Untitled Document
November 5, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ராமாயணா திரை விமர்சனம்!
[Thursday 2026-11-05 16:00]

இந்திய சினிமாவின் உச்சமாக ரூ 2000 கோடி பட்ஜெட்டில் நமித் மல்கோத்ரா தயாரிப்பில் நிதிஷ் இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி நடிப்பில் இன்று வெளிவந்துள்ளது இந்த பிரமாண்ட படைப்பான ராமாயண எப்படியுள்ளது? பார்ப்போம். ராமாயணம் பல வெர்சனில் பல காலங்களில் நாம் பார்த்து இருப்போம், தற்போது இந்த காலத்திற்கு ஏற்றவாறு விஷ்வல் விருந்தை பொருத்தி எடுத்துள்ளனர். இந்த கதை இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எல்லோருக்கும் தெரிந்த கதை தான், இதில் நாங்கள் சொல்ல புதிதாக ஏதுமில்லை.

ராமர் முடிசூடும் நேரத்தில் கைகேயி தன் மகன் பரதனுக்கு நாடு வேண்டும் ராமர் வனவாசம் செல்ல வேண்டும் என்று கோரிக்கையை வைக்க, அப்பாவின் கோரிக்கையை தட்ட முடியாமல் ராமர், சீதை, லக்‌ஷ்மணன் ஆகியோர் வனவாசம் செல்கின்றனர்.

அப்படி அவர்கள் சென்ற இடத்தில் ராமர் மீது ராவணன் தங்கை சூர்பனகை ஆசைக்கொள்ள, அண்ணனிடமே இப்படி பேசியதால், லக்‌ஷ்மணனோ சூர்பனகை மூக்கை வெட்டுகிறார், இதனால் கோபமான சூர்பனகை தன் அண்ணன் ராவணனிடம் சொல்ல, ராவணன் கோபம் கொண்டு ராமரை வீழ்த்த வந்த இடத்தில் தனியாக இருக்கும் சீதையை கடத்தி செல்கிறார்.

இதன் பின் ராமர் ராவணன் நாட்டுக்கே சென்று எப்படி சீதையை மீட்கிறார், இந்த பயணத்தில் அவருக்கு என்ன தடைகள் வந்தது, யார் யார் எல்லாம் உதவினார்கள் என்பதே இதன் கதை, இதை இந்த காலக்கட்டத்தில் எப்படி எடுத்துள்ளார்கள் என்பதை பார்ப்போம்.

படத்தின் களம் ராவணன் யஷ்-இடமிருந்தே தொடங்குகிறது, அசுரர் குலம் செழிக்க அவர் இருக்கும் தவம் அதை தொடர்ந்து அவரின் தவத்திற்கு, கிடைக்கும் வரம் அதை வைத்து ஒட்டு மொத்த அசுரர் குலத்தையும் தலை நிமிர வைத்த உலகையே தன் கட்டுபாட்டில் கொண்டு வர யஷ் அனைவரையும் அடித்து தும்சம் செய்வது என யஷ் ஒன் மேன் ஷோ தான், டாக்சிக்-ல் விட்டதை இதில் பிடித்துவிட்டார்.

பிறகு ராமராக ரன்பீர் அத்தனை கச்சிதம், எந்த ஒரு இடத்திலும் தன் கதாபாத்திரம் மீறி சின்ன ரியாக்ஸன் கூட எல்லை மீறாமல் மிக அளவான நடிப்பில் கவர்ந்துள்ளார், சீதையாக சாய் பல்லவியும் சிறப்பான தேர்வு. இப்படத்தின் கதை நாம் செவி வழியாகவும், சீரியல், சினிமா என பலமுறை பார்த்தது,

அதில் இந்த ராமாயணம் எந்த விதத்தில் வித்தியாசமும் இல்லை, ஆனால் நாம் பார்த்த வெர்ஷனை விட இதில் பிரமாண்டமும் விஷ்வல் ஆக காட்சிகளும் நம்மை பிரமிக்க வைக்கிறது.

அதிலும் குறிப்பாக முதல் பாதியில் ராவணன், இந்திரன் சண்டை காட்சி, ராமர் அரக்கர், அரக்கியுடன் சண்டை போடுவது இதெல்லாம் விட இரண்டாம் பாதியில் வரும் சடாயு ராவணன் சண்டைகாட்சி பிரமாண்டத்தின் உச்சம், செம விருந்து.

அதே நேரத்தில் முதல் பாதி சில இடங்களில் பொறுமையாக சென்றாலும் நமக்கு எங்கும் சோர்வை தரவில்லை, இந்த மேஜிக் ராமர் வனவாசம் சென்றதும் கொஞ்சம் சோர்வை தர ஆரம்பித்துவிட்டது.

நிறைய பேண்டசி விஷயங்கள் வந்தாலும் முதல் பாதி-யில் இருந்த எமோஷ்னல் கனேக்ட் மிஸ் ஆகிறது. கிளைமேக்ஸ் சடாயு சண்டைக்காட்சியே மிகச்சிறப்பு, படத்தில் கண்டிப்பாக பாராட்ட வேண்டிய விஷயம் டப்பிங் தான். மிகச்சிறப்பாக டப்பிங் அதிலும் லிப்-சிங்க் அத்தனை நேர்த்தியாக செய்துள்ளனர்.

மேலும் இதை இரண்டு பாகமாக எடுத்துள்ளனர், அதனால் எல்லோரும் எதிர்பார்க்கும் ஹனுமான் கதாபாத்திரம் இரண்டாம் பாகத்தில் தான் வருகிறது. டெக்னிக்கலாக கண்டிப்பாக எல்ல விதத்திலும் டாப் நாச் தான், ஆனால், இசை ஏதோ ஒன்று மிஸ்ஸிங் என தோன்றுகிறது.

க்ளாப்ஸ்

நடிகர்கள், நடிகைகள் பங்களிப்பு, முக்கியமாக யஷ் வரும் காட்சிகள். சிஜி ஒர்க் ஹாலிவுட் தரம் சண்டைக்காட்சிகள்

பல்ப்ஸ்

ஆங்காங்கே கொஞ்சம் மெதுவாக நகரும் காட்சிகள். முதல் பாதி அளவிற்கு இரண்டாம் பாதி எமோஷ்னல் கனேக்ட் இல்லாமல் போனது.

மொத்தத்தில் இந்த இராமாயணம் கொஞ்சம் பொறுமை இருந்தால் கண்டிப்பாக ஒரு நல்ல விஷ்வல் ட்ரீட் தான்.

3/5

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா