Untitled Document
September 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கேரளாவில் அரசு மரியாதையுடன் நடந்த கலாபவன் மணி இறுதி யாத்திரை:
[Tuesday 2016-03-08 09:00]

கேரளா மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் எண்ணற்ற ரசிகர்களை கொண்டிருந்த மலையாள நடிகர் கலாபவன் மணி நேற்று முன் தினம் மரணம் அடைந்தார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக கூறப்பட்டதால் நேற்று காலை அவரது உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து அவரது உடல் மதியம் 11.30 மணி அளவில் திருச்சூரில் உள்ள கேரளா சங்கீத நாடக அகாடமிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு நடிகர்கள் ஜெயராம், முகேஷ், சீனியர் நடிகை கே.பி.ஏ.சி லலிதா உள்ளிட்ட பலர் தங்களது இறுதி மரியாதையை கலாபவன் மணிக்கு செலுத்தினார்கள். அதன்பின் 1.30 மணி அளவில் அவரது உடல் சாலக்குடி முனிசிபல் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கேரளாவில் பல பகுதிகளிலும் இருந்து திரண்டு வந்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களும் திரையுலக பிரமுகர்கள் அனைவரும் வரிசையில் நின்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பின் சாலக்குடி அருகில் உள்ள கலாபவன் மணியின் சொந்த ஊரான மணிக்கூடாரம் பகுதிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.

ஏராளமான உள்ளூர் பொதுமக்கள், அரசு அதிகாரிகள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பின் மாநில அரசு மரியாதையுடன் போலீஸ் அணிவகுப்புடன் புறப்பட்ட கலாபவன் மணியின் இறுதி ஊர்வலம் மாலை 5 மணி அளவில் மயான மேடையை அடைந்தது. துப்பாக்கி ஏந்திய போலீஸார் மரியாதை வழங்க 5.30 மணி அளவில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. கலாபவன் மணிக்கு ஒரே ஒரு மகள் மட்டும் என்பதால், கலாபவன் மணியின் ஈமச்சடங்கை அவரது சகோதரி மகனான தர்ஷன் செய்து முடித்தார். சாலக்குடி பகுதியில் கலாபவன் மணியின் இறுதி யாத்திரைக்காக கூடிய கூட்டம் இதுநாள் வரை அந்த பகுதியே கண்டிராத ஒன்று என மீடியாக்களில் பேசப்பட்டது. மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற அந்த மாபெரும் கலைஞனின் ஆத்மா சாந்தி அடையட்டும்.!

  
  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா