Untitled Document
November 4, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழில் முதல் முறையாக கால் பதிக்கும் அவதார் பட நடிகர்கள்!
[Friday 2020-01-03 09:00]

உலக சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த படம் ‘அவதார்’. ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகளை அள்ளி குவித்த இப்படம் ரசிகர்களை பிரமிக்கவும், ஆச்சரியப்படுத்தும் செய்தது. தற்போது இப்படத்தில் நடித்த நடிகர்கள் தமிழில் கால் பதிக்க இருப்பது உலக சினிமா ரசிகர்கள் தமிழ் சினிமா பக்கம் திரும்ப வைக்க இருக்கிறது. ரீல் கட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் இந்தியா, அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், பிரேசில் மற்றும் மலேசியாவிலிருந்து நடிகர்கள் மற்றும் குழுவினர் ஒன்றாக இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள். அறிமுக இயக்குனர் நரேன் பிரனியாஸ் ஆர் இயக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழியில் உருவாகிறது.

இப்படத்தில்தான் அவதார் படத்தில் நடித்த நடிகர்கள் நடிக்கிறார்கள். இதுபோக, இப்படத்தில் இடம்பெறும் முக்கியமான கதாபாத்திரத்தில் ஒருவர் நடிப்பதை மிகவும் சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள். இந்த இரண்டு சஸ்பென்ஸ்களையும் வருகிற 2020-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி வெளியிட இருக்கிறார்கள். தற்போது இப்படத்திற்கான மற்ற நடிகர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மரியா ஜெரால்டு இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

இப்படத்தின் பின்னணி இசை படத்தை பார்ப்பவர்களுக்கு திரில்லர் அனுபவத்தை தரும்வகையில் இருக்கும். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 2020-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி லடாக்கில் தொடங்க உள்ளது. இந்தியா, நேபால், வியட்னாம், சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 70 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் ஒரே படத்தில் நடிக்கும் இப்படம், ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com



தர்மன் படத்தில் இணைந்த இளம் டாப் ஹீரோயின்!
[Wednesday 2026-11-04 07:00]

சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் அடுத்து உருவாகி வரும் தர்மன் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த படத்தில் ஏற்கனவே நயன்தாரா, ராசி கண்ணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தற்போது மேலும் ஒரு முன்னணி ஹீரோயின் இணைந்திருக்கிறார்.



19 நாட்களில் ஜெயிலர் 2 தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல்!
[Tuesday 2026-11-03 16:00]

ஜெயிலர் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் 19 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு கடந்த மாதம் வெளியான திரைப்படம் ஜெயிலர் 2. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.



பிரபல இயக்குனருக்கு ஐபோன் பரிசளித்த நடிகர் சிவகார்த்திகேயன்!
[Tuesday 2026-11-03 16:00]

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த வருடம் கடைசியாக வெளியான திரைப்படம் பராசக்தி. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன், ஸ்ரீலீலா, அதர்வா, ஜெயம் ரவி என பலர் நடித்துள்ள இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன, வசூலும் ஓரளவிற்கு வந்தது. இப்படத்திற்கு பிறகு சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். கமல்ஹாசன் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.



ராமாயணா முன்பதிவு வசூல் விவரம்!
[Tuesday 2026-11-03 16:00]

ராமாயணா இந்திய சினிமாவே ஆவலுடன் காத்திருக்கும் படம். ஆம் ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் ராமாயணா படத்தை மிகப்பிரமாண்டமாக எடுத்துள்ளனர். இப்படத்தில் ராமராக ரன்பீர், ராவணனாக யஷ், சீதையாக சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர், இந்த படம் இந்த வருடம் தீபாவளி விருந்தாக ராமாயணா படம் வெளிவரவுள்ளது.



ரோலக்ஸ் பட அப்டேட் கொடுத்த சூர்யா!
[Tuesday 2026-11-03 07:00]

சூர்யா நடிப்பில் அடுத்து சீன் படம் திரைக்கு வருகிறது. அதன் ப்ரோமோஷனுக்காக ஹைதராபாத்தில் நேற்று ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் சூர்யா தனது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து இருக்கும் ரோலக்ஸ் படம் பற்றி பேசி இருக்கிறார்.



யாஷிகா ஆனந்த் முகத்திற்கு என்ன ஆனது? - போட்டோ பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி!
[Tuesday 2026-11-03 07:00]

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார். அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள். யாஷிகா மிகவும் கவர்ச்சியாக அடிக்கடி வெளியிடும் போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகிறது.



18 நாட்களில் ஜெயிலர் 2 தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல்!
[Monday 2026-11-02 16:00]

தமிழ்நாட்டில் ஜெயிலர் 2 திரைப்படம் 18 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த பாக்ஸ் ஆபிஸ் விவரத்தை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். இயக்குநர் நெல்சன் - ரஜினிகாந்த் கூட்டணியில் இரண்டாவது முறையாக இணைந்த திரைப்படம் ஜெயிலர் 2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இன்னும் பிரம்மாண்டமான கதைக்களம், மாஸ் காட்சிகள், பட்ஜெட் என ரசிகர்களை கவரும் வகையில் இப்படம் அமைந்திருந்தது.



நடிகர் அஜித்தின் Dare Devil படத்திற்கு போடப்பட்ட பூஜை!
[Monday 2026-11-02 16:00]

கடந்த 2025ம் வருடம் அஜித்தின் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இப்படம் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கி வசூல் வேட்டை செய்தது. இப்படத்திற்கு பிறகு அஜித் எந்த படத்திலும் கமிட்டாகாமல் கார் ரேஸில் முழு கவனத்தையும் காட்டி வந்தார்.



காதல் தோல்வி சர்ச்சை: மனம் திறந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்!
[Monday 2026-11-02 16:00]

நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் "நான் ஒரு கடினமான காலகட்டத்தை கடந்து வந்துவிட்டேன்" என மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறிய விஷயம் என்ன என்பதை விரிவாக இந்த பதிவில் பார்ப்போம். பிரேமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். இதன்பின் தமிழில் என்ட்ரி கொடுத்த இவர், கொடி, தள்ளிப்போகாதே, சைரன், டிராகன், பைசன் மற்றும் லாக்டவுன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.



அரசியல் என்ட்ரி குறித்து பேசப்போகும் தனுஷ்?
[Monday 2026-11-02 07:00]

நடிகர் தனுஷ் தற்போது அரசியல் என்ட்ரிக்கான முதற்கட்ட பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அவர் தனது ரசிகைகளை சந்திக்க பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்தி இருந்தார். அதில் பங்கேற்ற எல்லா பெண்களுக்கும் வெள்ளி விளக்கு ஒன்றை கிப்ட் ஆக கொடுத்து இருந்தார். அதற்காக தனுஷ் 1.5 கோடி ரூபாய் அளவுக்கு செலவு செய்ததாக சொல்லப்பட்டது.



ரசிகர்களை பார்க்க கண்ணாடி பெட்டி உடன் வந்த அமிதாப் பச்சன்!
[Monday 2026-11-02 07:00]

சமீபத்தில் பாலிவுட் நடிகர் டைகர் ஷராப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த வருடம் நடிகர் சைப் அலி கான் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இப்படி ஒரு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் முன்னணி நடிகர்கள் பலருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.



நடிப்பை தாண்டி ரூ. 120 கோடி வருவாய் ஈட்டிய சமந்தா!
[Sunday 2026-11-01 18:00]

நடிகை சமந்தா தனது Secret Alchemist தொழில் நிறுவனம் மூலம் ரூ. 120 கோடி வருமானம் ஈட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது கர்ப்பமாக இருப்பதால் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கிறார். ஆனால், செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தனது கர்ப்பகால அனுபவம் குறித்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.



நார்த் அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸின் உச்சம் ஜெயிலர் 2!
[Sunday 2026-11-01 18:00]

ஜினி படங்கள் என்றாலே எப்போதும் நார்த் அமெரிக்காவில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். அவருடைய சுமார் படங்கள் கூட அங்கு மிக எளிதாக 3 மில்லியன் டாலர் வசூல் செய்துவிடும், அந்த அளவிற்கு அந்த பகுதியில் தனக்கென ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்துள்ளார்.



மூக்குத்தி அம்மன் 2 முதல் விமர்சனம்!
[Sunday 2026-11-01 18:00]

மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் வருகிற நவம்பர் 6-ஆம் தேதி வெளியாகும் நிலையில், இப்படத்தை பார்த்த Executive தயாரிப்பாளர் தனது X பக்கத்தில் முதல் விமர்சனத்தை தெரிவித்துள்ளார். அதன்படி, படம் எப்படி இருக்கு என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் சுந்தர் சி கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படம் உருவாகி இருப்பதால் இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், முதல் பாகத்தின் கதைக்கும் இப்படத்தின் கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை என படக்குழுவினர் சமீபத்தில் நடைபெற்ற படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கூறியிருந்தனர்.



ப்ரீ புக்கிங்கிலேயே Half Century அடிக்கப்போகும் ராமாயணா!
[Sunday 2026-11-01 07:00]

பிரபல பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ராமாயணா. பிரம்மாண்ட பொருட் செலவில் ரசிகர்கள் எதிர்ப்பார்க்க இந்த இதிகாசக் காவியத் திரைப்படம் உருவாகி இருக்கிறது. பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் , மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் மற்றும் டிஎன்இஜி நிறுவனம் இணைந்து தயாரித்து இருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா