Untitled Document
November 5, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ராமாயணா திரை விமர்சனம்!
[Thursday 2026-11-05 16:00]

இந்திய சினிமாவின் உச்சமாக ரூ 2000 கோடி பட்ஜெட்டில் நமித் மல்கோத்ரா தயாரிப்பில் நிதிஷ் இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி நடிப்பில் இன்று வெளிவந்துள்ளது இந்த பிரமாண்ட படைப்பான ராமாயண எப்படியுள்ளது? பார்ப்போம். ராமாயணம் பல வெர்சனில் பல காலங்களில் நாம் பார்த்து இருப்போம், தற்போது இந்த காலத்திற்கு ஏற்றவாறு விஷ்வல் விருந்தை பொருத்தி எடுத்துள்ளனர். இந்த கதை இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எல்லோருக்கும் தெரிந்த கதை தான், இதில் நாங்கள் சொல்ல புதிதாக ஏதுமில்லை.

ராமர் முடிசூடும் நேரத்தில் கைகேயி தன் மகன் பரதனுக்கு நாடு வேண்டும் ராமர் வனவாசம் செல்ல வேண்டும் என்று கோரிக்கையை வைக்க, அப்பாவின் கோரிக்கையை தட்ட முடியாமல் ராமர், சீதை, லக்‌ஷ்மணன் ஆகியோர் வனவாசம் செல்கின்றனர்.

அப்படி அவர்கள் சென்ற இடத்தில் ராமர் மீது ராவணன் தங்கை சூர்பனகை ஆசைக்கொள்ள, அண்ணனிடமே இப்படி பேசியதால், லக்‌ஷ்மணனோ சூர்பனகை மூக்கை வெட்டுகிறார், இதனால் கோபமான சூர்பனகை தன் அண்ணன் ராவணனிடம் சொல்ல, ராவணன் கோபம் கொண்டு ராமரை வீழ்த்த வந்த இடத்தில் தனியாக இருக்கும் சீதையை கடத்தி செல்கிறார்.

இதன் பின் ராமர் ராவணன் நாட்டுக்கே சென்று எப்படி சீதையை மீட்கிறார், இந்த பயணத்தில் அவருக்கு என்ன தடைகள் வந்தது, யார் யார் எல்லாம் உதவினார்கள் என்பதே இதன் கதை, இதை இந்த காலக்கட்டத்தில் எப்படி எடுத்துள்ளார்கள் என்பதை பார்ப்போம்.

படத்தின் களம் ராவணன் யஷ்-இடமிருந்தே தொடங்குகிறது, அசுரர் குலம் செழிக்க அவர் இருக்கும் தவம் அதை தொடர்ந்து அவரின் தவத்திற்கு, கிடைக்கும் வரம் அதை வைத்து ஒட்டு மொத்த அசுரர் குலத்தையும் தலை நிமிர வைத்த உலகையே தன் கட்டுபாட்டில் கொண்டு வர யஷ் அனைவரையும் அடித்து தும்சம் செய்வது என யஷ் ஒன் மேன் ஷோ தான், டாக்சிக்-ல் விட்டதை இதில் பிடித்துவிட்டார்.

பிறகு ராமராக ரன்பீர் அத்தனை கச்சிதம், எந்த ஒரு இடத்திலும் தன் கதாபாத்திரம் மீறி சின்ன ரியாக்ஸன் கூட எல்லை மீறாமல் மிக அளவான நடிப்பில் கவர்ந்துள்ளார், சீதையாக சாய் பல்லவியும் சிறப்பான தேர்வு. இப்படத்தின் கதை நாம் செவி வழியாகவும், சீரியல், சினிமா என பலமுறை பார்த்தது,

அதில் இந்த ராமாயணம் எந்த விதத்தில் வித்தியாசமும் இல்லை, ஆனால் நாம் பார்த்த வெர்ஷனை விட இதில் பிரமாண்டமும் விஷ்வல் ஆக காட்சிகளும் நம்மை பிரமிக்க வைக்கிறது.

அதிலும் குறிப்பாக முதல் பாதியில் ராவணன், இந்திரன் சண்டை காட்சி, ராமர் அரக்கர், அரக்கியுடன் சண்டை போடுவது இதெல்லாம் விட இரண்டாம் பாதியில் வரும் சடாயு ராவணன் சண்டைகாட்சி பிரமாண்டத்தின் உச்சம், செம விருந்து.

அதே நேரத்தில் முதல் பாதி சில இடங்களில் பொறுமையாக சென்றாலும் நமக்கு எங்கும் சோர்வை தரவில்லை, இந்த மேஜிக் ராமர் வனவாசம் சென்றதும் கொஞ்சம் சோர்வை தர ஆரம்பித்துவிட்டது.

நிறைய பேண்டசி விஷயங்கள் வந்தாலும் முதல் பாதி-யில் இருந்த எமோஷ்னல் கனேக்ட் மிஸ் ஆகிறது. கிளைமேக்ஸ் சடாயு சண்டைக்காட்சியே மிகச்சிறப்பு, படத்தில் கண்டிப்பாக பாராட்ட வேண்டிய விஷயம் டப்பிங் தான். மிகச்சிறப்பாக டப்பிங் அதிலும் லிப்-சிங்க் அத்தனை நேர்த்தியாக செய்துள்ளனர்.

மேலும் இதை இரண்டு பாகமாக எடுத்துள்ளனர், அதனால் எல்லோரும் எதிர்பார்க்கும் ஹனுமான் கதாபாத்திரம் இரண்டாம் பாகத்தில் தான் வருகிறது. டெக்னிக்கலாக கண்டிப்பாக எல்ல விதத்திலும் டாப் நாச் தான், ஆனால், இசை ஏதோ ஒன்று மிஸ்ஸிங் என தோன்றுகிறது.

க்ளாப்ஸ்

நடிகர்கள், நடிகைகள் பங்களிப்பு, முக்கியமாக யஷ் வரும் காட்சிகள். சிஜி ஒர்க் ஹாலிவுட் தரம் சண்டைக்காட்சிகள்

பல்ப்ஸ்

ஆங்காங்கே கொஞ்சம் மெதுவாக நகரும் காட்சிகள். முதல் பாதி அளவிற்கு இரண்டாம் பாதி எமோஷ்னல் கனேக்ட் இல்லாமல் போனது.

மொத்தத்தில் இந்த இராமாயணம் கொஞ்சம் பொறுமை இருந்தால் கண்டிப்பாக ஒரு நல்ல விஷ்வல் ட்ரீட் தான்.

3/5

  
  
   Bookmark and Share Seithy.com



ஜெயிலர் 2 வெளிவந்த 21 நாட்களில் உலகம் முழுவதும் செய்துள்ள வசூல்!
[Thursday 2026-11-05 16:00]

ஜெயிலர் 2 நெல்சன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்து ரசிகர்கள் எல்லோரும் கொண்டாடி தீர்த்த படம். இப்படத்தின் மூலம் ரஜினிகாந்த் தன் திரைப்பயணத்தில் 17வது இண்டஸ்ட்ரி ஹிட் ஆகி ரஜினி திரைப்பயணத்தில் மேலும் ஒரு மைல் கல் படமாக அமைந்துள்ளது.



"சூர்யாவின் படங்களை நிராகரிக்கவே இல்லை" - விளக்கம் கொடுத்த நஸ்ரியா!
[Thursday 2026-11-05 07:00]

நடிகர் சூர்யாவின் சீன் படம் வரும் நவம்பர் 6ம் தேதி திரைக்கு வருகிறது. ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அந்த படத்தில் நஸ்ரியா ஹீரோயினாக நடித்துள்ளார். சமீபத்தில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, இதற்குமுன் நஸ்ரியா மூன்று முறை என்னுடைய படங்களில் நடிக்க மறுத்திருக்கிறார் என மேடையில் தெரிவித்தார்.



ஜெயிலர் 2 ஓடிடி ரிலீஸ் தேதி!
[Thursday 2026-11-05 07:00]

நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2 படம் பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை படைத்து இருக்கிறது. 800 கோடி என்ற பிரம்மாண்ட மைல்கல்லை படம் ஏற்கனவே கடந்துவிட்டது. மேலும் படத்தை ஓடிடியில் பார்க்க ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.



பொங்கல் ரேஸில் குவியும் படங்கள்!
[Wednesday 2026-11-04 16:00]

பொங்கல் தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகை. அதை விட 3 நாட்களுக்கு மேல் விடுமுறை வரும் பண்டிகை. இந்த பண்டிகையை சினிமாகாரர்கள் யாரும் தவறவிட மாட்டார்கள். எப்படியாவது தங்கள் படங்களை ரிலிஸ் செய்து விட வேண்டும் என போட்டி போடுவார்கள். அந்த வகையில் பொங்கல் விருந்தாக பிரமாண்டமாக வரவிருந்த தர்மன் படம் தற்போது தள்ளி போனதால் பல படங்கள் பொங்கலுக்கு குவிந்து வருகின்றன.



சீன் திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் இதுவரை செய்துள்ள வசூல்!
[Wednesday 2026-11-04 16:00]

சீன் திரைப்படம் வருகிற 6-ஆம் தேதி வெளியாகும் திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்ப்போம். சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படம் சீன். ஆவேசம் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்த ஜீது மாதவன் படம் என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.



ராமாயணா இத்தனை கோடிகள் வசூல் செய்தால் தான் வெற்றி பெறுமா?
[Wednesday 2026-11-04 16:00]

இந்திய சினிமாவே இதுவரை பார்த்திராத பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம். ரூ. 2000 கோடி பட்ஜெட்டை தாண்டி இப்படத்தை நிதேஷ் இயக்க ரன்பீர் கபூர் ராமராகவும், யஷ் ராவணனாகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் முன்பதிவு தற்போது தொடங்கி ரூ. 70 கோடிகளை தாண்டியுள்ளது, அதிலும் வெளிநாடுகளில் இந்த படத்திற்கு நல்ல புக்கிங் நடந்து வரும் நிலையில், தற்போது ஷாக்கிங் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.



அஜித் மகளாக நடிக்கிறாரா ஸ்ரீலீலா?
[Wednesday 2026-11-04 07:00]

அஜித் அடுத்து நடிக்க இருக்கும் டேர் டெவில் படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில் நடிகை ஸ்ரீலீலாவும் கலந்துகொண்டார். ஷாலினி அஜித் தயாரிக்கும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் இணைந்திருக்கின்றனர்.



தர்மன் படத்தில் இணைந்த இளம் டாப் ஹீரோயின்!
[Wednesday 2026-11-04 07:00]

சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் அடுத்து உருவாகி வரும் தர்மன் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த படத்தில் ஏற்கனவே நயன்தாரா, ராசி கண்ணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தற்போது மேலும் ஒரு முன்னணி ஹீரோயின் இணைந்திருக்கிறார்.



19 நாட்களில் ஜெயிலர் 2 தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல்!
[Tuesday 2026-11-03 16:00]

ஜெயிலர் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் 19 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு கடந்த மாதம் வெளியான திரைப்படம் ஜெயிலர் 2. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.



பிரபல இயக்குனருக்கு ஐபோன் பரிசளித்த நடிகர் சிவகார்த்திகேயன்!
[Tuesday 2026-11-03 16:00]

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த வருடம் கடைசியாக வெளியான திரைப்படம் பராசக்தி. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன், ஸ்ரீலீலா, அதர்வா, ஜெயம் ரவி என பலர் நடித்துள்ள இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன, வசூலும் ஓரளவிற்கு வந்தது. இப்படத்திற்கு பிறகு சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். கமல்ஹாசன் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.



ராமாயணா முன்பதிவு வசூல் விவரம்!
[Tuesday 2026-11-03 16:00]

ராமாயணா இந்திய சினிமாவே ஆவலுடன் காத்திருக்கும் படம். ஆம் ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் ராமாயணா படத்தை மிகப்பிரமாண்டமாக எடுத்துள்ளனர். இப்படத்தில் ராமராக ரன்பீர், ராவணனாக யஷ், சீதையாக சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர், இந்த படம் இந்த வருடம் தீபாவளி விருந்தாக ராமாயணா படம் வெளிவரவுள்ளது.



ரோலக்ஸ் பட அப்டேட் கொடுத்த சூர்யா!
[Tuesday 2026-11-03 07:00]

சூர்யா நடிப்பில் அடுத்து சீன் படம் திரைக்கு வருகிறது. அதன் ப்ரோமோஷனுக்காக ஹைதராபாத்தில் நேற்று ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் சூர்யா தனது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து இருக்கும் ரோலக்ஸ் படம் பற்றி பேசி இருக்கிறார்.



யாஷிகா ஆனந்த் முகத்திற்கு என்ன ஆனது? - போட்டோ பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி!
[Tuesday 2026-11-03 07:00]

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார். அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள். யாஷிகா மிகவும் கவர்ச்சியாக அடிக்கடி வெளியிடும் போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகிறது.



18 நாட்களில் ஜெயிலர் 2 தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல்!
[Monday 2026-11-02 16:00]

தமிழ்நாட்டில் ஜெயிலர் 2 திரைப்படம் 18 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த பாக்ஸ் ஆபிஸ் விவரத்தை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். இயக்குநர் நெல்சன் - ரஜினிகாந்த் கூட்டணியில் இரண்டாவது முறையாக இணைந்த திரைப்படம் ஜெயிலர் 2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இன்னும் பிரம்மாண்டமான கதைக்களம், மாஸ் காட்சிகள், பட்ஜெட் என ரசிகர்களை கவரும் வகையில் இப்படம் அமைந்திருந்தது.



நடிகர் அஜித்தின் Dare Devil படத்திற்கு போடப்பட்ட பூஜை!
[Monday 2026-11-02 16:00]

கடந்த 2025ம் வருடம் அஜித்தின் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இப்படம் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கி வசூல் வேட்டை செய்தது. இப்படத்திற்கு பிறகு அஜித் எந்த படத்திலும் கமிட்டாகாமல் கார் ரேஸில் முழு கவனத்தையும் காட்டி வந்தார்.


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா