Untitled Document
July 4, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
“முதலாளிகளிடம் இருந்து சினிமாவைக் காப்பாற்ற வேண்டும்” - அமீர்!
[Monday 2024-07-01 18:00]

சென்னையில் திரைப்பட எடிட்டர்களின் சங்கம் சார்பில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற அணியினர் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில், இயக்குனர்கள் வெற்றிமாறன், அமீர், சிங்கம் புலி, ஆர்.வி. உதயகுமார் நடிகை தேவயானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் பேசிய இயக்குநர் அமீர், “ஒரு இயக்குநருக்கு எடிட்டிங் அறிவு மட்டுமல்ல, இசை, சண்டை எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், ஒரு எடிட்டருக்கு ஒரு இயக்குநருக்கான அறிவு ரொம்ப முக்கியம். ஒரு படம் தேறுமா தேறாதா என்று கண்டுப்பிடிப்பது ஒரு எடிட்டர்தான். ஆனால், இதைப் பல எடிட்டர் இதைச் சொல்வது கிடையாது. அதை அப்போதே இயக்குநரிடம் சொல்லிவிட்டால் அங்கேயே சரிசெய்ய முடியும்.

ஒரு இயக்குநருக்கு தன்னுடைய காதலியுடன் தனியறையில் இருக்கும் போது கிடைக்கும் சந்தோஷத்தை போல், எடிட்டிங் ரூமில் இருக்கும் போது கிடைக்கும். பருத்திவீரன் படத்தை 13 வெர்ஷன் எடிட் செய்தோம். தமிழ் சினிமாவே இப்ப அனாதையா கிடக்கு. ஒரு வருடத்திற்கு 250 படங்கள் உருவாகின்றன.

ரசிகர்கள் எவ்வளவு படத்தைதான் பார்ப்பார்கள். ஒரு தனிநபர் கையில் சினிமா சென்றுவிட்டது. நானெல்லாம் இன்னும் இரண்டு வருடங்கள்தான் பார்ப்பேன். ஒன்னும் செட் ஆகவில்லை என்றால், மதுரைக்குச் சென்று அங்கேயே ஆட்களை பிடித்து படமெடுத்து கொண்டு அங்கேயே இருந்துவிடுவேன்.

எவ்வளவு செலவு பண்ணி படமெடுத்தாலும், தியேட்டர்கள் கிடைப்பதில்லை. க்யூப் நிறுவனங்கள் தொடங்கும் போது நம்மிடம் வந்து கெஞ்சுவார்கள். ஆனால், இப்போது அவர்கள் மோனோபோலி ஆகிவிட்டார்கள். இப்போது அவர்களைக் கேள்வி கேட்க முடியவில்லை. இப்போது தனித்தனி முதலாளிகளிடம் சினிமா மாட்டியிருக்கிறது. அதில் இருந்து சினிமாவைக் காப்பாற்ற வேண்டும். சினிமா இருந்தாதான் நாம் இருக்க முடியும்” எனப் பேசினார்.

  
  
   Bookmark and Share Seithy.com



ரஜினியின் கூலி படத்தில் இணைந்த பிரபலம்!
[Wednesday 2024-07-03 18:00]

கோலிவுட்டில் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக திகள்பவர் தான் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அன்பறிவு சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் வீரைவில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.



சினேகாவுக்கு நடந்த பயங்கர விபத்து: அதிர்ச்சி தகவல் சொன்ன நடிகர்!
[Wednesday 2024-07-03 18:00]

நடிகை சினேகா, 42 வயதாகும் இவர் ஹீரோயினாக நடிக்கும் மார்க்கெட் சென்றாலும் சினிமாவில் நிறைய முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இப்போது விஜய்யுடன் கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், விஜய்-சினேகா இடம்பெறும் படத்தின் ஒரு பாடலும் வெளியாகி இருந்தது. படங்களை தாண்டி சினேகா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த நடன நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வந்தார்.



திடீரென ஷாலினிக்கு நடந்த அறுவைசிகிச்சை: மருத்துவமனைக்கு விரைந்த அஜித்!
[Wednesday 2024-07-03 18:00]

அஜித்தின் மனைவி- ஷாலினி திடீர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில், அனைவரும் பார்த்து பொறாமை படும் ஜோடி தான் அஜித் - ஷாலினி. இவர்களுக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர். அஜித் - ஷாலினி இருவரும் இணைந்து 'அமர்க்களம்' படத்தில் நடித்த போது தான் காதலிக்க ஆரம்பித்தார்கள்.



இயக்குனர் ஷங்கர் மகன் ஹீரோவாக நடிக்க வருகிறாரா?
[Wednesday 2024-07-03 06:00]

இந்திய அளவில் பிரம்மாண்ட படங்களுக்கு பெயர்பெற்றவர் இயக்குனர் ஷங்கர். எந்திரன், 2.0 என அவரது பல படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டவை. தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இயக்கி இருக்கும் ஷங்கர், அதன் ப்ரோமோஷனுக்காக பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார்.



ஸ்டார் படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?
[Wednesday 2024-07-03 06:00]

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த பியர் பிரேமா காதல் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் இளன். இவர் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவான ஸ்டார் திரைப்படம் கடந்த மே கடந்த 10 ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் முக்கிய ரோலில் அதிதி போஹங்கர், லால், கீதா கைலாசம் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.



தளபதி 69 படத்தின் கதை இதுதானா?
[Tuesday 2024-07-02 18:00]

நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கிவிட்டார், அதானல் தளபதி 69 தான் அவரது கடைசி படமாக இருக்கபோகிறது என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால், அந்த படத்தை இயக்கப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில், தீரன், துணிவு படத்தை இயக்கிய இயக்குனர் ஹெச் வினோத் இப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



"அந்த தவறை தெரியாமல் செய்துவிட்டேன்" - உண்மையை ஒப்புக்கொண்ட சமந்தா!
[Tuesday 2024-07-02 18:00]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தா தான் செய்த தவறை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை சமந்தா கடந்த 2010ம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் இரண்டாவது நாயகியாக அறிமுகமான இவர் இன்று மக்கள் மத்தியில் முன்னணி நடிகையாக வலம்வருகின்றார் நடிகை சமந்தா.



நீச்சல் உடையில் இளைஞர்களின் சூட்டை கிளப்பும் நடிகை அதிதி! Top News
[Tuesday 2024-07-02 18:00]

STAR படத்தில் நடித்திருக்கும் நடிகை அதிதி போஹன்ஹார் முதன் முதலில் மராட்டி மொழி திரைப்படங்களில் நடித்ததை அடுத்த தான் திரை உலக வாழ்க்கையில் தடம் பதித்தார். இவர் ஒரு மிகச்சிறந்த விளையாட்டு வீராங்கனையாக இருந்ததை அடுத்து தான் திரைத்துறைக்குள் அடி எடுத்து வைத்திருக்கிறார். மேலும் அதிதி முதலில் தியேட்டர் நடிகையாக நடிப்புத்திறனை காட்டியதை அடுத்து தான் அவருக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது.



சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் ஹெச்.வினோத்!
[Tuesday 2024-07-02 06:00]

இயக்குனர் ஹெச். வினோத் அடுத்து தளபதி விஜய்யின் அடுத்த படமான தளபதி69 படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுதான் விஜய்யின் கடைசி படம் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த படத்தை முடித்தபிறகு ஹெச். வினோத் தனது முந்தைய ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.



அட்லீயின் அடுத்த படம்: சல்மான் கான் உடன் இந்த தமிழ் ஹீரோவா?
[Tuesday 2024-07-02 06:00]

இயக்குனர் அட்லீ தமிழில் பல ஹிட் படங்கள் கொடுத்தவர், அதன் பிறகு ஹிந்தியில் களமிறங்கிய அவர் ஷாருக் கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கினார். அந்த படம் 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து இருந்தது.



ஜவான் சாதனையை முறியடித்த கல்கி!
[Monday 2024-07-01 18:00]

கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஜவான். இப்படம் உலகளவில் ரூ. 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. குறிப்பாக முதல் வாரத்தின் இறுதியில் ரூ. 517 கோடிக்கும் மேல் வசூல் செய்து, இதுவரை எந்த இந்திய திரைப்படமும் செய்யாத வசூல் சாதனையை ஜவான் நிகழ்த்தி இருந்தது. இதனை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருந்தனர்.



4வது முறையாக விஜய்யுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை!
[Monday 2024-07-01 18:00]

தளபதி விஜய் தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் GOAT. இப்படத்திற்கு பின் தளபதி 69 படத்தில் நடிக்கவுள்ளார். அவர் அரசியல் செல்லும் காரணத்தினால் இதுவே அவருடைய கடைசி படமாக இருக்கும் என்கின்றனர். தளபதி 69 படத்தை ஹெச். வினோத் இயக்கப்போவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரை வெளிவரவில்லை. நடிகை சமந்தா தான் விஜய்க்கு இப்படத்தில் ஜோடி என சொல்லப்படுகிறது.



கல்கி 2898 AD இரண்டாம் பாகம்: ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தயாரிப்பாளர்!
[Monday 2024-07-01 06:00]

கல்கி 2898 AD படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. எதிர்பார்த்த அளவுக்கு வசூலும் குவிந்து வருகிறது என்பதால், இந்த படம் 1000 கோடி வசூலை தொடுமா என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.



"அந்த விஷயத்தால் தான் அரவிந்த்சாமி கூட நடிக்கவில்லை" - ரகசியத்தை உடைத்த மீனா!
[Monday 2024-07-01 06:00]

90ஸ்-களில் பலரின் கனவுக் கன்னியாக வளம் வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது மீனா தமிழ் மற்றும் மலையாள படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.



கவினுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை!
[Sunday 2024-06-30 18:00]

தமிழ் திரைத்துறையில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் கவின். கடந்த மே மாதம் இவர் நடிப்பில் வெளிவந்த ஸ்டார் படத்திற்கு கலவையான விமர்சனம் கொடுத்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இப்படத்தை அடுத்து வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகும் மாஸ்க் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்கிறார்.


Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா