Untitled Document
November 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
காட்ஸில்லா மைனஸ் ஜீரோ: திரை விமர்சனம்!
[Saturday 2026-11-21 18:00]

ஜப்பானிய மொழியில் காட்ஸில்லா மைனஸ் ஒன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளியாகியுள்ள காட்ஸில்லா மைனஸ் ஜீரோ எப்படி இருக்குன்னு பார்ப்போம் வாங்க. 1947-யில் காட்ஸில்லா ஏற்படுத்திய பாதிப்புகள் மற்றும் போரின் விளைவுகளில் இருந்து ஜப்பான் மீண்டு வருகிறது. இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், காட்ஸில்லாவின் ஜின்சா தாக்குதலில் இருந்து தப்பிய நோரிகா ஓஷியை திருமணம் செய்துள்ளார் முன்னாள் தற்கொலைத் தாக்குதல் விமானி கோய்ச்சி ஷிகிஷிமா.

இந்த தம்பதிக்கு தத்தெடுக்கப்பட்ட மகள் அகிகோ உள்ள சூழலில், காட்ஸில்லாவின் செல்களுக்கு ஆட்பட்டதன் விளைவாக, நோரிகாவின் உடல் உருமாற்றத்தின் தொடக்கத்தில் உள்ளது. கோய்ச்சி இதனை யாருக்கும் தெரியாதபடி பார்த்துக்கொள்ள, ஆதரவற்றோர் இல்லத்தை நடத்திவரும் சுமிகோ தம்பதிக்கு ஆதரவாக உள்ளார்.

இந்த நிலையில், பேரிடர் மீட்புப் பணியகத்தின் இயக்குநரான கென்ஜி நோடா குழு ஒன்றை அமைக்கிறார். சக்தி வாய்ந்த கிடோரா டிராகன் மட்சுமோட்டோ நகரை மோசமாக தாக்குகிறது.

அதனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் ஜப்பான் விழிபிதுங்கி நிற்கிறது. அப்போதுதான் ஹிரோஷிமா குண்டுவீச்சில் தப்பிய கன்சி முரகாமி மற்றும் அவரது உதவியாளர் அகிரா ஹகிவாரா உள்ளிட்ட விஞ்ஞானிகள், அந்தத் தாக்குதலை ஆவணப்படுத்தி, நோடாவிடம் தங்கள் கண்டுபிடிப்புகளை தெரிவிக்கின்றனர்.

விண்கல்லில் இருந்து கூழ்மப் பொருளாக வந்த உயிரினம், உள்ளூர் வனவிலங்குகளை உட்கொண்டு தனது தற்போதைய வடிவத்தை பெற்றுள்ளதை அனைவரும் காணொளியில் பார்க்கின்றனர். இதனை எப்படி சமாளிப்பது என்று எல்லோரும் குழப்பத்தில் இருக்க, இறந்துவிட்டதாக கருதிய காட்ஸில்லா உயிருடன் இருப்பது தெரிந்து மேலும் அதிர்ச்சியடைகின்றனர்.

அதன் பின்னர் நோடா தலைமையிலான குழு கோய்ச்சி, நோரிகா தம்பதியின் உதவியுடன் எப்படி இரண்டு மான்ஸ்டர்களிடம் இருந்து ஜப்பானை காப்பாற்றியது என்பதே மீதிக்கதை.

2023-யில் வெளியான காட்ஸில்லா மைனஸ் ஒன் படத்தை இயக்கிய தகாஷி யமஸாகி இப்படத்தையும் இயக்கியுள்ளார். பேரழிவில் இருந்து மீண்டு வந்த ஜப்பான் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப சிரமமப்படும் காட்சிகளை நேர்த்தியாக காட்டியுள்ளார்.

குறிப்பாக, அணுகுண்டு தாக்குதலால் ஹிரோஷிமா சந்தித்த கோரத்தை காட்டிய விதம் மனதை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. போரினால் நிம்மதி இழந்து வாழும் மக்களுக்கு, கிடோரா எனும் மான்ஸ்டரால் பேராபத்து வரப்போகிறது என்பதை படமெடுத்து காட்டும் காட்சி பார்வையாளர்களை பயமுறுத்தும்.

இவ்வாறாக, கிடோரா மற்றும் காட்ஸில்லா வரும் வரை பார்வையாளர்களை எப்படி சோர்வடையாமல் பார்த்துக்கொள்வது என்பதை, இதுபோன்ற காட்சிகள் மூலம் இயக்குநர் சிறப்பாக கையாண்டுள்ளார். மற்றொருபுறம் கணவன், மனைவி மற்றும் தத்தெடுக்கப்பட்ட மகள் ஆகியோரது வாழ்க்கையையும் அழகாக காட்டியுள்ளார்.

குறிப்பாக, சிறுமி சே நகாடமியை ஆதரவற்றோர் இல்லத்தில் விட்டுவிட்டு, நாங்கள் கண்டிப்பாக திரும்பி வருவோம் என்று கமிகி, மினாமி கூறும்போது அவள் Have trip என்று சொல்வது நெகிழ்ச்சி. இதுபோன்ற சென்டிமென்ட் காட்சிகள் ஒருபுறம் ஒர்க்அவுட் ஆன போதிலும், கிடோரா நகரங்களை நாசம் செய்துகொண்டிருக்கும்போது எப்போதான்பா அவன் வருவான் என்று நாம் கேட்கும் அளவிற்கு தாமதமாகவே காட்ஸில்லா வருகிறது.

என்றாலும், காட்ஸில்லா மற்றும் கிடோரா மோதும் காட்சிகள் மிரள வைக்கின்றன. அந்த சண்டையில், "ஜெயிச்சுரு மாறா" என்று நாம் கேட்கும் அளவிற்கு காட்ஸில்லா மீது பரிதாபம் வருகிறது. கதையின் நாயகனான ரியூனோஸுக்கி கமிகி எமோஷனல் காட்சிகள் யதார்த்தமாக நடித்துள்ளார்.

அவரது மனைவியாக நடித்துள்ள மினாமி ஹமாபே, தன் உயிரை தியாகம் செய்ய முன்வரும் காட்சியில் நெகிழ வைக்கிறார். வானிலை ஆராய்ச்சியாளராக வரும் மஸாமி கிளைமேக்சில் கலங்க வைக்க, 81 வயது நடிகரான மின் தனகா வில்லத்தனமாக சிரிக்கும் காட்சியில் பயமுறுத்துகிறார். இவர்களுடன் மக்களைக் காப்பாற்ற போராடும் ஹிடேட்டகா யோஷியோகா பல இடங்களில் நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார்.

ஹிரோஷிமா நகர அழித்த உண்மை சம்பவத்தையும், மான்ஸ்டர்களின் கோரதாண்டவத்தை நேர்த்தியாக கலந்து திரைக்கதை அமைத்து அசத்தியுள்ளார் இயக்குநர் தகாஷி யமஸாகி. IMAX தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட முதல் ஜப்பானிய திரைப்படம் என்ற பெருமையுடன் இந்த காட்ஸில்லா மைனஸ் ஜீரோ வெளியாகியுள்ளது.

அதற்கு ஏற்ப டெக்னிக்கலாக மிரட்டியுள்ளது படக்குழு. காட்சிகள், ஒலிக்கலவை, பின்னணி இசை என அனைத்தும் ஹாலிவுட்டிற்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளன.

க்ளாப்ஸ்

யதார்த்தமான காட்சியமைப்புகள்

பின்னணி இசை

ஒலிக்கலவை

கிராஃபிக்ஸ் காட்சிகள்

நெகிழவைக்கும் சென்டிமென்ட்

பல்ப்ஸ்

குறைசொல்லுபடி எதுவுமில்லை

மொத்தத்தில் இந்த காட்ஸில்லா மைனஸ் ஜீரோ ஒரு கொண்டாட்டம். கண்டிப்பாக குழந்தைகளுடன் இப்படத்தை ரசிக்கலாம்.

  
  
   Bookmark and Share Seithy.com



"ரஜினியை தொந்தரவு செய்வேன்" - ராஷி கன்னா வெளிப்படையான பேச்சு!
[Monday 2026-11-23 16:00]

நடிகை ராஷி கன்னா தர்மன் படப்பிடிப்பு தளத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடனான அனுபவத்தை பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தர்மன். ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சிம்ரன், ராஷி கண்ணா, ஸ்ரீலீலா மற்றும் ராம் பொதினேனி என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.



"என் குடும்பத்தினரை தாக்கினால் முழு போராளியாக மாறிவிடுவேன்" - ராஷ்மிகா கடும் எச்சரிக்கை!
[Monday 2026-11-23 16:00]

சமூக வலைத்தளங்களில் பரவும் தேவையற்ற ட்ரோலிங் மற்றும் தனிப்பட்ட விமர்சனங்களுக்கு எதிராக நடிகை ராஷ்மிகா மந்தனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்; அதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். தென்னிந்தியவை தாண்டி இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா மந்தனா. இவர் கடந்த ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்துகொண்டார். இதை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ரணபாலி திரைப்படம் வெளியானது. அடுத்ததாக, மைசா, ராக்கா ஆகிய திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளிவரவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



அனிருத் திருமண வரவேற்பில் நடிகர் அஜித்!
[Monday 2026-11-23 07:00]

இசையமைப்பாளர் அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இரண்டாவது நாளாக நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடந்த வரவேற்பில் நடிகர் அஜித், சிம்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். கிரிக்கெட் வீரர் தோனி உட்பட பல முக்கிய கிரிக்கெட் வீரர்களும் கலந்து கொண்டனர்.



தள்ளிவிடப்பட்ட நடிகை தேவயானி: திருமண நிகழ்ச்சியில் கோபமாகி கத்திய வீடியோ!
[Monday 2026-11-23 07:00]

நடிகை தேவயானி 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர். அவர் தற்போது சின்னத்திரையில் மட்டும் நடித்து வருகிறார். மேலும் அவரது இரண்டு மகள்களும் சினிமாவில் நுழைந்து இருக்கின்றனர். அவரது மகள் பிரியங்கா தற்போது ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.



ஓ.ம் திரைப்படத்தில் சண்டை காட்சிகளில் சாய் பல்லவிக்கு டூப்பா?
[Sunday 2026-11-22 18:00]

ஓ.ம் திரைப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடிகை சாய் பல்லவிக்கு டூப் போட்ட பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகியுள்ளன. அவர் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான அமரன் திரைப்படத்தில் இந்து ரெபேக்கா வர்கீஸ் எனும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் நடிகை சாய் பல்லவி. இதன்பின், மீண்டும் ராஜ்குமார் இயக்கத்தில் இவர் நடித்து கடந்த 20-ஆம் தேதி வெளியான திரைப்படம்தான் ஓ.ம்.



16 நாட்களில் சீன் திரைப்படம் செய்துள்ள வசூல்!
[Sunday 2026-11-22 18:00]

சூர்யாவின் சீன் திரைப்படத்தின் வசூல் விவரங்களை நாம் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். அந்த வகையில், தற்போது 16 நாட்களில் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.



அனிருத் - காவ்யா திருமண வரவேற்பில் விஜய் அணிந்து வந்த ஆடையின் விலை!
[Sunday 2026-11-22 18:00]

நேற்று அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு விழா ஆடம்பரமாக நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்துகொண்டார். இந்த திருமண வரவேற்பில் விஜய் அணிந்து வந்த ஆடை அனைவரின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில், அந்த ஆடையின் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.



ஓம் திரைப்படம் முதல் நாள் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல்!
[Saturday 2026-11-21 18:00]

இந்த வாரம் தனுஷ் நடிப்பில் வெளியான ஓம் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில், முதல் நாள் தமிழ்நாடு வசூல் எவ்வளவு வந்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நேற்று வெளியான திரைப்படம் ஓம். சாய் பல்லவி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும், மம்மூட்டி, சாய் பல்லவி, இந்திரன்ஸ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.



ரூ. 2000 கோடி வசூல் செய்யுமா ராமாயணா?
[Saturday 2026-11-21 18:00]

ராமாயணா திரைப்படம் இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரூ. 2000 கோடி வசூல் என்கிற இமாலய இலக்கை இப்படம் எட்டுமா, இதுவரை இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.



கயாடு லோஹர் நடிப்பதை தாண்டி செய்யும் ஒரு விஷயம்!
[Saturday 2026-11-21 07:00]

நடிகை கயாடு லோஹர் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். அவர் கைவசம் ஏராளமான படங்கள் இருக்கிறது. இளசுகளை அதிகம் கவர்ந்து வரும் கயாடு லோஹருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 3.7 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



புதிய கார் வாங்கியுள்ள சீரியல் நடிகை ஆல்யா மானசா!
[Saturday 2026-11-21 07:00]

தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் ஆசை நாயகியாக இருப்பவர் தான் நடிகை ஆல்யா மானசா. நடனத்தில் ஆர்வம் கொண்டவர் டான்ஸ் ஷோக்கள் மூலம் தொலைக்காட்சி பக்கம் வந்தார். அப்படியே விஜய் டிவி பக்கம் சீரியல் நாயகியாக களமிறங்க ராஜா ராணி சீரியலில் நடித்தார், முதல் சீரியலே அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடிக் கொடுத்தது.



வசூலில் அடிதூள் கிளப்பும் 'சீன்'!
[Friday 2026-11-20 16:00]

2026 யாருக்கு எவ்வளவு ஸ்பெஷல் என்பது தெரியவில்லை. ஆனால் நடிகர் சூர்யாவிற்கு இந்த வருடம் மிகவும் ஸ்பெஷலோ ஸ்பெஷல் தான். படப்பிடிப்பு முடிந்து ரிலீஸிற்கு தயாராக இருந்த கருப்பு படம் மக்களிடம் போய் சேர்வதற்குள் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்தது. ஆனால் படம் ரிலீஸ் ஆனதும் தாறுமாறு வெற்றியை கண்டது, பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தியது.



ஆண் குழந்தைக்கு தாயான நடிகை சமந்தா!
[Friday 2026-11-20 16:00]

கர்ப்பமாக இருந்த சமந்தாவிற்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் சமந்தா, இந்த ஆண்டு மா இண்டி பங்காரம் திரைப்படத்தின் மூலம் ரூ. 100 கோடி வசூல் சாதனை படைத்தார். இப்படத்தின் வெற்றியை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வந்த நிலையில், அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் வகையில், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இதனால் சினிமாவிலிருந்து சிறிது காலம் ஓய்வில் இருந்து வந்தார்.



GTA 6 ஒரே நாளில் ரூ. 22,000 கோடி வருவாய்!
[Friday 2026-11-20 16:00]

நேற்று (நவம்பர் 19) வெளியான கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ VI (GTA 6) கேம் ஒரே நாளில் 22,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விவரமாக பார்க்கலாம் வாங்க. GTA கேம் என்பது விளையாட்டு என்பதை தாண்டி பலருக்கும் அது ஒரு எமோஷனலான விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக GTA 5 கடந்த 13 ஆண்டுகளாக கேமிங் உலகை ஆண்ட ஒன்று. இதுவரை இந்த கேம் 35 million copies விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு இந்த கேம் மீது ரசிகர்கள் காதல் கொண்டுள்ளனர்.



நிகழ்ச்சியில் மிஷ்கின் தவறாக தொட்டாரா? - சர்ச்சைக்கு கீர்த்தி சுரேஷ் விளக்கம்!
[Friday 2026-11-20 07:00]

கீர்த்தி சுரேஷ், தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகை. கடைசியாக இவரது நடிப்பில் டோரதி, ரிவால்வர் ரீட்டா ஆகிய படங்கள் வந்தன. இதில் கீர்த்தி சுரேஷிற்கு டோரதி படம் மட்டுமே வெற்றியை கொடுத்தது, ஆனால் இதில் கொஞ்ச நேரம் மட்டுமே இவரது காட்சிகள் வரும். அடுத்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சத்தியவான் சாவித்திரி என்ற படம் வெளிவர உள்ளது.


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா