Untitled Document
November 4, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
18 நாட்களில் ஜெயிலர் 2 தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல்!
[Monday 2026-11-02 16:00]

தமிழ்நாட்டில் ஜெயிலர் 2 திரைப்படம் 18 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த பாக்ஸ் ஆபிஸ் விவரத்தை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். இயக்குநர் நெல்சன் - ரஜினிகாந்த் கூட்டணியில் இரண்டாவது முறையாக இணைந்த திரைப்படம் ஜெயிலர் 2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இன்னும் பிரம்மாண்டமான கதைக்களம், மாஸ் காட்சிகள், பட்ஜெட் என ரசிகர்களை கவரும் வகையில் இப்படம் அமைந்திருந்தது.

கடந்த மாதம் திரைக்கு வந்த ஜெயிலர் 2 திரைப்படத்தை ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாட, இரண்டு வாரம் முடிவதற்கு முன்பே ரூ. 700 கோடிக்கும் மேல் வசூலித்து, 2.0 படத்தை முந்தி, தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாக மாறியுள்ளது. இதனை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள்.

என்னதான் 18 நாட்களில் உலகளவில் ஜெயிலர் 2 ரூ. 800 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தாலும், தமிழ்நாட்டில் இதுவரை எவ்வளவு வசூல் வந்துள்ளது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள்.

இந்த நிலையில், ஜெயிலர் 2 தமிழ்நாட்டில் 18 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 208 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் தமிழ்நாட்டின் நம்பர் 1 வசூல் திரைப்படமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா