Untitled Document
July 8, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
விஜய்யின் கோட் படத்தின் முக்கிய இட உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்!
[Friday 2024-07-05 18:00]

விஜய் நடித்துவரும் கோட் திரைப்படம் பல வகையில் மக்களுக்கு ஸ்பெஷல். இந்த படத்தின் மூலம் முதன்முறையாக வெங்கட் பிரபு விஜய்யுடன் கூட்டணி அமைத்துள்ளார், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அதோடு தளபதி நடிக்கும் கடைசி படத்திற்கு முந்தைய படம் இது, எனவே திரையரங்குகளில் பெரிய அளவில் படத்தை கொண்டாட ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்களின் காட்சிகள் வரும் கூறப்பட்ட நிலையில் தற்போது அனுமதி இல்லாமல் விஜயகாந்த்தை AI மூலம் பயன்படுத்த கூடாது என பிரேமலதா விஜயகாந்த் வேறு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

படம் குறித்து ஸ்பெஷல் அறிவிப்புகள் ஏதாவது வருமா என்று காத்திருந்த ரசிகர்களுக்கு படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை வாங்கிய நிறுவனம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.

அஜித்தின் துணிவு படத்தின் தமிழக உரிமையை வாங்கிய ரோமியோ பிக்சர்ஸ் விஜய்யின் கோட் பட தமிழக உரிமையை பெற்றுள்ளார்களாம். இந்த தகவல் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com



நடிகை தீபிகா படுகோனேவின் புடவை உருவாக்க இத்தனை மணிநேரம் ஆனதா?
[Monday 2024-07-08 18:00]

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை தீபிகா படுகோனே. இவர் எந்த படத்தில் நடித்தாலும் அந்த படம் பெரிய அளவில் ஹிட் அடித்துவிடுகிறது. அண்மையில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் என பலர் நடிக்க வெளியான படம் கல்கி 2898ஏடி.



காஞ்சனா 4 குறித்து பேசிய ராகவா லாரன்ஸ்!
[Monday 2024-07-08 18:00]

ராகவா லாரன்ஸ் என்றால் நம் அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வரும் படம் காஞ்சனா தான். முனி படத்தில் துவங்கி காஞ்சனா 3 வரை அனைத்து திரைப்படங்களும் சூப்பர்ஹிட்டாகியுள்ளது. காஞ்சனா 4 வரும் என காஞ்சனா 3 படத்தின் இறுதியிலேயே ராகவா லாரன்ஸ் கூறியிருந்தார். அதே போல் பல பேட்டிகளிலும் அதற்கான வேலைகள் நடந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.



வரலக்ஷ்மி திருமணத்திற்கு மொத்தம் இத்தனை கோடி செலவு செய்தாரா சரத்குமார்?
[Monday 2024-07-08 06:00]

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தனது காதலர் நிக்கோலை சச்தேவ் என்பவரை கடந்த ஜூலை 3ம் தேதி திருமணம் செய்துகொண்டார். இந்தியாவில் மெஹந்தி, சங்கீத் விழாக்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற நிலையில், திருமணம் வெளிநாட்டில் நடைபெற்றது.



திடீரென ஓய்வை அறிவித்த ஜான் சினா: உச்சகட்ட சோகத்தில் ரசிகர்கள்!
[Monday 2024-07-08 06:00]

ஜான் சினாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக wrestling entertainment-ல் உலகப்புகழ் பெற்ற பிரபலமாக இருந்து வருகிறார். மேலும் ஹாலிவுட் படங்களில் நடித்து அவர் நடிகராகவும் அவர் ஜொலித்து வருகிறார். பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படங்கள் உட்பட அவர் பல ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார்.



உலக புகழ்ப்பெற்ற படங்களின் தயாரிப்பாளர் காலமானார்!
[Sunday 2024-07-07 17:00]

உலகப் புகழ்பெற்ற டைட்டானிக், அவதார் படங்களின் தயாரிப்பாளரான ஜான் லாண்டவ் காலமானதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. ஜான் லாண்டவ் அண்மைக் காலங்களில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.



இளையராஜாவை மறைமுகமாக ஒதுக்கி வெற்றி பெற்ற சுந்தர் சி!
[Sunday 2024-07-07 17:00]

80, 90களில் இளையராஜா தான் அனைத்து படங்களிலும் கிங் என்று சொல்வதற்கு ஏற்ப இசைஞானியாக வலம் வந்தார். அந்த வகையில் ஒரு படம் ஹிட் ஆகுதோ இல்லையோ இவர் பாடல் மூலம் அந்த படம் மக்களிடம் ரீச் ஆகிவிடும். அந்த அளவிற்கு இசைஞானி தான் அனைத்து படங்களின் வெற்றிக்கும் ஒரு உயிரோட்டமாக இருந்திருக்கிறார்.



'நான் யாருன்னு எனக்கு தெரியும்': வந்தந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ்!
[Sunday 2024-07-07 17:00]

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் ராயன். இப்படத்தை அவரே இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.



வரலட்சுமிக்காக அவரது கணவர் நிக்கோல் கொடுத்த விலையுயர்ந்த பரிசுகள்!
[Sunday 2024-07-07 08:00]

தமிழ் சினிமாவில் எந்த விதமான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் செம ஸ்கோர் செய்து நடிப்பவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். ஆரம்பத்தில் பிரபல இயக்குனர்களின் படங்களின் வாய்ப்புகள் எல்லாம் வந்தாலும் சரத்குமார் அனுமதிக்காததால் அதனை மிஸ் செய்திருக்கிறார்.



இந்தியன் 2 படத்தின் முதல் விமர்சனம்!
[Sunday 2024-07-07 08:00]

2024ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்துள்ளார். முதல் பாகம் 1996ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில், 28 ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார். இதுமட்டுமின்றி இந்தியன் 2 அடுத்த வருடம் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்.



நவீன தொழில்நுட்பம் மூலம் வலம் வரும் விஜயகாந்த்: பிரேமலதா கூறிய முக்கிய விடயம்!
[Saturday 2024-07-06 16:00]

திரைப்படங்களில் விஜயகாந்தின் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு முறையான அனுமதி பெற வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடிகர் விஜயகாந்தை கொண்டு வந்துள்ளனர். இதனை தேமுதிக பொதுச்செயலாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதாவிடம் முறையான அனுமதியை பெற்று செய்துள்ளனர்.



ப்ரீ புக்கிங்கில் இந்தியன் 2 செய்துள்ள வசூல்!
[Saturday 2024-07-06 16:00]

2024ஆம் ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் ஒன்று இந்தியன் 2. இப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சித்தார்த், எஸ்.ஜே. சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், விவேக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் வருகிற 12ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது.



ஆனந்த் அம்பானியின் சங்கீத் விழாவில் குவிந்த பிரபலங்கள்!
[Saturday 2024-07-06 16:00]

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமண முந்தைய சங்கீத் விழாவில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.



கதறி அழுத இயக்குனர் பா.ரஞ்சித்: அரசியல் பிரபலத்தின் கொலையால் அதிர்ச்சி!
[Saturday 2024-07-06 08:00]

தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் என்பவர் இன்று இரவு சென்னை பெரம்பூர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார். அவரது வீட்டின் அருகில் நின்றுகொண்டு நண்பர்கள் உடன் பேசி கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்து இருக்கிறது.



சூப்பர்ஸ்டார் படத்தில் இணைந்த ஸ்ருதி ஹாசன்!
[Saturday 2024-07-06 08:00]

நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழில் பெரிய வாய்ப்புக்காக தான் காத்திருந்தார். அது தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மூலமாக அவருக்கு கிடைத்து இருக்கிறது. அவர்கள் இருவரும் ஜோடியாக ஒரு பாடலில் நடித்து இருந்த நிலையில் அது பெரிய அளவில் வைரல் ஆனது. தற்போது லோகேஷ் இயக்கும் கூலி படத்தில் ஸ்ருதி ஹாசனை நடிக்க வைத்திருக்கிறார்.



இங்கிலாந்து நாட்டின் தேசிய விருதை பெற்ற தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம்!
[Friday 2024-07-05 18:00]

10வது லண்டன் நேஷனல் ஃபில்ம் அகாடெமி திரைப்பட விருதுகளில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், தனுஷ் நடிப்பில் உருவான “கேப்டன் மில்லர்” திரைப்படம், ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்’ என்ற பிரிவின் கீழ் விருது பெற்றுள்ளது. இந்த விருது வழங்கும் விழாவில், “கேப்டன் மில்லர்” படம், உலகின் பல சிறந்த வெளிநாட்டுப் படங்களுடன் இணைந்து பரிந்துரைக்கப்பட்டது, எனினும் அனைத்துப் படங்களையும் தாண்டி, லண்டனில் உள்ள போர்செஸ்டர் ஹாலில் நடந்த மதிப்புமிக்க 10 வது லண்டன் நேஷனல் ஃபில்ம் அகாடெமி திரைப்பட விருதுகளின் போது, சத்யஜோதி பிலிம்ஸின் ‘கேப்டன் மில்லர்’ ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட விருது’ பெற்றுள்ளது. இந்த செய்தினை ரசிகர்கள் தற்போது, உற்சாகத்துடன் பகிர்ந்து வருகிறார்கள்.


NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா