Untitled Document
November 4, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தயக்கத்தை தூக்கி எறிந்த காஜல் அகர்வால்!
[Thursday 2020-01-02 08:00]

நடிகை காஜல் அகர்வால் பொதுவாக கவர்ச்சியான உடைகளுடன் இருக்கும் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவது இல்லை. ஆனால் மாலத்தீவில் உள்ள ரிசார்ட்டில் இருந்து நீச்சல் உடையில் எடுத்த படு கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அமலாபால், சமந்தா போன்ற திருமணமான நடிகைகளே அவ்வப்போது கவர்ச்சி படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடும் போது, தான் மட்டும் ஏன் தயங்கி நிற்க வேண்டும் என்று காஜல் அகர்வாலும் இப்படி கவர்ச்சி களத்தில் இறங்கியிருக்கிறார். படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலாக பலரும் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை அள்ளி இறைத்து பகிர்ந்து வருகிறார்கள்.

தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் பிசியாக இருந்தாலும், தற்போது பட வாய்ப்புகளை குறைத்து கொண்டு கமலுடன் இந்தியன் 2 படத்தில் மட்டுமே கமிட் ஆகியிருக்கிறார். நடிப்பதை குறைத்து விட்டு குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவழித்து வருகிறார். புத்தாண்டை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் மாலத்தீவிற்கு சென்றிருக்கும் காஜல் அகர்வால், அங்குள்ள ரிசார்ட்டில் தான் தற்போது தங்கியிருக்கிறார்.

ரிசார்ட்டில் உள்ள நீச்சல் குளத்தில் தான் இந்த படு கவர்ச்சியான போட்டோக்களை அவர் எடுத்துள்ளார். காஜல் அகர்வாலுடன் அவரது தங்கை மற்றும் தங்கையின் மகன் ஆகியோரும் உடனிருந்தனர். நீச்சல் குளத்திற்கு கருப்பு கலந்த பலவண்ண பிகினி உடை, பீச் போட்டோஷூட்டிற்கு தனி உடை என விடுமுறையை கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா