Untitled Document
September 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
என் படங்கள் மூலம் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும்: -கேத்ரின் தெரசா
[Saturday 2016-01-30 15:00]

மெட்ராஸ் படத்தில் மூலம் நாயகியாக அறிமுகமான கேத்ரின் தெரசா வேகமாக வளர்ந்து வருகிறார். இது பற்றி கூறிய அவர்... நான் கேரளப்பெண். பிறந்து வளர்ந்தது எல்லாம் துபாயில் தான் என்றாலும் சென்னைத்தான் எனக்கு விலாசம் கொடுத்திருக்கிறது. எனது தாய், தந்தை துபாயில் தான் இருக்கிறார்கள். துபாயை விட இந்தியாவில் தான் பல சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன. எப்போதாவது துபாய் செல்வேன். கல்லூரியில் படிக்கும் போது கன்னடம், மலையாள படங்களில் நடித்தேன்.தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இப்போது நிறைவேறி இருக்கிறது. இதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

நேரம் கிடைக்கும் போது புத்தகம் படிப்பேன், டி.வி. பார்ப்பேன் மற்றபடி பொழுது போக்குவதற்கு நேரமே இருக்காது. எப்போதாவது சமையல் செய்வேன்.கதகளியில் என்னுடன் நடித்த விஷால் நல்ல உழைப்பாளி. நேரம் தவறாமல் படப்பிடிப்புக்கு வருவார். நல்ல நடிகர். நான் முடிந்த வரை ஒவ்வொரு படத்திலும் வெல்வேறு விதமாக நடிக்க முயற்சி செய்வேன். ஒரே மாதிரி நடிப்பதை தவிர்ப்பேன்.என் அம்மா துபாயில் இருக்கிறார். அப்பா எனக்கு உதவியாக வருகிறார். தற்போது ஐதராபாத்தில் தங்கி இருக்கிறேன். நடிகைகளில் முதல் இடம் இரண்டாவது இடம் என்ற கவலை இல்லை. என் படங்கள் மூலம் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும். இது தான் என் லட்சியம். தமிழ் ரசிகர்கள் மீது அன்பும் பாசமும் வைத்திருக்கிறேன்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா