Untitled Document
November 3, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஹோட்டல் சுவையில் சின்ன வெங்காய சட்னி வேண்டுமா?
[Thursday 2026-10-29 16:00]

இட்லி, தோசை, ஊத்தப்பம் போன்ற தென்னிந்திய உணவுகளுக்கு ஹோட்டலில் பரிமாறப்படும் சுவையான சின்ன வெங்காய சட்னியின் சுவை பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும். அதே சுவையில் வீட்டிலேயே எளிதாகத் சின்னவெங்காய சட்னி தயாரிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? சின்ன வெங்காயத்தின் இயற்கையான இனிப்புச் சுவையுடன், வரமிளகாயின் காரமும், புளியின் புளிப்பும் கலந்து இந்தச் சட்னிக்கு தனித்துவமான சுவையை கொடுக்கின்றது.

மேலும், சரியான முறையில் வதக்கி அரைத்தால், ஹோட்டல்களில் கிடைக்கும் அதே சுவையையும் மணத்தையும் வீட்டிலேயே பெறலாம்.

அனைவரும் விரும்பிச் சாப்பிடும் ஹோட்டல் ஸ்டைல் சின்ன வெங்காய சட்னியை வீட்டிலேயே எப்படித் தயாரிப்பது, அதற்குத் தேவையான பொருட்கள் என்னென்ன, சட்னி சுவையாகவும் மணமாகவும் வருவதற்கு என்னென்ன குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும் என்பது குறி்த்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் – 250 கிராம்.

துருவிய தேங்காய் – ½ கப்

வரமிளகாய் – 12

பூண்டு – 10 பல்

கறிவேப்பிலை – 2 கொத்து

தக்காளி – 1 (நறுக்கியது)

புளி – சிறிய எலுமிச்சை அளவு

உப்பு – தேவையான அளவு

காஷ்மீரி மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்

எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்

தாளிக்கத் தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 டேபிள்ஸ்

பூன் கடுகு – 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

வரமிளகாய் – 2

கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்ழத அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அடுத்து சின்ன வெங்காயத்தைச் சேர்த்து, அது நன்கு வதங்கும் வரை வதக்கவும். பின்னர் கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.

இப்போது புளி மற்றும் காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி வதக்கவும். தொடர்ந்து துருவிய தேங்காய், தேவையான அளவு உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி அடுப்பை அணைக்கவும்.

கலவையை நன்றாக ஆறவிடவும். ஆறிய கலவையை மிக்ஸி ஜாரில் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு சட்னியாக அரைத்துக் கொள்ளவும்.

இப்போது தாளிப்பதற்காக ஒரு சிறிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு சேர்த்துப் பொரிந்ததும் உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்க வேண்டும்.

அதனையடுத்து இந்தத் தாளிப்பை அரைத்து வைத்துள்ள சட்னியில் சேர்த்துக் கலந்து விட்டால் , அவ்வளவுதான் சுவையான ஹோட்டல் ஸ்டைல் சின்ன வெங்காய சட்னி தயார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா