Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
நடிகர் சங்கத்தின் கணக்கு விவரங்களை சரத் குமார் இன்னும் தரவில்லை: நடிகர் சங்கம் குற்றம் சாட்டு
[Thursday 2015-12-31 09:00]

நடிகர் சங்கத்தின் கணக்கு விவரங்களை சரத் குமார் இன்னும் தரவில்லை என்று நடிகர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத் குமார் ஊடகங்களுக்குத் தந்த பேட்டியைப் படித்தோம். அதுபற்றி மக்களுக்கும் உறுப்பினர்களுக்கும் சில விளக்கங்களைத் தரவேண்டியுள்ளது. நடிகர் சங்க செயல்பாட்டில் இரண்டுவிதமான கணக்குகளைப் பராமரித்துத் தரவேண்டியது கட்டாயமாகிறது.

ஒன்று, சங்க சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்ட நடிகர் சங்க கணக்குகள். மற்றொன்று அறக்கட்டளை சட்ட திட்டத்துக்கு உட்பட்ட கணக்குகள். தேர்தல் முடிந்த மறுநாள், சரத் குமார் ஊடகங்களின் மூலம், நடிகர் சங்க கணக்குகளை 7 நாளிலும் அறக்கட்டளை கணக்குகளை 15 நாளிலும் ஒப்படைப்பேன் என்றார். ஒரு மாதம் வரை காத்திருந்தோம். ஆனால் கணக்குகள் வரவில்லை. பலமுறை நினைவூட்டல் கடிதங்களுக்குப் பின், நவம்பர் 25-ம் தேதி நடிகர் சங்கத்தின் ஒருவருட கணக்கு (2014-2015) மட்டும் வந்தது. ஆனால், ஏப்ரல் - அக்டோபர் வரையிலான 6 மாதக் கணக்குகள் இன்னும் வரவில்லை. அவர்கள் கொடுத்த ஒரு வருடக் கணக்கு தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. அறக்கட்டளைக்கு கடந்த இரண்டரை வருடங்களுக்கான கணக்கு தரவேண்டி உள்ளது. ஆனால் இன்றுவரை ஒப்படைக்கவில்லை. அதற்குப் பல நினைவூட்டல் கடிதங்களை அனுப்பி உள்ளோம். கடந்த டிசம்பர் 26 அன்று நடைபெற்ற நடிகர் சங்க செயற் குழு மற்றும் அறக்கட்டளை கூட்டத்துக்குப் பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், கணக்குகள் உடனே வரவில்லை என்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று கூறியிருந்தோம். இதற்கு, கணக்கை ஒப்படைத்துவிட்டதற்கான ரசீது வைத்திருக்கிறேன் என்று முன்னுக்குப் பின் பொய்யான செய்தியை சரத் குமார் பரப்பி வருகிறார். அத்துடன் தற்போது பொதுக்குழுவைக் கூட்டினால் அறக்கட்டளைக் கணக்கை ஒப்படைப்பேன், இப்போது உள்ள நிர்வாகிகள் பொதுக்குழுவைக் கூட்டாமல் தள்ளிப் போடுவதாக எங்கள் மேல் வீண் பழி போடுகிறார்.

முந்தைய வருட கணக்குகளை தணிக்கை செய்து பொதுக்குழுவில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும் என்பது பொதுக்குழுவின் நோக்கம். அதைப் பல வருடங்களாக தலைவர், செயலாளர், பொருளாளர் போன்ற பொறுப்புகளில் இருந்த சரத்குமார், ராதாரவி, சந்திரசேகருக்குத் தெரியாதா? அவர்கள் கணக்கை ஒப்படைத்த 21 நாள்களுக்குள் பொதுக்குழுவைக் கூட்ட நடிகர் சங்கம் தயாராக உள்ளது. இவர்களின் பொறுப்பற்ற செயலால், வருமான வரித்துறை, சேவை வரித்துறை போன்றவற்றில் நடிகர் சங்கமும் அறக்கட்டளையும் சட்டப்படி பல பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. உறுப்பினர்கள் மற்றும் சங்க நலனுக்காக கூடிய விரைவில் இவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com



பிக் பாஸ் 8ல் நுழையும் செந்தில்?
[Thursday 2024-09-19 18:00]

பிக் பாஸ் ஷோவின் 8வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. தற்போது போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியில் குழிவினார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சின்னத்திரை நடிகர்கள், விஜய் டிவி நட்சத்திரங்கள் என பலரும் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த முறை விஜய் சேதுபதி தொகுப்பாளராக இணைந்து இருப்பதால் ஷோ எப்படி இருக்க போகிறது என்கிற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.



பிரிகிடா தன் உண்மையான வயது பற்றி கொடுத்த விளக்கம்!
[Thursday 2024-09-19 18:00]

நடிகை பிரிகிடா பவி டீச்சர் ஆக நடித்து இணையத்தில் பிரபலம் ஆனவர். அதன் பிறகு அவர் சினிமாவில் அறிமுகம் ஆகி பல படங்களில் நடித்து வருகிறார். விஜய் உடன் மாஸ்டர், பார்த்திபனின் இரவின் நிழல் போன்ற படங்களில் அவர் நடித்து இருந்தார்.



கோட் படத்தின் 13 நாள் வசூல்: தயாரிப்பாளர் அதிகாரபூர்வ அறிவிப்பு!
[Thursday 2024-09-19 06:00]

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். அதனால் படத்திற்கு நல்ல வசூல் இரண்டாவது வாரத்திலும் வந்து கொண்டிருக்கிறது.



உச்சகட்ட கவர்ச்சியில் துஷாரா விஜயன்! Top News
[Thursday 2024-09-19 06:00]

சார்பட்டா பரம்பரை, ராயன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் துஷாரா விஜயன். அவர் படுகவர்ச்சி ஆக போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்கள் இதோ.



அஜித் என்னிடம் மன்னிப்பு கேட்டார்: ரகசியத்தை உடைத்த இசையமைப்பாளர்!
[Wednesday 2024-09-18 17:00]

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி கதாநாயகனாக ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். தனது நடிப்பு மூலம் பல கோடி ரசிகர்களை சம்பாதித்தவர். அஜித்குமார் படப்பிடிப்புகளில் நடிக்கும் போது எடுக்கப்படும் புகைப்படங்கள், விமான நிலையத்திற்கு வரும்போது எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும் காட்சியை நம்மால் பார்க்க முடிகிறது.



வேட்டையன் படம் வெளிவந்தபின் இது நடக்கும்: அனிருத் சொன்ன விஷயம்!
[Wednesday 2024-09-18 17:00]

இன்றைய தேதியில் இவருடைய இசை இல்லாமல் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவருவதே இல்லை. ரஜினி, விஜய், அஜித் என பல டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அப்படி அனிருத்தின் இசையில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் வேட்டையன். பேட்ட, ஜெயிலர் படங்களை தொடர்ந்து அனிருத் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் வேட்டையன் படத்தை பிரபல இயக்குனர் TJ ஞானவேல் இயக்கி வருகிறார்.



குக் வித் கோமாளி மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பிரபலங்கள்!
[Wednesday 2024-09-18 17:00]

மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற கான்செப்டில் உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. முதல் சீசனிற்கு கிடைத்த வெற்றி அடுத்தடுத்து 5 சீசன்கள் வரை வந்துவிட்டது. இந்த 5வது சீசனில் அனைத்தும் புதியது, இதனால் மக்களின் ஆதரவு கொஞ்சம் லேட்டாக தான் கிடைத்தது என்றே கூறலாம்.



பிரியங்காவுக்கு நோஸ்கட் கொடுத்த பிரபல நடிகை!
[Wednesday 2024-09-18 07:00]

விஜய் டிவி பிரியங்கா மற்றும் மணிமேகலை ஆகியோர் இடையே நடந்த சண்டை பற்றி தான் இணையத்தில் நெட்டிசன்கள் எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். யார் மீது தவறு என விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. சர்ச்சை பெரிய அளவில் வெடித்து தன்னை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையிலும் பிரியங்கா இதுவரை தனது தரப்பு விளக்கத்தை இதுவரை வெளியிடாமல் இருக்கிறார்.



விஜய் தவறான வழியில் செல்கிறார்: பிரபல இயக்குனர் தாக்கு!
[Wednesday 2024-09-18 07:00]

நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி இருக்கும் நிலையில் சினிமாவில் இருந்து முழுமையாக விலக போவதாக தெரிவித்து இருக்கிறார். அடுத்து அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கப்போகும் அவரது 69வது படம் தான் கடைசி என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு அரசியல்வாதிகள் பலரும் அவரை விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர்.



மணிமேகலை-ப்ரியங்கா பிரச்சனை குறித்து பிக்பாஸ் புகழ் அர்ச்சனா!
[Tuesday 2024-09-17 18:00]

சினிமாவோ, சின்னத்திரையோ அதில் இருக்கும் பிரபலங்கள் ஏதாவது பிரச்சனை என்றால் உடனே வெளியே சொல்ல மாட்டார்கள். அப்படி சொல்கிறார்கள் என்றால் அது அப்படியே பூகம்பமாக வெடித்துவிடும். அப்படி தான் இப்போது எல்லோராலும் சிரித்து சிரித்து ரசிக்கப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஒரு பிரச்சனை வெடித்துள்ளது.



வாழை படத்தின் அடுத்த பாகம் வருமா?
[Tuesday 2024-09-17 18:00]

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி வெளியான திரைப்படம் வாழை. இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக படம் அமைந்துள்ளது. இதில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



படப்பிடிப்பே முடியவில்லை: அதற்குள் வெளிவந்த குட் பேட் அக்லி படத்தின் முதல் விமர்சனம்!
[Tuesday 2024-09-17 18:00]

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படத்தை தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் தீவிர ரசிகரான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கி வருகிறார். கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த மார்க் ஆண்டனி படத்தை தொடர்ந்து இப்படத்தை ஆதிக் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



பிரபல நடன இயக்குனர் ஜானி மீது பாலியல் புகார்!
[Tuesday 2024-09-17 06:00]

மலையாள சினிமா ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்ந்து, பல நடிகர்கள், இயக்குனர்கள் என பலர் மீது பெண்கள் அவர்களுக்கு எதிராக நடந்து கொண்டதாக கூறி புகார் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம்பெண் புகார் கொடுத்துள்ளார். அதில், 2019-ல் ஜானியுடன் பணிபுரிந்த போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி அந்த பெண் புகார் கொடுத்துள்ளார்.



"இதுபோன்ற ஒரு செயல் தமிழ் சினிமாவில் நடக்கவில்லை" - ஐஸ்வர்யா ராஜேஷ்!
[Tuesday 2024-09-17 06:00]

மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்கள் குறித்து ஹேமா கமிட்டி மூலம் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் இதுபோன்று தமிழ் சினிமாவிலும், தெலுங்கு சினிமாவிலும் கமிட்டி அமைக்க வேண்டும் என்று பல முன்னணி நடிகைகள் கேட்டுக்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு செய்தியாளர்களிடம் பேசினார்.



ரூ.100 கோடி மதிப்பிலேயே கார்கள் வைத்திருக்கும் பிரபல நடிகர்!
[Monday 2024-09-16 18:00]

பிரபலங்கள் பலர் சினிமாவை தாண்டி கார், பைக்குகள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். எல்லோருமே கார்கள் வைத்திருந்தாலும் சிலர் யாரும் வைத்திருக்காத கார்களாக வைத்துள்ளனர். அப்படி ஏராளமான கார்களை கொண்ட நடிகரை பற்றிய விவரம் தான் வெளியாகியுள்ளது. அவர் வேறுயாரும் இல்லை மலையாள சினிமாவின் டான் நாயகன் மம்முட்டி தான்.


Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா