Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
2015ல் தமிழ் சினிமாவை கலக்கிய நாயகிகள்...!
[Thursday 2015-12-31 08:00]

தமிழ் சினிமா என்றாலே எப்போதும் நாயகர்கள் கையில் தான் உள்ளது. ஆனால், இந்த வருடம் ஹீரோயின்கள் சோலோவாக நடித்த சில படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் இந்த வருடத்தில் பிரபல நடிகைகளில் யார் அதிகப்படங்கள் நடித்தார்கள், அதில் ஹிட் படங்கள் எத்தனை என்பதன் விவரங்கள் இதோ..நயன்தாரா- நண்பேண்டா, மாசு, தனி ஒருவன், மாயா, நானும் ரவுடி தான் என இவர் 5 படங்களில் நடித்து முதலிடத்தில் உள்ளார். இதில் நண்பேண்டா சுமாராக ஓடினாலும், இதை தொடர்ந்து வந்த தனி ஒருவன், மாயா, நானும் ரவுடி தான் என தொடர் வெற்றிகளை கொடுத்துள்ளார்.

த்ரிஷா- என்னை அறிந்தால், பூலோகம், அப்பாடக்கர், தூங்கவனம் என 4 படங்களில் நடித்துள்ளார். இதில் என்னை அறிந்தால், தூங்காவனம், பூலோகம் ஆகிய படங்கள் சுமாரான ஹிட் வரிசையில் இடம்பெற்றுள்ளது.ஹன்சிகா- புலி, ரோமியோ ஜுலியட், ஆம்பள, வாலு என இவரும் 4 படங்களில் நடித்தார். இதில் ரோமியோ ஜுலியட் படம் மட்டுமே சூப்பர் ஹிட் வரிசையில் இடம்பெற்றுள்ளது.

அனுஷ்கா- என்னை அறிந்தால், டப்பிங் படமான ருத்ரமாதேவி, இஞ்சி இடுப்பழகி, பாகுபலி என 4 படங்கள் இவருக்கு வர, என்னை அறிந்தால் சுமார் ஹிட் அடிக்க, பாகுபலி மெகா ஹிட் அடித்தது.ஸ்ருதிஹாசன்- ஸ்ருதிஹாசன் இதுவரை தமிழில் நடித்த எந்த படங்களும் ஹிட் ஆனது இல்லை, இதற்கு புலி படமும் ஒரு உதாரணமாக அமைய, இதை தொடர்ந்து வெளிவந்த வேதாளம் மெகா ஹிட் ஆக இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது.எமி ஜாக்ஸன்- இந்த வருடத்தின் ஆரம்பமே ஐ படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் எமி ஜாக்ஸன். ஆனால், இவர் நடிப்பில் இந்த வருடம் வந்த தங்கமகன் பெரும் தோல்வியை கொடுத்தது, இருந்தாலும் 2.o, கெத்து என பல படங்கள் இவர் கையில் உள்ளது.சமந்தா- சமந்தாவும் இதுவரை தமிழில் நடித்த படங்களில் நான் ஈ, கத்தி மட்டுமே ஹிட். இந்த வருடம் இவர் நடிப்பில் வந்த 10 எண்றதுக்குள்ள, தங்கமகன் ஆகிய இரண்டு படங்களுமே தோல்விதான்.

நித்யா மேனன்- தமிழில் ஒரு வெற்றி படத்திற்காக காத்திருந்த இவருக்கு, ஒரே நாளில் இவர் நடித்த ஓ காதல் கண்மணி, காஞ்சனா-2 ஆகிய படங்கள் ரிலிஸ் ஆகி மாபெரும் வெற்றி பெற்று நித்யா மேனன் தனக்கான ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்து விட்டார். தமன்னா- தமன்னா இந்த வருடம் பாகுபலி படத்தில் மட்டுமே நடித்துள்ளார். இப்படமும் இவருக்கு நல்ல பெயர் மட்டுமின்றி வசூல் ராணியாகவும் மாற்றியுள்ளது.ஜோதிகா- 8 வருடங்களுக்கு பிறகு ஜோதிகாவும் 36 வயதினிலே படத்தில் களம் இறங்கி இன்றைய நாயகிகளுக்கு சவால் விடும் படி நடித்து வெற்றி பெற்றார்.இதன் மூலம் இந்த வருடத்தில் வசூல், படத்தேர்வு, ரசிகர்களை கவர்ந்தவர் என அனைத்திலும் நம்பர் 1 இடத்தில் இருப்பது நயன்தாரா தான் என்று தெரிகின்றது.

  
  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா