Untitled Document
November 15, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மீன் வறுவலை மிஞ்சும் கருணைக்கிழங்கு வறுவல்!
[Saturday 2026-11-14 16:00]

மீன் வறுவல் பக்குவத்தில் கருணைக்கிழங்கை எவ்வாறு வறுவல் செய்வது என்பதை தெரிந்து கொள்வோம். வீட்டு சமையலில் மதிய உணவிற்கு சாம்பார், புளிக்குழம்பு, ரசம் என்று சமைப்பது வழக்கம். ஆனால் இதற்கு சைடு டிஷ்ஷாக பொரியல், கூட்டு ஏதாவது செய்வதும் வழக்கம். அந்த வகையில் மீன் வறுவலுக்கு இணையான சைவ வறுவல் செய்து சாப்பிடலாம். இந்த வறுவலுடன் சாதம் சாப்பிடும் போது அட்டகாசமாகவே இருக்கும். குழந்தைகளும் இந்த சைவ உணவை விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வாறு கருணைக்கிழங்கு வைத்து செய்யும் வறுவல் தான் இதுவாகும்.

பொதுவாக கருணைக்கிழங்கை குழம்பு, மசியல் இவ்வாறு செய்யும்போது நாக்கில் அரிப்பு ஏற்படுவது உண்டு. ஆனால் இவ்வாறு மீன் வறுவல் போன்று செய்து கொடுப்பதால் அரிப்பு இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடுவார்கள். குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் கருணைக்கிழங்கு வறுவலை எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

வேக வைப்பதற்கு

கருணைக்கிழங்கு - 300 கிராம் (மெல்லிய தட்டையான துண்டுகளாக்கிக் கொள்ளவும்)

தண்ணீர் - தேவையான அளவு

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

கல் உப்பு - சிறிது

ஊற வைப்பதற்கு

காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

சோள மாவு - 1 1/2 டீஸ்பூன்

பச்சரிசி மாவு - 1 1/2 டீஸ்பூன்

புளி - 1/2 நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது) எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை

கருணைக்கிழங்கை தோல் நீக்கி மெல்லிய தட்டையான துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பாத்திரம் ஒன்றில் தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

நறுக்கிய கருணைக்கிழங்கை தண்ணீரில் சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். கிழங்கு சிறிது வெந்ததும் அதனை தட்டு ஒன்றில் எடுத்து வைக்கவும்.

பின்பு கிழங்கில் காஷ்மீர் மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் சோளமாவு, பச்சரிசி மாவு இவற்றினை சேர்த்து கலந்துவிடவும். சிறிதளவு புளி சாறு சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

கடைசியில் தவா ஒன்றினை அடுப்பில் வைத்து, அதில் ஊற வைத்த உருளைக்கிழங்கை போட்டு இரண்டு பக்கமும் நன்றாக வேக வைத்து எடுக்கவும்.

தற்போது சுவையான குழந்தைகளும் கூட விரும்பி சாப்பிடும் கருணை கிழங்கு வறுவல் தயார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா