Untitled Document
July 2, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
நடிகர் சங்கம் மற்றும் பீப் பாடல் விவகாரங்கள்: ஃபேஸ்புக்கில் முட்டிக்கொண்ட ராதிகாவும் ஒய்.ஜி. மகேந்திரனும்!
[Tuesday 2015-12-29 17:00]

நடிகர் சங்கம் மற்றும் பீப் பாடல் விவகாரங்கள் தொடர்பாக ஃபேஸ்புக்கில் நடிகை ராதிகாவும் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். நடிகர் சங்கம் தொடர்பாக தன்னுடைய ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு எழுதினார் ஒய்.ஜி. மகேந்திரா. அதில் அவர் கூறியதாவது: அதிகாரம் இல்லாதவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்களைக் குறை சொல்வது, அரசியல் போல நடிகர் சங்கத்திலும் தொடர்கிறது. இப்போதுதான் நடிகர் சங்கத்துக்குத் தேர்வானவர்கள் ஒரு கூட்டம் நடத்தியுள்ளார்கள். உடனே அவர்களுக்கு எதிராக தேர்தலில் தோற்றவர்கள் எதிர்மறையாகப் பேசிவருகிறார்கள். பீப் பாடலின் ஆதரவாளர்கள், பாடல்களில் மோசமான வார்த்தைகள் இருக்கவேண்டும் என்கிறார்களா? நானும் தனிப்பட்ட முறையில் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவேன். ஆனால் அதைப் பாடலிலோ புத்தகத்திலோ பயன்படுத்தமாட்டேன்.

ஒரு மன்னிப்பு கேட்டிருந்தால் பிரச்னை முடிந்திருக்கும். அரசியலில் உள்ளதுபோல புதிய நடிகர் சங்க நிர்வாகிகள் பழிக்குப் பழி வாங்கமாட்டார்கள். ஏனெனில் தேர்தலில் தோற்றவர்களும் மதிப்பிற்குரிய நடிகர்களே. புதிய நடிகர் சங்க நிர்வாகிகளை எதிரிகளாகப் பார்க்காமல், அவர்களுக்கு வெளியே இருந்து ஆதரவு தரலாமே என்று எழுதினார்.

இதற்கு ஒய்.ஜி.யின் மகள் மதுவந்தியின் ஃபேஸ்புக் பக்கம் வழியாக பதிலளித்தார் ராதிகா. அவர் கூறியதாவது: நடிகர் சங்கம் செயல்படவில்லை என்று ஒய்.ஜி. கூறுகிறார். கடந்த 15 வருடங்களாக நீங்கள் ஏன் இதைக் கேட்கவில்லை. உங்கள் நாடகத்துக்கு எங்கள் குடும்பத்தை அழைத்து சரத்தின் நிர்வாகத்திறமை குறித்து அப்படிப் பேசினீர்களே! நடிகர்களுடன் இணைந்து கடனை அடைக்க சரத் மிகவும் பாடுபட்டார். நான் பீப் பாடலை ஆதரிக்கவில்லை. ஆனால் வெளிவராத ஒரு பாடலுக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தே நான் பேசுகிறேன். கெட்ட வார்த்தையைப் பயன்படுத்துவேன் என நீங்களே சொல்லிவிட்டதால், இது நாளைக்கு உங்களுக்கும் ஏற்படலாம். எந்த ஒரு நிறுவனமும் தங்கள் விவகாரங்களை ஊடகங்களுக்குச் சொல்லாது. வெளிப்படைத்தன்மை என்பது உறுப்பினர்களுக்கு மட்டுமே. நடிகர் சங்க விவகாரங்களை விடவும் சமூகத்தில் எவ்வளவோ முக்கியமான விஷயங்கள் உள்ளன என்றார். இதற்குப் பதிலளித்த ஒய்.ஜி, என் கண் முன்னால் நடிகர் சங்க கட்டடம் சரிந்தபிறகு நடிகர் சங்கம் செயல்படாமல் உள்ளது என நினைத்தேன். உங்களை நாடகத்துக்கு அழைத்தது தனிப்பட்ட விஷயம். அதற்கும் நடிகர் சங்கத்துக்கும் தொடர்பில்லை. கணக்கு வழக்குகளில் தவறுகள் இல்லாவிட்டால் எந்தவொரு பிரச்னையும் இல்லையே! புதிய நடிகர் சங்க நிர்வாகிகள் தவறு செய்தாலும் முதல் ஆளாக கேள்வி கேட்பேன். எந்த ஒரு நிறுவனத்துக்கும் வெளிப்படைத்தன்மை மிக முக்கியம் என்றார். ராதிகா இதற்கும் பதிலளித்தார். அவர் கூறியதாவது: நடிகர் சங்க கட்டட ஒப்பந்தத்தினால் மாதம் ரூ. 30 லட்சம் வாடகை கிடைக்கும். நிலம் நடிகர் சங்கத்திடமே இருக்கும். பிரச்னைகளை ஒரு போன் அழைப்பு மூலம் தெளிவுபடுத்தியிருக்கலாம். ஆமாம், ஒரு நிறுவனத்துக்கு வெளிப்படைத்தன்மை முக்கியம்தான். நீங்களும் நாடக நிறுவனம் நடத்துகிறீர்கள். உங்கள் குடும்பம், பள்ளிகளை நிர்வகிக்கிறது. அடுத்தமுறை இவற்றில் கூட்டம் நடக்கும்போது அதன் விவரங்களைப் பற்றி பத்திரிகைகளில் தெரிவியுங்கள். மக்களுக்கும் உதவியாக இருக்கும் என்றார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா