Untitled Document
September 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கேரளாவில் அரசு மரியாதையுடன் நடந்த கலாபவன் மணி இறுதி யாத்திரை:
[Tuesday 2016-03-08 09:00]

கேரளா மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் எண்ணற்ற ரசிகர்களை கொண்டிருந்த மலையாள நடிகர் கலாபவன் மணி நேற்று முன் தினம் மரணம் அடைந்தார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக கூறப்பட்டதால் நேற்று காலை அவரது உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து அவரது உடல் மதியம் 11.30 மணி அளவில் திருச்சூரில் உள்ள கேரளா சங்கீத நாடக அகாடமிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு நடிகர்கள் ஜெயராம், முகேஷ், சீனியர் நடிகை கே.பி.ஏ.சி லலிதா உள்ளிட்ட பலர் தங்களது இறுதி மரியாதையை கலாபவன் மணிக்கு செலுத்தினார்கள். அதன்பின் 1.30 மணி அளவில் அவரது உடல் சாலக்குடி முனிசிபல் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கேரளாவில் பல பகுதிகளிலும் இருந்து திரண்டு வந்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களும் திரையுலக பிரமுகர்கள் அனைவரும் வரிசையில் நின்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பின் சாலக்குடி அருகில் உள்ள கலாபவன் மணியின் சொந்த ஊரான மணிக்கூடாரம் பகுதிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.

ஏராளமான உள்ளூர் பொதுமக்கள், அரசு அதிகாரிகள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பின் மாநில அரசு மரியாதையுடன் போலீஸ் அணிவகுப்புடன் புறப்பட்ட கலாபவன் மணியின் இறுதி ஊர்வலம் மாலை 5 மணி அளவில் மயான மேடையை அடைந்தது. துப்பாக்கி ஏந்திய போலீஸார் மரியாதை வழங்க 5.30 மணி அளவில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. கலாபவன் மணிக்கு ஒரே ஒரு மகள் மட்டும் என்பதால், கலாபவன் மணியின் ஈமச்சடங்கை அவரது சகோதரி மகனான தர்ஷன் செய்து முடித்தார். சாலக்குடி பகுதியில் கலாபவன் மணியின் இறுதி யாத்திரைக்காக கூடிய கூட்டம் இதுநாள் வரை அந்த பகுதியே கண்டிராத ஒன்று என மீடியாக்களில் பேசப்பட்டது. மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற அந்த மாபெரும் கலைஞனின் ஆத்மா சாந்தி அடையட்டும்.!

  
  
   Bookmark and Share Seithy.com



சாதனை படைத்த சிறகடிக்க ஆசை சீரியல்!
[Saturday 2024-09-28 18:00]

சின்னத்திரையில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் TRP-யில் எப்போதுமே டாப்பில் இருந்து வருகிறது. மக்கள் மனதை கவர்ந்த சிறகடிக்க ஆசை சீரியல் இந்த ஆண்டு பல விருதுகளை விஜய் தொலைக்காட்சி விருது விழாவில் அள்ளி சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது மனோஜை லட்டர் கொடுத்து மிரட்டும் அந்த மர்ம நபர் யார் என்பதை பற்றிய விஷயம் தான் பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கிறது.



ஹாரி பாட்டர் திரைப்பட நடிகை உயிரிழப்பு!
[Saturday 2024-09-28 18:00]

ஹாரி பாட்டர் திரைப்படத்தில் சீரிஸில் பேராசிரியர் மினெர்வா மெக்கோனகல் கதாபாத்திரத்தில் நடித்த பிரிட்டிஷ் நடிகை மேகி ஸ்மித் (89 )இவர் வயது மூப்பு காரணமாக ( 27)அதிகாலை மருத்துவமனையில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.



அனிருத் இசையமைக்கும் புது ஆல்பம் பாடல்!
[Saturday 2024-09-28 07:00]

இன்று இவர் இசை இல்லாமல் எந்த மாதமும் படங்கள் வராமல் இல்லை. அந்த அளவிற்கு ஒரு முன்னணி இசையமைப்பாளராக பல நட்சத்திரங்களின் படங்களில் இசையமைத்து புகழின் உச்சத்தில் வலம் வருபவர் அனிருத். தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளுக்கு படு பிஸியாக இசையமைத்து வரும் இவருடைய இசையமைப்பில் வரும் அக்டோபர் 10 - ம் தேதி ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் வெளிவர உள்ளது.



மீண்டும் ரேஸ்: தீவிர பயிற்சியில் நடிகர் அஜித்!
[Saturday 2024-09-28 07:00]

நடிகர் அஜித் தற்போது இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அஜித் கார் ரேஸில் மீண்டும் களமிறங்க இருப்பதாக அறிவித்து இருக்கிறார். அதற்கான பயிற்சியையும் தொடங்கி உள்ளார்.



"அனிமல் படத்தில் நடித்ததால் பல சர்ச்சைகளுக்கு உள்ளானேன்" - நடிகை திரிப்தி டிம்ரி!
[Friday 2024-09-27 18:00]

மாம் என்ற திரில்லர் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் திரிப்தி டிம்ரி. பாலிவுட் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகையாக வலம் வரும் திரிப்தி கடந்த ஆண்டு ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான அனிமல் படத்தில் சோயா என்ற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அதன் மூலம் பிரபலமானார்.



ஜெயம் ரவிக்கு மனைவி ஆர்த்தி செய்த கொடுமைகள்!
[Friday 2024-09-27 18:00]

நடிகர் ஜெயம் ரவி மற்றும் மனைவி ஆர்த்தி ஆகியோர் இடையே இருக்கும் பிரச்சனை பெரிய அளவில் பரபரப்பாக தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ஜெயம் ரவி விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட நிலையில் அதற்கு காரணம் அவர் கெனிஷா என்ற பாடகி உடன் நெருக்கமாக இருப்பது தான் என ஒரு கிசுகிசு பரவியது. ஆனால் அது உண்மை இல்லை என ஜெயம் ரவி விளக்கம் கொடுத்தார்.



கில்லி படத்தை பின்தள்ளி வசூலில் சாதனை படைத்த இந்திய படம் எது தெரியுமா?
[Friday 2024-09-27 18:00]

தரணி இயக்கத்தில் விஜய் நடித்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற படம் கில்லி. இன்று சினிமாவில் விஜய் நடிப்பில் பல படங்கள் வந்து கொண்டிருக்கிறது ஆனால், இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து மாஸாக வலம் வரும் படமாக கில்லி உள்ளது. அதற்கு முக்கிய காரணம், விஜய் மற்றும் அவருக்கு ஜோடியாக நடித்த திரிஷாவின் நடிப்பிற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.



விஜய்க்கு ஜோடியாக நடிக்க மறுத்த உலக அழகி ஐஸ்வர்யா ராய்!
[Friday 2024-09-27 06:00]

உலக அழகி என்ற பட்டத்தை வென்ற பிறகு சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய். இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ் படத்தில் கதாநாயகியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கத்தில் "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" என்ற திரைப்படத்தில் அஜித், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார்.



விஜய் பட தயாரிப்பாளருடன் சிம்புவின் அடுத்த படம்!
[Friday 2024-09-27 06:00]

நடிகர் சிம்பு தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அவரது 48வது படத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் அதை தயாரித்து வருகிறது. மேலும் கமல் உடன் தக் லைப் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார் சிம்பு.



"சிவகார்த்திகேயனின் அந்த விஷயத்தை தெரிந்துகொள்ள மிகவும் ஆசை" - கீர்த்தி சுரேஷ்!
[Thursday 2024-09-26 18:00]

தமிழ் சினிமாவில் எந்தஒரு பின்னணியும் இல்லாமல் தனது திறமையால் முன்னேறி இப்போது பலருக்கு ஒரு உதாரணமாக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். கடைசியாக இவரது நடிப்பில் அயலான் படம் வெளியானது, மிகப்பெரிய வெற்றி பெற்றது. அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார், கமல்ஹாசன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.



பிக் பாஸில் வரப்போகும் புது விஷயம்!
[Thursday 2024-09-26 18:00]

பிக் பாஸ் 8வது சீசன் விஜய் டிவியில் அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது. அதற்கான பணிகளை தற்போது பிக் பாஸ் குழுவினர் தற்போது செய்து வருகின்றனர். மேலும் போட்டியாளர்களாக வரும் பிரபலங்களும் இறுதி செய்யப்பட்டு இருக்கின்றனர். அக்டோபர் 6ம் தேதி பிக் பாஸ் 8 பிரம்மாண்ட தொடக்க விழா உடன் ஆரம்பிக்க இருக்கிறது.



மறுபடியும் சர்ச்சையை கிளப்பிய பயில்வான்!
[Thursday 2024-09-26 18:00]

நடிகைகள் இணையத்தில் படவாய்ப்பிற்காக அரைகுறை ஆடையுடன் புகைப்படங்கள் பகிர்வது நல்லதல்ல என்பதை பற்றி பயில்வான் ரங்கநாதன் சமூக வலைத்தளத்தில் பேசி சர்ச்சையை கிளப்பியுள்யார். பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து சினிமா பிரபலங்களை பற்றி சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசிவருபவர். இதனால் இவர் இணையத்தில் ஏதாவது ஒரு விடயம் பேசி வீடியோ வெளியிட்டால் அத கட்டாயம் ஏதாவது பிரபலங்களின் சர்ச்சையான விடயங்களை பெசியிருப்பார் என்பது இப்போது அனைவர் இடத்திலும் பழக்கமாகி விட்டது.



இயக்குநர் அவதாரம் எடுக்கிறாரா அதர்வா?
[Thursday 2024-09-26 06:00]

பாணா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதர்வா. இவர் 80ஸ்- 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் ஆவார். பாணா காத்தாடி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் அப்படத்தை தொடர்ந்து பல படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.



பிக் பாஸ் 8 தொடங்கும் முன்பே நடந்த சோகம்!
[Thursday 2024-09-26 06:00]

விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோ இன்னும் ஒரே வாரத்தில் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. அடுத்த வார இறுதியில் செப்டம்பர் 6ம் தேதி பிரம்மாண்ட தொடக்க விழா நடைபெற இருக்கிறது. அதற்கான பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.



"சினிமாவை காப்பாற்ற ஒரே வழி இதுதான்" - வெற்றிமாறன் சொன்ன விஷயம்!
[Wednesday 2024-09-25 18:00]

தியேட்டருக்கு வரும் மக்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. தமிழ் சினிமாவை காப்பாற்ற வேண்டும் என பல பிரபலங்கள் பேசி கேட்டிருப்போம். ஓடிடி வளர்ச்சியால் தியேட்டர் தொழில் அதிகம் பாதிக்கப்படுவதாக கூறி, ஓடிடி-யில் 8 வாரங்களுக்கு பிறகு தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்களும் கேட்டு வருகிறார்கள்.


Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா