Untitled Document
November 28, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கிராமத்து ஸ்டைலில் நாட்டுக்கோழி ப்ரை!
[Thursday 2026-11-26 16:00]

கிராமத்து ஸ்டைல் காரசாரமான நாட்டுக்கோழி ப்ரை எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்றான நாட்டுக்கோழியில் ஏராளமான சத்துக்கள் உள்ளது. சாதாரண பிராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி தான் சாப்பிடுவதற்கு சிறந்ததாகும். பொதுவாக வீடுகளில் நாட்டுக்கோழி குழம்பு, சூப், கிரேவி இவ்வாறு செய்து சாப்பிட்டிருப்போம். தற்போது கிராமத்து ஸ்டைலில் நாட்டுக்கோழி ப்ரை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

வேக வைப்பதற்கு

நாட்டுக்கோழி - 3/4 கிலோ

உப்பு - சுவைக்கேற்ப

காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

தண்ணீர் - தேவையான அளவு

வறுத்து பொடி செய்வதற்கு

மல்லி - 1 டேபிள் ஸ்பூன்

வரமிளகாய் - 3

மிளகு - 1 1/2 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

பட்டை - 2 துண்டு

கிராம்பு - 4

ஏலக்காய் - 1

செய்முறை

முதலில் நாட்டுக்கோழியை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் நாட்டுக்கோழியை சேர்த்து, சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து 3 நிமிடம் கிளறிவிடவும்.

பின்பு மிளகாய் தூள் சேர்த்து 1 நிமிடம் கிளறிவிட்டு, அதில் சிக்கன் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு, 5 விசில் சேர்த்து இறக்கவும்.

கடாய் ஒன்றினை அடுப்பில் வறுப்பதற்கு கொடுத்த பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வறுத்து ஆறவைத்து, மிக்ஸி ஜாரில் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

மீண்டும் கடாயை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் சேர்த்து, சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்கவும். இதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

இதனுடன் வேக வைத்த சிக்கனை தண்ணீருடன் சேர்த்து, அரைத்த மசாலாவையும் சேர்த்து நன்றாக கிளறவும். கோழி வேக வைத்த தண்ணீர் வத்தியதும், அதில் கொத்தமல்லி இலையைத் தூவி இறக்கினால் நாட்டுக்கோழி ப்ரை தயார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா