Untitled Document
July 2, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ராம்கோபால் வர்மாவின் வீரப்பன் படத்துக்கு தடை கோரி நீதி மன்றில் வழக்கு!
[Tuesday 2015-12-29 11:00]

சேலம் மாவட்டம், சாமிநாயக்கன்பட்டியை அடுத்துள்ள பெருமாள்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் பா.பன்னீர்செல்வி. இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- மலைவாழ்மக்கள் சமுதாயத்தில் முன்னேற்றம் காண பல உதவிகளை செய்து வருகிறேன். பெங்களூரை சேர்ந்த சிவபிரகாஷ் என்பவர்

அதில், கன்னட நடிகர் சிவராஜ்குமார் (மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன்), போலீஸ் அதிகாரி செந்தாமரை கண்ணன் என்ற பெயரில் இந்திய அதிரடிப்படை தலைமை தாங்கி, வீரப்பனை பிடித்ததாக காட்சிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த அக்டோபர் மாதம் இந்த படத்தின் முழு விளம்பர காட்சியும் வெளியாகியுள்ளது. அதில் பல பொய் தகவல் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில், திடீரென இந்த திரைப்படம் வருகிற ஜனவரி 1-ந்தேதி நாடு முழுவதும் வெளியாகும் என்று விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் வீரப்பன் ஒரு கொடூர கொலைகாரன் என்பதை போலவும், 184 பொதுமக்கள், 97 போலீஸ்காரர்கள், 900 யானைகளை கொன்றதாகவும் கதை அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் சில மத ரீதியான காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இதனால், கண்டிப்பாக மத ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படும். மேலும், இந்த படத்தின் இயக்குனர் ராம்கோபால் வர்மா, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் விதமான காட்சிகளை அமைத்துள்ளார்.

மேலும் வீரப்பன் மனைவி பலரை கொலை செய்வது போல, படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், உண்மையில் அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை. மேலும், இந்த படத்தில் தமிழக போலீசுக்கும், அரசியல்வாதிக்கும் எதிரான கருத்துகளும் இடம் பெற்றுள்ளது. அதேபோல, காவிரி விவகாரத்தில் நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டதாக கூறியுள்ளனர். இந்த படத்துக்கு சென்னையில் உள்ள தணிக்கை வாரியம்

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா