Untitled Document
August 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
27 வருடங்களின் பின்னர் மீண்டும் இணையும் சூர்யவம்சம் ஜோடி!
[Wednesday 2024-07-17 18:00]

சூரியவம்சம் திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் மிகப் பெரிய அளவில் வெற்றி அடைந்த படங்களின் பட்டியலில் முக்கிய இடம் வகிக்கின்றது. 1997ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் சரத்குமார் தந்தை மற்றும் மகன் என இரு வேடங்களில் நடித்திருப்பார். தந்தையாக வரும் சரத்குமாருக்கு ஜோடியாக ராதிகா அவர்களும் மகன் பாத்திரத்திற்கு தேவயானி ஜோடியாக நடித்திருப்பார்.

அதற்கு பிறகு சரத்குமார் மற்றும் தேவயானி பல படங்களில் நடித்தாலும் மீண்டும் சூரிய வம்சம் கூட்டணி என்று தேவயானி வெளியிட்ட பதிவுதான் இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

சூர்யவம்சம் படம் எவ்வளவு பெரிய ஹிட் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. தற்போதும் பேசப்படும் படமாக இருக்க இதில் நடித்த சரத்குமார் மற்றும் தேவயாணி ஆகியோரின் கெமிஸ்ட்ரி தான் காரணமாக அமைந்தது.

தற்போதும் மீம்களாக இந்த படத்தின் சில காடசிகளை இணையத்தில் அடிக்கடி பார்க்க முடிகின்றது.

அந்த வகையில் தற்போது 27 வருடங்களுக்கு பிறகு சூர்ய வம்சம் ஜோடி மீண்டும் ஜோடி சேர்ந்து இருக்கிறது. நீண்ட காலத்துக்கு பின்னர் இந்த ஜோடி ஒன்று சேர இருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.

சித்தார்த்தின் 40வது படத்தில் தான் அவர்கள் நடிக்க இருக்கின்றனர். ஸ்ரீகணேஷ் இயக்கும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் அதில் சரத்குமார் மற்றும் தேவயாணி இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா