Untitled Document
October 5, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மனநிலை சரியில்லையா? - பயில்வானுக்கு பதிலடி கொடுத்த வெங்கடேஷ் பட்!
[Saturday 2024-10-05 06:00]

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் நான்கு வருடங்கள் நடுவராக இருந்தவர் வெங்கடேஷ் பட். அந்த நிகழ்ச்சி நடத்தும் நிறுவனம் டிவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், வெங்கடேஷ் பட்டும் அதில் இருந்து விலகிவிட்டார். அதன் பிறகு அதே நிறுவனம் மூலமாக சன் டிவியின் டாப் குக் டூப் குக் என்ற ஷோவை வெங்கடேஷ் பட் நடத்தினார். அது சமீபத்தில் தான் நிறைவு பெற்றது.

பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் வெங்கடேஷ் பட் பற்றி அவதூறாக பேசி இருக்கிறாராம். அவர் பல கோடி சம்பளமாக கேட்டார் என்றும், அதற்கு விஜய் டிவி ஒத்து கொள்ளாததால் தான் சன் டிவிக்கு சென்றுவிட்டார் என்றும் பயில்வான் பேசி இருந்தார்.

அதற்கு வெங்கடேஷ் பட் பதிலடி கொடுத்து தற்போது வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

"பயில்வான் ரங்கநாதன் என்னை பற்றி தரக்குறைவாக வீடியோ போட்டிருக்கிறார். அவரை எல்லோரும் கமெண்டில் திட்டுகிறீர்கள். "

"தயவு செய்து திட்டி மெசேஜ் போடாதீங்க. அவர் நிலைமை என்ன என்பது தெரியவில்லை. பாவம் அவர் பணத்திற்காக பண்ணுறாரா, மனநிலை சரியில்லையா என தெரியவில்லை. அவர் ஏதோ பொழப்புக்காக பண்ணுறாரு. அதை பண்ணிட்டு போகட்டும்."

"அந்த சாணியில் நாம் கல் எறிந்து, அந்த சாணி நம் முகத்தில் வீச வேண்டாம் என பார்க்கிறேன். உண்மை இல்லாமல் செய்யும் பல விஷயங்கள் சோசியல் மீடியாவில் வலம்வந்துகொண்டிருக்கிறது. இன்று என்னை பற்றி வந்திருக்கிறது. பொதுவாழ்க்கையில் இது ரொம்ப சாதாரணம்" என வெங்கடேஷ் பட் கூறி இருக்கிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com



ரசிகர்களை தெய்வங்கள் எனக்கூறி உருக்கமான நன்றியை தெரிவித்த ரஜினிகாந்த்!
[Friday 2024-10-04 20:00]

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில் உடல்நலம் பெற வாழ்த்தியவர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அவரது அடிவயிறுபகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அப்போலோ மருத்துவமனை தரப்பில், "நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார். அவர் 2 நாட்களில் வீடு திரும்புவார்.



கத்தி முனையில் நடிகை சோனா மிரட்டல்!
[Friday 2024-10-04 20:00]

நடிகர் சோனா ஏராளமான படங்களில் கவர்ச்சி மற்றும் காமெடி கலந்த ரோல்களில் நடித்து பிரபலம் ஆனவர். அவர் சென்னை மதுரவாயல் பகுதியில் இருக்கும் வீட்டில் வசித்து வருகிறார். சோனாவின் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் ஏசியை திருட முயற்சித்து இருக்கின்றனர். நாய் குரைப்பதை கேட்டு சோனா அங்கு சென்று பார்த்திருக்கிறார்.



மோகன்லாலுக்கு ஜோடியாகும் 34 வயது நடிகை!
[Friday 2024-10-04 20:00]

மலையாள திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் மோகன்லால். இவர் சமீபத்தில் ஹேமா கமிட்டி சர்ச்சையில் சிக்கியதை நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான். மோகன்லால் மற்றும் இயக்குனர் சத்யன் அந்திக்காடு கூட்டணியில் இதுவரை பல சூப்பர்ஹிட் படங்கள் வெளிவந்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு இந்த கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் தான் என்னும் எப்பொழும்.



தனது வளர்ச்சிக்கு துணையாக இருந்த வடிவேல் பாலாஜிக்காக புகழ் செய்த செயல்!
[Friday 2024-10-04 06:00]

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் தான் புகழ். முதல் 2 சீசன்களில் இவர் செய்த அட்டகாசங்களுக்கு ஒரு எல்லையே இல்லை என்று தான் கூற வேண்டும். இந்நிகழ்ச்சி கொடுத்த புகழ் இப்போது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான புகழ் பென்சி என்பவரை கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.



5 கோடி நஷ்டஈடு கேட்ட வடிவேலு: நீதிமன்றத்தில் சிங்கமுத்து கூறிய அதிரடி பதில்!
[Friday 2024-10-04 06:00]

நடிகர் வடிவேலு மற்றும் சிங்கமுத்து ஆகிய இருவரும் படங்களில் ஒன்றாக பல ஹிட் காமெடிகளில் நடித்தவர்கள். ஆனால், தற்போது அவர்களுக்கு நடுவில் கருத்து வேறுபாடு காரணமாக மோதல் இருந்து வருகிறது. நடிகர் சிங்கமுத்து அளிக்கும் பேட்டிகளில் வடிவேலு பற்றி பல்வேறு விஷயங்களை கூறி வருகிறார். இந்நிலையில் வடிவேலு சமீபத்தில் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சிங்கமுத்து தன்னை பற்றி துளி கூட உண்மையில்லாத பொய்களை அவதூறாக பேசி வருவதாக குற்றம்சாட்டி இருக்கிறார்.



தளபதி 69 அறிவிப்பு: விஜய்யுடன் முதல் முறையாக இணைந்த பிரபல நடிகை!
[Thursday 2024-10-03 18:00]

ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 69. இப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன் இருந்து, தளபதி 69ல் நடிக்கவுள்ள நட்சத்திரங்கள் குறித்து தொடர்ந்து அறிவிப்பை வெளியிட்டு வருகிறார்கள். பாலிவுட் நடிகர் அனிமல் பட புகழ் பாபி தியோல் இப்படத்தில் நடிப்பதாக முதல் அறிவிப்பு வெளிவந்தது.



இந்தியன் 3வது பாகம் குறித்து வெளிவந்த அதிரடி முடிவு!
[Thursday 2024-10-03 18:00]

ஷங்கர் இயக்கத்தில் ஐந்து வருடங்களாக தயாரிப்பில் இருந்த இந்தியன் 2 படம் கடந்த ஜூலை மாதம் திரைக்கு வந்தது. பெரிய பட்ஜெட்டில் ஷங்கர் பிரம்மாண்டமாக படத்தை இயக்கி இருந்தார். ஆனால் அதற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் படத்தை நெட்டிசன்கள் அதிகம் ட்ரோல் செய்ததையும் பார்த்தோம். இந்த படம் திரையில் மட்டுமில்லாமல் ஓடிடியில் வெளிவந்தது.



பிரபல நடிகையுடன் திருமண கோலத்தில் ஜெயம் ரவி!
[Thursday 2024-10-03 18:00]

நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை பிரியங்கா மோகன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி சமீப காலமாக சர்ச்சையில் சிக்கி வருகின்றார். ஆம் இவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி ஆர்த்தியை விட்டு பிரிந்துவிட்டார்.



இயக்குனர் ஆன நடிகர் சூர்யா மகள் தியா!
[Thursday 2024-10-03 06:00]

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோரின் மகள் தியா தற்போது இயக்குனராக அறிமுகம் ஆகி இருக்கிறார். ஏற்கனவே குழந்தைகளில் படிப்புக்காக தான் மும்பையில் தற்போது செட்டில் ஆகி இருப்பதாக ஜோதிகா கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ஜோதிகா மகள் படம் இயக்குவதில் ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கிறார்.



சீரியல் நடிகர் பப்லு ப்ருத்விராஜிற்கு அடித்த ஜாக்பாட்!
[Thursday 2024-10-03 06:00]

பப்லு என்று அழைக்கப்படும் நடிகர் ப்ருத்விராஜ் தன்னுடைய ஆரம்ப காலத்திலேயே மறைந்த கே.பாலசந்தர் இயக்கத்தில் படங்களில் நடித்து ஏராளமாக ரசிகர்களை கவர்ந்தார். அப்படியே நடித்துவந்தவர் பின் சின்னத்திரை பக்கமும் வந்தார், ஏராளமான தொடர்களிலும் நடித்து வந்தார். வாயி ராணி, கண்ணான கண்ணே போன்ற தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இடையில் நிறைய சர்ச்சைகளிலும் சிக்கி வந்தவர் இப்போது சினிமாவில் படு பிஸியாகிவிட்டார்.



விரதம் முடித்துவிட்டு திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற பவன் கல்யாண்!
[Wednesday 2024-10-02 17:00]

திருப்பதி லட்டு விவகாரத்தில் 11 நாட்கள் விரதம் இருந்த பவன் கல்யாண் திருப்பதிக்கு பாத யாத்திரை சென்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டில் மாட்டிறைச்சியின் கொழுப்பு சேர்க்கப்படுவது உறுதியான சம்பவம் பெரும் சர்ச்சையாக மாறியது.



சிவகார்த்திகேயன் நிறுவனம் பெயரில் மோசடி!
[Wednesday 2024-10-02 17:00]

நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி, தனது SK புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலமாக மற்ற சின்ன நடிகர்களின் படங்களை தயாரித்தும் வருகிறார். சமீபத்தில் சூரியின் கொட்டுக்காளி படத்தை அவர் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் SK புரொடக்ஷன்ஸ் பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.



வெளிநாட்டில் முதன்முறையாக ஒளிபரப்பாக போகும் ரஜினியின் வேட்டையன்!
[Wednesday 2024-10-02 17:00]

ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாக இருக்கிறது. அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தில் பஹத் பாசில், ராணா, அமிதாப் பச்சன் என பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வழக்கம் போல் பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் இடையில் நடந்தது, அதில் ரஜினியின் பேச்சு அட்டகாசமாக இருந்தது.



'பிக் பாஸ் 8' உறுதியான 16 போட்டியாளர்கள் பட்டியல்!
[Wednesday 2024-10-02 07:00]

விஜய் டிவியின் பிக் பாஸ் 8ம் சீசன் இந்த வார இறுதியில் தொடங்க இருக்கிறது. அதனால் போட்டியாளர்களாக யாரெல்லாம் வர போகிறார்கள் என பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில் தற்போது இருந்து வருகிறது. சினிமா நடிகர்கள், சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் வர இருக்கின்றனர். ஏற்கனவே உத்தேச போட்டியாளர்கள் லிஸ்ட் வெளியவந்துவிட்டது எல்லோருக்கும் தெரியும்.



நெப்போலியன் மகன் திருமணம் ஜப்பானில் நடக்க காரணம் என்ன தெரியுமா?
[Wednesday 2024-10-02 07:00]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர், அரசியல்வாதியாகவும் இருந்தவர், தற்போது அமெரிக்காவில் தொழிலதிபர் என பன்முகம் கொண்டவர் நெப்போலியன். இவ்ருடைய மூத்த மகன் தனுஷூக்கும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அக்ஷயாவுக்கும் சில மாதங்களுக்கு முன் நிச்சயம் ஆனது. இவர்களுடைய திருமணம் நவம்பர் 7ந் தேதி ஜப்பானில் நடக்க உள்ளது. இதன் காரணமாக நெப்போலியன் அவருடைய குடும்பத்துடன் பயணம் செய்து ஜப்பானில் திருமண வேலைகளை கவனித்து வருகிறார்.


Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா