Untitled Document
November 3, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
முருங்கைக்கீரை கொள்ளு குழம்பு: எடையை குறைக்க சரியான ரெசிபி!
[Saturday 2026-10-31 16:00]

முருங்கைக்கீரையுடன் கொள்ளு சேர்த்து குழம்பு எவ்வாறு வைப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக முருங்கைக்கீரையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றது. ரத்த குறைபாடு உள்ளவர்களுக்கு சிறந்த உணவாக முருங்கை கீரை இருக்கின்றது. இதில் இரும்புச்சத்து மட்டுமின்றி வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளும் அதிகமாக இருக்கின்றது. உடம்பிலுள்ள நச்சுக்களை நீக்குவதுடன், எலும்பு மற்றும் இதய ஆரோக்கியத்தினையும் மேம்படுத்துகின்றது.

வெறும் முருங்கைக்கீரையை பயன்படுத்தி குழம்பு, பொரியல் என செய்து சாப்பிடும் நிலையில், தற்போது சற்று வித்தியாசமாக கொள்ளு சேர்த்து குழம்பு வைப்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

கொள்ளு - 1 கப்

முருங்கைக்கீரை - 2 கப்

புளி - எலுமிச்சை பழம் அளவு

சின்ன வெங்காயம் - 10

தக்காளி - 2

சாம்பார் தூள் - 1 டீ ஸ்பூன்

மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன்

முழு மிளகு - 1 டீ ஸ்பூன் (இடித்து வைத்துக்கொள்ளவும்)

பெருங்காயத் தூள் - ¼ டீ ஸ்பூன்

பூண்டு - 2

வெல்லம் - 1 டீ ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - 1 டீ ஸ்பூன்

கடுகு - 1 டீ ஸ்பூன்

வெந்தயம் - ½ டீ ஸ்பூன்

கறிவேப்பிலை - 2 கொத்து (கிள்ளி வைத்தது)

செய்முறை

முதலில் கொள்ளை 4 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். முருங்கைக்கீரை சுத்தம் செய்து கழுவி பொடியாக நறுக்கி தனியாக எடுத்துக் கொள்ளவும்.

இதே போன்று புளியையும் நன்றாக ஊற வைத்து கரைசலாக எடுத்துக் கொள்ளவும். பூண்டையும் தடடிக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து அதில் முருங்கைக்கீரை, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 2 விசில் வைத்த இறக்கவும்.

கீரையை வேறு பாத்திரத்தில் மாற்றிவிட்டு, அதே குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து, சின்ன வெங்காயத்தை வதக்கவும். பின்பு கொள்ளையும் தண்ணீரை வடிகட்டி அதனுடன் சேர்க்கவும்.

இதனுடன் நறுக்கிய தக்காளி, புளி கரைசல், சாம்பார் தூள், மஞ்சள் தூள், தட்டி வைத்த மிளகு, பெருங்காயம், இடித்த பூண்டு, வெல்லம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 6 விசில் வைத்து இறக்கவும். இதனுடன் வேக வைத்த கீரையை சேர்த்து மீண்டும் ஒரு 5 நிமிடம் வைத்து கொதிக்க வைத்து இறக்கினால் முருங்கைக்கீரை கொள்ளு குழம்பு தயார்.

இப்பொழுது தாளிப்பதற்கு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, மிளகாய் வத்தல் சேர்த்து தாளித்து ஊற்றவும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா