டுமொத்தமாக, பச்சை மற்றும் கருப்பு திராட்சைகள் இரண்டுமே பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா