Untitled Document
November 3, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
செட்டிநாடு ஸ்டைலில் வெங்காய ரசம்!
[Friday 2026-10-30 16:00]

ரசம் விரும்பி சாப்பிடுபவர்களுகள் செட்டிநாடு ஸ்டைலில் வெங்காய ரசம் எவ்வாறு செய்து சாப்பிடலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக வீடுகளில் சமையல் என்றால் அங்கு ரசமும் கட்டாயமாகவே இருக்கும். ஆனால் சிலருக்கு ரசம் என்பது பிடிக்காத உணவாகவும் இருக்கின்றது. ஆனால் ரசம் உடலில் பல நோய்களுக்கு தீர்வாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதில் ரசம் முக்கியமானதாக இருக்கின்றது. எப்பொழுதும் மிளகு, சீரகம், பூண்டு, தக்காளி இவற்றினை சேர்த்து ரசம் வைக்கும் நிலையில், தற்போது வெங்காய ரசம் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

இடிப்பதற்கு

மிளகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லி - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

பச்சை மிளகாய் - 1

கொதிக்க வைப்பதற்கு

பழுத்த தக்காளி - 3

உப்பு - சுவைக்கேற்ப

கொத்தமல்லி - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

புளி - பெரிய நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து வடிகட்டிய சாறு)

தண்ணீர் - 5 கப்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

துவரம் பருப்பு - 1 கையளவு (வேக வைத்தது)

இடித்த பொருட்கள்

தாளிப்பதற்கு

எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

வரமிளகாய் - 2

சின்ன வெங்காயம் - 15 (இடித்துக் கொள்ளவும்)

பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

உப்பு - சிறிது

பிற பொருட்கள்

கொத்தமல்லி - சிறிது

வெல்லம் - சிறிது

செய்முறை

முதலில் உடலில் இடிப்பதற்கு கொடுத்த பொருட்களை நன்றாக இடித்துக் கொள்ளவும், பின்பு இதனுடன் கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து இடித்து தனியாக வைக்கவும்.

பின்பு பாத்திரத்தில் தக்காளியை துண்டுகளாக்கி, சுவைக்கு ஏற்ப உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக பிசைந்து தனியாக வைக்கவும்.

இதனுடன் புளிச்சாறு சேர்த்து, 5 கப் தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து பச்சை வாசனை போகும்வரை கொதிக்க வைக்கவும்.

இதனுடன் வேக வைத்த துவரம் பருப்பினை மசித்து, இடித்து வைத்துள்ள பச்சை மிளகாய் இவற்றினை சேர்க்கவும்.

கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து தாளிப்பதற்கு எண்ணெய் சேர்த்து, அதனுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

இடித்து வைத்து சின்ன வெங்காயம், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும்வரை நன்றாக வதக்கி ரசத்துடன் சேர்க்கவும். கடைசியாக கொத்தமல்லி மற்றும் சிறிதளவு வெல்லம் சேர்த்து நுரை கூடி வந்ததும் அடுப்பினை இறக்கினால் செட்டிநாடு வெங்காய ரசம் தயார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா