Untitled Document
September 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மகளிர் தினத்தில் பெண்களின் பெருமைகளை வெளிப்படுத்தும் பாடலொன்றை வெளியிடவிருக்கிறார் சுருதி!
[Friday 2016-03-04 14:00]

பெண்களின் பெருமைகளை வெளிப்படுத்தும் பாடலொன்றை வருகின்ற மகளிர் தினத்தில் நடிகை சுருதிஹாசன் வெளியிடவிருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என்று மாறிமாறி படப்பிடிப்பிற்காக பறந்து கொண்டிருக்கும் சுருதிஹாசன், அவ்வப்போது தனக்குப் பிடித்தமான வேலைகளை செய்திடவும் தவறுவதில்லை. Buy Tickets கடந்த காதலர் தினத்தில் அனிருத், யுவன் ஆகியோரின் சிங்கிள் டிராக் பாடல்கள் வெளியாகின. அதே போல இந்த மகளிர் தினத்திற்கு சிங்கிள் டிராக் ஒன்றை சுருதிஹாசன் வெளியிடுகிறார். 'மை டே இன் தி சன்' என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்தப் பாடலுக்காக எஷான் நூரானி மற்றும் லோய் மெண்டோன்சா போன்ற பிரபல இசைக்கலைஞர்களுடன் அவர் கூட்டணி அமைத்திருக்கிறார்.

இது குறித்து சுருதி " இந்தப் பாடல் வெளியிடுவதன் முக்கிய நோக்கமே எல்லாப் பெண்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான். இது பெண்களுக்கான நேரம். இந்தப் பாடலை எழுதிப் பாடுவதை நான் பெருமையாக கருதுகிறேன்" என்று கூறியிருக்கிறார். இசைக்கலைஞர்கள் எஷான் நூரானி மற்றும் லோய் மெண்டோன்சா இருவரும் "சுருதி ஒரு அற்புதமான பாடலாசிரியர். இசை மற்றும் பாடலின் வரிகள் இரண்டுமே நன்றாக வந்திருக்கின்றன" என்று இப்பாடல் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளனர். வருகின்ற மார்ச் 8 ல் 'மை டே இன் தி சன்' பாடலின் ஆடியோவை வெளியிடும் சுருதி, ஒருசில மாதங்களில் இப்பாடலை வீடியோ வடிவிலும் வெளியிடவிருக்கிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா