Untitled Document
September 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
விக்ரம் உருவாக்கத்தில் முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கும் மழை வெள்ள ஒற்றுமை பாடல்!
[Thursday 2016-01-07 07:00]

சென்னை மழை வெள்ளப் பாதிப்புகளையும் சாதி, மதங்களை மறந்து மக்கள் உதவியதையும் காட்சிப்படுத்தி நடிகர் விக்ரம் புதிய பாடல் ஆல்பம் உருவாக்குகிறார். இதில் சூர்யா, கார்த்தி, ஜெயம்ரவி, பிரபுதேவா, ஜீவா, பரத், நடிகைகள் அமலாபால், வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சென்னையில் கடந்த மாதம் வரலாறு காணாத மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்தனர். ஹெலிகாப்டர்களில் வந்து ராணுவத்தினர் போட்ட உணவுப் பொட்டலங்களுக்காக மக்கள் அல்லாடிய பரிதாபங்களை பார்க்க நேர்ந்தது.

அடையாறு, கூவம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு வந்து நகரம் முழுவதையும் மிதக்க வைத்தது. அரசு துறையினர், தொண்டு நிறுவத்தினர், நடிகர், நடிகைகள், இளைஞர்கள் இரவு பகலாக நிவாரண பணிகளை செய்தார்கள். இந்த துயர நிகழ்வுகளையும் மீட்பு பணிகளையும் பாடலில் பதிவு செய்து காட்சிப்படுத்தும் முயற்சியில் நடிகர் விக்ரம் ஈடுபட்டுள்ளார். மழை வெள்ளம் சாதி, மத வேற்றுமைகளை மக்களிடம் இருந்து அடித்துச்சென்று விட்டது. எவ்வளவு துன்பம் வந்தாலும் எங்கள் ஒற்றுமை குலையாது என்பது போன்று இந்த பாடல் ஆல்பம் உருவாக்கப்படுகிறது. இதை விக்ரமே டைரக்டும் செய்கிறார். இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள நடிகர், நடிகைகள் பாடி நடனம் ஆடி நடிக்கின்றனர்.

சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, பிரபுதேவா, ஜீவா, பரத், விஜய் சேதுபதி, நடிகைகள் அமலாபால், நித்யாமேனன், வரலட்சுமி, கன்னட நடிகர் யாஷ் ஆகியோர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. சூர்யா படப்பிடிப்புக்கு வந்தபோது படக்குழுவினர் உற்சாகமாக வரவேற்றார்கள். விக்ரமும் சூர்யாவும் 13 வருடங்களுக்கு பிறகு இந்த பாடல் ஆல்பம் மூலம் இணைந்துள்ளனர். பாலா இயக்கத்தில் வந்த பிதாமகன் படத்தில் இருவரும் சேர்ந்து நடித்து இருந்தார்கள். இந்தி நடிகர் அபிஷேக் பச்சன் இதில் நடிப்பதற்காக சென்னை வருகிறார். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார் ஆகியோரையும் இந்த பாடல் ஆல்பத்தில் நடிக்குமாறு விக்ரம் அழைத்து இருக்கிறார். இதுபோல் தெலுங்கு நடிகர்கள் பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா, ராம்சரன், மலையாள நடிகர்கள் நிவின் பாலி, பிரித்விராஜ், கன்னட நடிகர் தர்ஷன், புனித் ராஜ்குமார் ஆகியோரும் அழைக்கப்பட்டு உள்ளனர். வருகிற 10-ந்தேதி வரை இதன் படப்பிடிப்பு நடக்கிறது. அதன்பிறகு பாடலை வெளியிடுகின்றனர். இந்த வீடியோ பாடல் ஆல்பத்துக்கு விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார், கிரிநந்த் இசையமைக்கிறார். மதன்கார்க்கி, கானா பாலா, ரோகேஷ் ஆகியோர் பாடலை எழுதி உள்ளனர். எஸ்.பி.பாலசுப்ரமணியம், சங்கர் மகாதேவன், ஹரிஹரன், மாணிக்க விநாயகம், கார்த்தி, சுஜாதா, சுசித்ரா உள்ளிட்ட பலர் இந்த பாடலை பாடி உள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா