Untitled Document
October 24, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மழைகாலத்தில் கமகமக்கும் நண்டு மசாலா: செட்டிநாடு சுவையில் எப்படி செய்வது?
[Friday 2026-10-23 16:00]

மழைக்காலத்திற்கு ஏற்ப நண்டு மசாலா செட்டிநாடு ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக மழைக்காலம் வந்துவிட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல் இவற்றினால் அவதிப்படுவார்கள். இவ்வாறு சளி மற்றும் இருமலுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும் உணவாக நண்டு இருக்கின்றது. நண்டு சூப் மட்டுமின்றி நண்டு மசாலாவும் மழைக்காலத்திற்கு ஏற்ற உணவாக இருக்கின்றது. செட்டிநாடு ஸ்டைலில் நண்டு மசாலா எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

வறுத்து அரைப்பதற்கு

சீரகம் - 1 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

வரமல்லி - 2 டீஸ்பூன்

கசகசா - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 1 டீஸ்பூன்

வரமிளகாய் - 4

துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்

வதக்குவதற்கு

எண்ணெய் - 1 டீஸ்பூன்

பூண்டு - 10-12 பல்

இஞ்சி - 1 1/2 இன்ச்

சின்ன வெங்காயம் - 150 கிராம்

தக்காளி - 2 (நறுக்கியது)

தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு

நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

பட்டை - 1 துண்டு

கிராம்பு - 2

ஏலக்காய் - 2

கல்பாசி - 1 துண்டு

சோம்பு - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து

சின்ன வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2 (இரு துண்டுகளாக்கப்பட்டது)

காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

அரைத்த மசாலா

தண்ணீர் - தேவையான அளவு

உப்பு - சுவைக்கேற்ப

நண்டு - 600 கிராம்

கொத்தமல்லி - சிறிது

செய்முறை

கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து வறுப்பதற்கு கொடுத்த பொருட்களை சேர்த்து நன்றாக வறுத்து, ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் சேர்த்து அதில் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி இவற்றினை சேர்த்து வதக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

மறுபடியும் வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

இதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், காஷ்மீர் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

இதனுடன் கழுவி வைத்த நண்டை சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும். கடைசியாக கொத்தமல்லி இலை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் நண்டு மசாலா தயார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா