Untitled Document
September 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
நடிகர் கலாபவன் மணியின் மரணத்தில் சந்தேகம்! 5 பேரிடம் கேரள போலீசார் விசாரணை!
[Monday 2016-03-07 18:00]

நடிகர் கலாபவன் மணியின் மரணம் குறித்து சக நடிகர் ஜாஃபர் உள்ளிட்ட 5 பேரிடம் கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கலாபவன் மணி, நேற்றிரவு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலில் மெத்தனால் கலந்திருப்பதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கல்லீரல் முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கலாபவன் மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட கேரள அரசு, திருச்சூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் சுகேசன் தலைமையில் குழு ஒன்றையும் அமைத்துள்ளது.

இது குறித்து தடயவியல் துறையினரும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, கலாபவன் மணியின் உடல் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான சாலக்குடியில் மாலை 5.30 மணி அளவில் தகனம் செய்யப்பட்டது. வரும் சட்டப்பேரவைத் ‌தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சிக்காக கலாபவன் மணி பரப்புரை செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும், அக்கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா