Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கதகளி திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்: - முடி திருத்துவோர் சங்கம்
[Thursday 2016-01-21 12:00]

கதகளி திரைப்படத்தில் மருத்துவர், வண்ணார், அருந்ததியர் ஆகிய சாதிகளை இழிவுப்படுத்தும் வகையில் உள்ள காட்சிகளை நீக்காவிட்டால், அந்தத் திரைப்படத்தின் இயக்குநர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக முடிதிருத்துவோர் சங்கம் தெரிவித்துள்ளது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் (தஞ்சாவூர், திருவாரூர், நாகை) முடிதிருத்தும் தொழிலாளர் சங்க அவசரக் கூட்டம் நீடாமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத் தலைவர் பெல்மாறன் தலைமை வகித்தார். கூட்டத்தில் சங்க சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் சோம. செந்தமிழ்ச்செல்வன் சிறப்புரையாற்றினார். பொங்கல் பண்டிகையையொட்டி, வெளிவந்த கதகளி திரைப்படத்தில் மருத்துவர், வண்ணார், அருந்ததியர் ஆகிய சாதிகளை திரைப்படத்தின் வில்லன் இழிவாகப் பேசும் காட்சி இடம் பெற்றுள்ளன. அந்தக் காட்சியை உடனடியாக நீக்காவிட்டால் அந்தப் படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் வீட்டின் முன்பும், தணிக்கைக் குழுவினரைக் கண்டித்தும் போராட்டம் நடத்துவதுடன் சங்கத்தின் சட்ட ஆலோசகரைக் கொண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தமிழக சென்சார் போர்டு சாதிப் பிரச்னையை தூண்டுவதற்கு இந்தக் கூட்டத்தின் வாயிலாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

  
  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா