Untitled Document
October 24, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வீட்டிலேயே சுத்தமான தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?
[Tuesday 2026-10-13 16:00]

தேங்காய் எண்ணெய் என்பது நம் அன்றாட வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒரு இயற்கையான பொருள். தலைமுடியைப் பராமரிக்கவும், சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும், சமையலுக்குப் பயன்படுத்தவும் என இது தொன்று தொட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றது. நம் பாட்டி, அம்மா காலத்திலிருந்தே வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரித்துப் பயன்படுத்தும் பழக்கம் இருந்து வருகிறது. ஆனால் தற்காலத்தில், கடைகளில் கிடைக்கும் தேங்காய் எண்ணெயின் தரம், தயாரிப்பு முறை ஆகியவற்றில் சற்று ஐயம் இருக்கத்தான் செய்கின்றது. அதிக விலை கொடுத்து வாங்கினாலும், இந்த தேங்காய் எண்ணெய் சுகாதாரமான முறையில் தயாரி்கப்படுகின்றதா என்பதும் கவப்படம் அற்றதா என்பதும் சந்தேகம் தான்.

இன்றைய நவீன வாழ்க்கையிலும் அந்தப் பாட்டி காலத்து பாரம்பரிய முறையில் வீட்டிலேயே ஆரோக்கியமாக முறையில் தேங்காய் எண்ணெய் செய்து பயன்படுத்தலாம். இதற்காக அதிகப் பணமோ, விலையுயர்ந்த கருவிகளோ தேவையில்லை.

சில தேங்காய்கள், சிறிதளவு தண்ணீர், ஒரு பாத்திரம், அடுப்பு ஆகியவை இருந்தாலே போதும்.சரியான முறையைப் பின்பற்றினால், நீங்களும் உங்கள் வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிக்கலாம். அப்படி சுத்தமான தேங்காய் எண்ணெய்யை வீட்லேயே எளிய முறையில் எவ்வாறு தயாரிக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

நன்கு முற்றிய தேங்காய்கள் – 1 அல்லது 2

வெதுவெதுப்பான அல்லது சூடான தண்ணீர் – தேவையான அளவு

தேங்காய்ப் பால் பிழிவதற்கான பாத்திரம்

எண்ணெயைக் காய்ச்சுவதற்கான தடிமனான பாத்திரம்

சுத்தமான வடிகட்டி அல்லது மெல்லிய துணி

உலர்ந்த, சுத்தமான கண்ணாடிப் பாட்டில்

தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் எளிய முறை

படி 1: தேங்காயைத் துருவிக்கொள்ளுங்கள் முதலில் ஒன்று அல்லது இரண்டு நன்கு முற்றிய தேங்காய்களை உடைத்து, அதன் பருப்பைத் தனியாக எடுத்து நன்றாகத் துருவிக்கொள்ளுங்கள். தேங்காயை எவ்வளவு நன்றாகத் துருவுகிறீர்களோ, அவ்வளவு எளிதாகப் பால் பிழிந்தெடுக்க முடியும்.

படி 2: தேங்காய்ப் பாலைப் பிழிந்தெடுங்கள் துருவிய தேங்காயுடன் சிறிதளவு வெதுவெதுப்பான தண்ணீரைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து பிழியுங்கள். இப்போது கிடைக்கும் பாலை ஒரு பாத்திரத்தில் வடிகட்டிச் சேகரிக்கவும். பின்னர், அதே தேங்காய்த் துருவலுடன் மீண்டும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிழியுங்கள். இதன் மூலம் மேலும் பால் கிடைக்கும். இரண்டு முறைகளிலும் கிடைத்த பாலையும் ஒன்றாகச் சேர்த்துக்கொள்ளுங்கள்.

படி 3: தேங்காய்ப் பாலைச் சூடாக்குங்கள் சேகரித்த தேங்காய்ப் பாலை ஒரு தடிமனான பாத்திரத்தில் ஊற்றி, மிதமான அல்லது குறைந்த தீயில் சூடாக்கத் தொடங்குங்கள். பால் அடிப்பிடிக்காமல் இருக்க அவ்வப்போது நன்றாகக் கிளறிவிடுங்கள். சூடாகும்போது தேங்காய்ப் பாலில் உள்ள நீர்ச்சத்து படிப்படியாக ஆவியாகும். பால் கெட்டியாகி, அதன் திடப்பகுதிகள் தனியாகப் பிரியத் தொடங்கும். தொடர்ந்து சூடாக்கும்போது எண்ணெய் மெதுவாகப் பிரிந்து வருவதைக் காணலாம்.

படி 4: எண்ணெயைப் பிரித்தெடுங்கள் தேங்காய்ப் பாலிலிருந்து எண்ணெய் பிரிந்ததும், தீயை மிகவும் குறைத்து கவனமாகச் சூடாக்குங்கள். மீதமுள்ள திடப்பகுதிகள் அதிகமாகக் கருகிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். எண்ணெய் பிரிந்த பிறகு பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடுங்கள். பின்னர், சுத்தமான வடிகட்டி அல்லது மெல்லிய துணியின் மூலம் எண்ணெயை வடிகட்டி, திடப்பகுதிகளை நீக்குங்கள்.

படி 5: எண்ணெயைப் பாதுகாப்பாகச் சேமியுங்கள் வடிகட்டிய எண்ணெயை முற்றிலும் உலர்ந்த, சுத்தமான கண்ணாடிப் பாட்டிலில் ஊற்றி மூடி வைக்கவும். எண்ணெயில் தண்ணீரோ ஈரப்பதமோ கலக்காமல் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம்.

எண்ணெயின் நிறம், மணம் அல்லது தோற்றத்தில் வழக்கத்திற்கு மாறான மாற்றங்கள் ஏற்பட்டால் அதைப் பயன்படுத்த வேண்டாம்.

வீட்டில் தயாரிக்கும் எண்ணெய் எத்தனை காலம் கெடாமல் இருக்கும் என்பது அதன் தயாரிப்பு முறை, மீதமுள்ள ஈரப்பதம் மற்றும் சேமிப்பு நிலை ஆகியவற்றைப் பொறுத்தது. எனவே, எல்லா எண்ணெயும் பல மாதங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்று கருத வேண்டாம்.

தலைமுடிப் பராமரிப்புக்கு: தேங்காய் எண்ணெய் தலைமுடியை மென்மையாக்கவும், முடியின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கவும் உதவும். மேலும் முடி உடைந்து சேதமடைவதைக் குறைக்கவும் துணைப்புரியும்.

சருமப் பராமரிப்புக்கு: சருமத்தில் தடவும்போது ஈரப்பதத்தைத் தக்கவைத்து, சருமத்தை மென்மையாக மாற்றும். இருப்பினும், எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு இது சருமத் துளைகளை அடைத்து முகப்பருவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் சருமத்துக்கு ஏற்றதா என்பதை முதலில் சிறிய பகுதியில் பரிசோதித்துப் பார்து பின்னர் பயன்படுத்த ஆரம்பியுங்கள்.

சமையலுக்கு: தேங்காய் எண்ணெய் உணவுகளுக்கு தனித்துவமான மணத்தையும் சுவையையும் வழங்குகிறது. சமையலுக்குப் பயன்படுத்தும்போது உணவுக்குப் பொருத்தமான முறையில் தயாரிக்கப்பட்ட, சுத்தமான எண்ணெயைப் பயன்படுத்துவது அவசியம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா