Untitled Document
October 24, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மீந்து போன சாதத்தில் சப்பாத்தி செய்யலாமா?
[Saturday 2026-10-24 15:00]

வீட்டில் மீதமான சாதத்தில் அசத்தலான சப்பாத்தி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக வீட்டில் சாதம் மீதமாகிவிட்டால் அதில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு பழைய சாதமாக மாற்றி சாப்பிடும் வழக்கம் நம்மில் பலரிடம் இருந்து வருகின்றது. அவ்வாறு இல்லையெனில் மீதமான சாதத்துடன் சில பொருட்களை சேர்த்து மிக்ஸியில் அரைத்து அதனை வடகமாகவும் செய்வார்கள்.

ஆனால் மீதமாக சாதத்தில் சப்பாத்தி செய்தும் சாப்பிடலாம். அவ்வாறு சப்பாத்தி செய்வது எவ்வாறு என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

மீந்து போன சாதம் - 1 கப்

கோதுமை மாவு - 1/4 கப் + 1/4 கப்

மைதா மாவு - 1/4 கப்

உப்பு - சுவைக்கேற்ப

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

முதலில் மீதமான சாதத்தினை மிக்ஸியில் சேர்த்து மென்மையாக அரைக்கவும். இதனுடன் கோதுமை மற்றும் மைதா, உப்பு சேர்க்கவும்.

பின்பு மற்றொரு பாத்திரத்தில் அரைத்து வைத்த மாவுடன், மற்றொரு கால் கப் கோதுமை மாவு சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.

இவ்வாறு பிசையும் போது சற்று பிசுபிசுவென என்று இருக்கும். அப்பொழுது கையில் சிறிது எண்ணெய் ஊற்றி கொண்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.

பின்பு சிறிது நேரம் ஊற வைத்து மாவை சப்பாத்தி உருண்டையாக எடுத்து, சப்பாத்தியாக தேய்த்து தோசைக்கல்லில் போட்டு எடுத்தால் சுவையான சப்பாத்தி தயார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா