Untitled Document
November 27, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
விஜய்யின் ஆறு மாத ஆட்சி: விஜய் சேதுபதி சொன்ன விமர்சனம்!
[Friday 2026-11-27 07:00]

முதல்வராக விஜய் பதவியேற்று ஆறு மாதம் ஆகும் நிலையில், அது பற்றி விஜய் சேதுபதி பேசியது வைரல் ஆகி இருக்கிறது. நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசும்போது முதல்வர் விஜய்யை விமர்சித்ததாக சர்ச்சை வெடித்தது. அதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் கடுமையாக விஜய் சேதுபதியை சமூக வலைத்தளங்களில் தாக்கி பதிவிட்டு வந்தனர். தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் Train என்ற படம் விரைவில் திரைக்கு வருகிறது. அதன் ப்ரோமோஷனுக்காக அவர் கொடுத்த பேட்டியில் அரசியல் பற்றி சொன்ன கருத்துக்கள் வைரல் ஆகி இருக்கிறது.

முதல்வராக விஜய் பதவியேற்று ஆறு மாதம் ஆவது பற்றி தொகுப்பாளர் கேள்வி கேட்க, விஜய் சேதுபதி சொன்ன பதில் இதுதான்.

"விஜய் சாரை நடிகராக தான் எனக்கு தெரியும். அரசியலை நான் தீவிரமாக பார்ப்பதில்லை. அது என் வேலை இல்லை. நமக்கு வேற வேலை இருக்கு."

"எனக்கு அரசியல் கருத்து பேச எந்த விதமான ஆட்சேபமும் இல்லை, ஆனால் அதை நாகரீகமாக ஏற்றுக்கொள்ளும் தன்மை இங்கே இல்லை. அது எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி" என விஜய் சேதுபதி பேசி இருக்கிறார்.

விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் தன்மை இல்லை என விஜய் மற்றும் அவரது கட்சியை விஜய் சேதுபதி விமர்சித்து இருப்பது வைரல் ஆகி இருக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com



அமெரிக்காவில் 'ராமாயணா' செய்த புதிய வசூல் சாதனை!
[Thursday 2026-11-26 16:00]

ராமாயணா திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 1800+ கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள நிலையில், வட அமெரிக்காவில் புதிய பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்துள்ளது. அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ராமாயணா. இயக்குநர் நிதேஷ் திவாரி இப்படத்தை இயக்க, ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், காஜல் அகர்வால் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். Hans Zimmer மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.



அனிருத் - காவ்யா திருமண வரவேற்பில் ஜோனிதா காந்தி: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி!
[Thursday 2026-11-26 16:00]

இணையத்தில் பரவி வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் நடைபெற்ற அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பில் கலந்துகொண்டார் பின்னணி பாடகி ஜோனிதா காந்தி. இசையமைப்பாளர் அனிருத்துக்கும் தொழிலதிபர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி கிரீஸ் நாட்டில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர்.



உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை பார்வதி!
[Thursday 2026-11-26 16:00]

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் பார்வதி திருவோத்து. மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம்வரும் இவர் தமிழில் பூ, மரியான், தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பொதுவெளியில் தனது சமூக கருத்துக்களை வெளிப்படையாக பேசும் நடிகைகளில் பார்வதியும் ஒருவர்.



சாய் பல்லவி நல்ல நடிகை தான், ஆனால் சீதையாக? - பிரபல நடிகை விமர்சனம்!
[Thursday 2026-11-26 07:00]

ராமாயணா, இந்திய சினிமாவில் அண்மையில் வெளியான ஒரு பிரம்மாண்ட படம். என்ன கதை, ராமர்-சீதாவின் அழகிய காதல் கதையும், ராவணன் என்பவர் அழிந்த கதையையும் சொல்லும் ஒரு இதிகாச கதையை தழுவிய படம் தான் ராமாயணா. இந்த கதையை மையப்படுத்தி எத்தனையோ படங்கள், தொடர்கள் வந்தாலும் சலிக்காமல் மக்கள் இன்னமும் படத்தை கொண்டாடுகிறார்கள்.



பொன்னாடையை பிடுங்கிய நடிகர் சிவகுமார்: வைரலாகும் வீடியோ!
[Thursday 2026-11-26 07:00]

நடிகர் சிவகுமார் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். ரசிகரின் செல்போனை தட்டி விட்டது தொடங்கி அவர் பல சர்ச்சைகளில் இதற்கு முன் சிக்கி இருக்கிறார். தற்போது அவர் மேடையில் பொன்னாடையை பிடுங்கிய வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.



பெரிய தொகைக்கு விலைபோன 'சீன்' ஓடிடி ரிலீஸ்!
[Wednesday 2026-11-25 15:00]

2026, நடிகர் சூர்யாவின் வருடமாக அமைந்துவிட்டது. கடந்த வருடங்களில் வெளியான படங்களில் சரியான வெற்றியை காணாத சூர்யா இந்த வருடத்தில் சொல்ல முடியாத அளவிற்கு வெற்றிகளை கண்டுள்ளார். கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் இப்போது சீன் என 3 படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். படங்கள் வெற்றியை தாண்டி தனது குடும்ப வாழ்க்கையில் ஒரு முக்கிய நிகழ்வு நடந்துள்ளது.



20 நாட்களில் ராமாயணா திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்!
[Wednesday 2026-11-25 15:00]

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவான வெளியான ராமாயணா திரைப்படம் 20 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம். பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ரன்பீர் கபூர் ராமராக நடித்து கடந்த 5-ஆம் தேதி வெளியான திரைப்படம் ராமாயணா. இப்படத்தை இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்க, சாய் பல்லவி, யஷ், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். Hans Zimmer மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.



போலீஸ் போலீஸ் வெப் தொடரின் சீசன் 2: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
[Wednesday 2026-11-25 15:00]

மிர்ச்சி செந்தில், ஜெய்சீலன் நடிப்பில் போலீஸ் போலீஸ் வெப் தொடரின் சீசன் உருவாகிறது என ஜியோ ஹாட்ஸ்டார் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். ஹார்ட் பீட், கோர்ட், Brothers and Sisters என ஜியோ ஹாட்ஸ்டாரில் பல்வேறு கதையம்சங்கள் கொண்ட தமிழ் வெப் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், கடந்த ஆண்டு காவல் துறையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட வெப் தொடர்தான் போலீஸ் போலீஸ். மிர்ச்சி செந்தில், ஜெய்சீலன், ஷபானா, சத்யா, ஜனனி, பார்வதி உள்ளிட்ட பலரும் இந்த வெப் தொடரில் நடித்துள்ளனர்.



வீட்டை விற்ற நடிகை அனுஷ்கா ஷெட்டி?
[Wednesday 2026-11-25 07:00]

நடிகை அனுஷ்கா ஒருகாலத்தில் தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர். தற்போது அவர் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டிருக்கிறார். அவர் உடல் எடையை குறைக்க தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் வருவது குறிப்பிடத்தக்கது.



"மனநோயாளி.. கடந்து செல்பவன் அல்ல நான்" - வாட்டர்மெலன் திவாகருக்கு சேரன் பதிலடி!
[Wednesday 2026-11-25 07:00]

டிவி நிகழ்ச்சியில் இயக்குனர் சேரன் தன்னை அவமானப் படுத்திவிட்டதாக பிக் பாஸ் புகழ் வாட்டர்மெலன் திவாகர் சமீபத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார். இது பற்றி இயக்குனர் சேரன் தற்போது முழு வீடியோவை வெளியிட்டு விளக்கம் அளித்து இருக்கிறார். "ஒரு மனநோயாளி ரோட்டில் கிடப்பதை பார்த்து கடந்து செல்பவன் அல்ல நான்" என திவாகருக்கு பதிலடி கொடுத்துள்ளார் அவர்.



Emmy விருது விழாவில் விஜய் சேதுபதி!
[Tuesday 2026-11-24 16:00]

ஹாலிவுட்டில் என்றாலே படங்கள் முதலில் நியாபகம் வரும், அடுத்து பிரம்மாண்டத்தின் உச்சமாக நடக்கும் ஆஸ்கர் விருது தான். இந்த ஆஸ்கர் விருதிற்கு இணையாக பார்க்கப்படும் இன்னொரு விருது விழா தான் Emmy Awards. அமெரிக்காவில் கடந்த 1949ம் ஆண்டு ஜனவரி 25 முதல் இந்த Emmy விருது வழங்கப்பட்டு வருகிறது. உலக அளவில் உள்ள சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து இந்த விருதுகள் வழங்கப்படுகிறது, அண்மையில் நியூயார்க் நகரில் 54வது சர்வதேச எம்மி விருதுகள் விழா நடைபெற்றது.



பிளாக் பஸ்டர் ராமாயணா படம் தமிழகத்தில் மட்டுமே செய்துள்ள வசூல்!
[Tuesday 2026-11-24 16:00]

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ராமாயணா. ஹிந்தியில் பெரிய பட்ஜெட்டில் தயாராகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் படம் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. ஆனால் டப்பிங் படம் என்று சொல்ல முடியாதபடி ஒவ்வொரு மொழிக்கேற்று கச்சிதமாக எடுத்திருந்தார்கள்.



ஹிட் கொடுத்த இரண்டாவது வாரத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நஸ்லீன்!
[Tuesday 2026-11-24 16:00]

நஸ்லீன் மலையாள சினிமாவின் யங் ராக் ஸ்டார் என்று கொண்டாடி வருகின்றனர். நஸ்லீன் இதுவரை நடித்த எந்த படங்களும் மோசமான படம் என்றே சொல்ல முடியாத படி எல்லா படங்களையும் ரசிகர்கள் ரசித்தனர். அதிலும் சமீபத்தில் சூர்யாவுக்கு வில்லனாக இவர் நடித்த சீன் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் கொண்டாடி தீர்க்கப்பட்டது.



தலைமறைவான பிக்பாஸ் முத்துக்குமரன்: வலைவீசி தேடும் போலீஸ்!
[Tuesday 2026-11-24 07:00]

பிக் பாஸ் புகழ் முத்துக்குமரன் தன்னை திருமணம் செய்வதாக கூறி உறவில் இருந்துவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதாக பெண் ஒருவர் புகார் அளித்து இருந்தார். அது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் முத்துக்குமரன் மீது சென்னை விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



நடிகர் அர்ஜுன் புகார்: பயில்வான் ரங்கநாதன் மீது பாய்ந்த வழக்கு!
[Tuesday 2026-11-24 07:00]

நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் அர்ஜுனின் இளைய மகள் திருமணம் நடைபெற்றபோது அதில் உமாபதி மற்றும் தம்பி ராமையா குடும்பத்தினர் யாரும் கலந்துகொள்ளவில்லை. அதனால் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் உமாபதி இருவரும் பிரிந்துவிட்டார்களா என ஒரு செய்தி இணையத்தில் பரவியது.


Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா