Untitled Document
September 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மனைவி இறந்த சோகத்தில் இருக்கும் மதுரை முத்து இந்தியாவுக்குத் திரும்ப முடியாத நிலை:
[Tuesday 2016-02-09 15:00]

பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்து மனைவி விபத்தில் பலியானார் - அம்மை நோய் காரணமாக அமெரிக்காவிலிருந்து திரும்ப முடியாத நிலையில் மதுரை முத்து தமிழகத்தின் பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்துவின் மனைவி வையம்மாள் வாகன விபத்தொன்றில் கடந்த வாரம் உயிரிழந்துள்ளார். எனினும் தற்போது அமெரிக்காவிலுள்ள மதுரை முத்து, அம்மை நோய் காரணமாக உடனடியாக இந்தியாவுக்குத் திரும்ப முடியாத நிலையில் தவிக்கிறார். மதுரை முத்து, மதுரை திருநகர் அருகே உள்ள தனக்கன் குளத்தில் வசித்து வருபவர். பிரபல நகைச்சுவையாளரான இவர்,

இந் நிலையில், காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி கோயிலுக்கு வையம்மாள் வியாழக்கிழமை காலை காரில் சென்றுள்ளார். காரை பாண்டி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். திருப்பத்தூர் அருகே கோட்டையூர் நெடுஞ்சாலையில் கார் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது, அக் காரின் இடது பக்க டயர் வெடித்துள்ளது. இதில் கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் பயங்கர வேகத்தில் மோதியது. இதில், வையம்மாள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாரதியும் பலத்த காயம் அடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மனைவி இறந்த துயரத்திலுள்ள மதுரை முத்துவுக்கு மற்றொரு நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து ஏற்பட்ட போது மதுரை முத்து கலை நிகழ்ச்சியொன்றுக்காக அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். மனைவி இறந்த செய்தி அறிந்ததும் தனது நிகழ்ச்சிகளை ரத்துச்செய்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்புவதற்கு மதுரை முத்து தீர்மானித்தார். ஆனால், அது உடனடியாக சாத்தியமாகவில்லை. அங்கு அவருக்கு அம்மை நோய் ஏற்பட்டுள்ளது.

இதனால் மதுரை முத்து உடனடியாக நாடு திரும்ப முடியாமல் சிக்கலில் உள்ளார். ஏனெனில், அமெரிக்க விதிகளின்படி அம்மை நோயுடன் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி வழங்க முடியாது என அமெரிக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து விட்டனர். இந் நிலையில், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மதுரை முத்துவுக்கு அனுமதி பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அம்மை நோய் குணமான பின்னர் அவர் இந்தியாவுக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மனைவி இறந்த சோகத்தில் இருக்கும் மதுரை முத்து, மனைவியை உடனடியாக பார்க்க முடியாமல் தவிக்கின்றமை அவரின் ரசிகர்களுக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா