Untitled Document
September 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மற்றவர்களை சிரிக்க வைப்பதில் அவருக்கு நிகர் அவர்தான்: - கலாபவன் மணி மறைவு குறித்து நடிகை மஞ்சு வாரியார்
[Tuesday 2016-03-08 14:00]

இத்தனை காலமும் தன்னை சிரிக்க மட்டுமே வைத்துக் கொண்டிருந்த மணி சேட்டன், முதன் முறையாக கண்ணீர் சிந்த வைத்ததாக மறைந்த நடிகர் கலாபவன் மணி குறித்து மலையாள முன்னணி நடிகை மஞ்சு வாரியார் தெரிவித்துள்ளார்.கலாபவன் மணி குறித்து சோஷியல் மீடியாக்களில் மஞ்சு வாரியார் கூறியிருப்பதாவது:அப்போதெல்லாம் மணி சேட்டனை எனக்கு அவ்வளவாகத் தெரியாது. 'சல்லாபம் ' படத்தின் போது எனதருகே வந்து உட்கார்ந்தார். என்னை பார்த்தார். நானும் பார்த்தேன். அவர் வாயில் இருந்து ''தங்கபஷ்ம் குறியிட்ட தம்பிராட்டி'' என்ற பாடல் முணுக்க முணுக்க ஆரம்பித்தது. அப்படித்தான் எனக்கும் அவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அதற்கு முன், அவரது கிராமிய பாடல்களை கேட்டுள்ளேன். எனது அப்பாவும் அம்மாவும் அவரது பரம விசிறிகள். மணி சேட்டன் செட்டில் இருந்தால் நான் சிரித்துக் கொண்டேதான் இருப்பேன். என்னுடன் அவர் ஏராளமான படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார்.

அந்த சமயங்களில் மிமிக்ரி செய்வது குறித்தும் எனக்கு சொல்லிக் கொடுப்பார். கிராமிய பாடல்களை அவருடன் சேர்ந்து படிப்பேன். அதெல்லாம் சந்தோஷகரமான நாட்கள். மணி சேட்டன் அடுத்தவர்களை சிரிக்க வைப்பதற்காகவே பிறந்தவர். ஆனால் பின்னாட்களில்தான் நான் தெரிந்து கொண்டேன். அவர் தனது சொந்த வாழ்க்கையில் நிறைய இழந்துள்ளார். நாட்கணக்கில் உட்கார்ந்து அழுதுள்ளார் என்று.ஆனாலும் மற்றவர்களை சிரிக்க வைப்பதில் அவருக்கு நிகர் அவர்தான். எனது இக்கட்டான தருணங்களில் மணி சேட்டன் எப்போதும் என்னுடன் இருந்துள்ளார். அந்த சமயத்தில் எத்தகைய மனிதருடன் நான் நட்பு வைத்திருக்கிறேன் என்றும் உணர்ந்துள்ளேன். என்னை வாழ்நாள் முழுவதும் சிரிக்க வைத்த சேட்டன் முதன் முறையாக இறப்பின் வழியாக என்னை அழ வைத்துள்ளார். நம்மை சிரிக்க வைப்பவர்கள் என்றாவது ஒருநாள் நிச்சயம் நம்மை அழ வைப்பார்கள். அந்த வலியும் வேதனையும் அசாதாரணமாக இருக்கும். இப்போதும் மணி சேட்டன் அதனை செய்திருக்கிறார்.இவ்வாறு மஞ்சுவாரியார் கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா