Untitled Document
November 15, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தீபாவளி பலகாரங்களை அதிகமாக சாப்பிட்டீங்களா? - வயிறை சுத்தம் செய்யும் பானம் இதோ!
[Tuesday 2026-11-10 16:00]

தீபாவளி பலகாரங்களை அதிகமாக சாப்பிட்டுவிட்ட நிலையில், மறுநாள் வயிறை சுலபமாக சுத்தம் செய்யும் பானத்தினை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தீபாவளி பண்டிகையில் அதிகமான உணவுகளை கணக்கில்லாமல் சாப்பிடுவதை பெரும்பாலான நபர்கள் வழக்கமாக வைத்துள்ள நிலையில், மறுநாள் உடல்நிலையைக் குறித்து கவலைபடவும் செய்கின்றனர். ஏனெனில் வயிறுக்கு அதிகமாக பல உணவுகளை சாப்பிட்ட பின்பு வயிறு உப்புசம், செரிமான கோளாறு, உடல் சோர்வு, உடல் கனமாக இருக்கும் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும்.

இவற்றிற்கு போதுமாக தண்ணீர் மற்றும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை எடுப்பது அவசியம் ஆகும். ஆனால் செரிமானத்தினை மேம்படுத்தும் ஆரோக்கியமான பானங்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

குறித்த பானங்கள் நச்சுக்களை நீக்கி, உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்குவதால் புத்துணர்ச்சியாக இருக்குமாம்.

எலுமிச்சை, வெள்ளரிக்காய் நீர்: வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை துண்டுகளை 1 ஜாடி நீரில் சேர்த்து, புதினா இலைகளை சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து குடிக்கவும். வைட்டமின் சி சத்து நிறைந்த இந்த பானம் உடலை நீரேற்றத்துடன் வைப்பதுடன், செரிமானத்தினை மேற்கொள்ளவும், கொழுப்பினை கரைக்கவும், நச்சுக்களை நீக்கவும் செய்கின்றது.

இஞ்சி, எலுமிச்சை தேன் கலந்த நீர்: பாத்திரம் ஒன்றில் 1 கப் தண்ணீரை கொதிக்க வைத்து இறக்கி, அதில் அரை ஸ்பூன் துருவிய இஞ்சியை சேர்த்து 5 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு வடிகட்டி சில தண்ணீரில் எலுமிச்சை சாறு, தேன் கலந்து வெதுவெதுப்பாக குடிக்கவும். நீரோட்டமாகவும், உடல் குளிர்ச்சியாகவும் வைக்கின்றது.

மஞ்சள் நீர்: ஒரு கப் தண்ணீரில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் 3 நிமிடம் கொதிக்க வைத்து, பின்பு மிளகு தூள், சுவைக்கு ஏற்ப தேன் கலந்து குடிக்கவும். இவை கல்லீரலை சுத்தம் செய்வதுடன், செரிமானத்தை மேம்படுத்தவும், நோயெதிர்ப்பு சக்தியையும் அளிக்கின்றது.

எலுமிச்சை புதினா க்ரீன் டீ: ஒரு கப் க்ரீன் டீ தயாரித்து அதில் எலுமிச்சை சாறு மற்றும் புதினா இலைகள் சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்து, பானத்தை வடிகட்டி குடிக்கவும். இவையும் உடலை சுத்தமாக வைக்க இருக்கின்றது..

நெல்லிக்காய், கற்றாழை ஜூஸ்: நெல்லிக்காய் ஜுஸ் 2 ஸ்பூன், கற்றாழை ஜெல் 1 ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து காலையில் வெறும்வயிற்றில் குடிக்கவும். இவையும் வயிற்றினை சுத்தம் செய்ய உதவுகின்றது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா