Untitled Document
November 6, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மூக்குத்தி அம்மன் 2 மஹாசக்தி: திரைவிமர்சனம்!
[Friday 2026-11-06 16:00]

சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா, துனியா விஜய், ஊர்வசி நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2 மஹாசக்தி. வேல்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இந்த தீபாவளிக்கு பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் எப்படி உள்ளது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க. போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் நடிகை நயன்தாராவுக்கு இரவில் புரியாத புதிராக கனவுகள் வருகின்றன. இந்த கனவில் வரும் அமானுஷ்யங்கள் நயன்தாராவை மயிலாஞ்சி என்கிற ஊருக்கு போக சொல்கிறது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், மயிலாஞ்சி தனது அம்மாவுடன் செல்ல முடிவு செய்கிறார்.

நயன்தாரா அங்கு வரும் நேரத்தில், 2000 ஆண்டுகளாக ஜீவசமாதியில் உள்ள ரெஜினாவை மந்திரவாதி சுனில் தனது சக்தியால் மீண்டும் உயிர்ப்பிக்கிறார். உயிர்த்தெழும் ரெஜினா தனது கணவரை தேடி கண்டுபிடித்து, நயன்தாராவை பலி கொடுக்க முடிவு செய்கிறார்.

பலி கொடுக்க அவரை அழைத்து வரும்போது நயன்தாராவை காப்பாற்ற மூக்குத்தி அம்மன் என்ட்ரி தருகிறார். அப்போதுதான் தெரிகிறது, மக்களை காப்பாற்ற மூக்குத்தி அம்மன்தான் மறுபிறப்பு எடுத்துள்ளார் என்று. ஆனால், இது நயன்தாராவுக்கு தெரியவில்லை.

தான் மூக்குத்தி அம்மனின் மறுபிறப்பு என்றே தெரியாமல் இருக்கும் நயன்தாரா எப்படி தீயசக்தியான ரெஜினாவை அழித்து மீண்டும் ஊர் மக்களை காப்பாற்றினார் என்பதே இப்படத்தின் மீதி கதை.

மூக்குத்தி அம்மனாக வரும் நடிகை நயன்தாரா மொத்த திரைப்படத்தையும் தனது தோளில் சுமக்கிறார். அப்பாவி பெண்ணாக ஒருபுறமும், சூலம் ஏந்திய அம்மனாக மறுபுறமும் என ஆரம்பம் முதல் இறுதி வரை தனது கதாபாத்திரத்தை சிறப்பாக எடுத்து சென்றுள்ளார். குறிப்பாக இரண்டாம் பாதியில் மூக்குத்தி அம்மனாக இவர் வரும் காட்சிகள் எல்லாம் பிளாஸ்ட்.

வில்லியாக களமிறங்கி அனைவரையும் மிரள வைத்துவிட்டார் நடிகை ரெஜினா. இவருடைய ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ் வேற லெவல். அதில் அவர் காட்டிய ஆட்டிட்யூட் செம. அம்மனுக்கு இணையான வில்லி என்றால், அது இவர்தான் என்று சொல்லும் வகையில் கச்சிதமாக அந்த கதாபாத்திரத்தில் பொருந்தியுள்ளார்.

ஊர்வசிக்கு வலுவான கதாபாத்திரம் அமையவில்லை. அது சற்று வருத்தத்தை தருகிறது. துனியா விஜய் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டிவிட்டார். மற்ற அனைத்து நடிகர், நடிகைகளின் பங்களிப்பும் படத்திற்கு பலம்.

இயக்குநர் சுந்தர் சி மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக திரையில் வழங்கியுள்ளார். அம்மன் வரும் காட்சிகளில் எல்லாம் அவ்வளவு பிரம்மாண்டம் கொட்டிக்கிடக்கிறது. மேலும், ரெஜினா கதாபாத்திரத்தை சிறப்பாக வடிவமைத்துள்ளார்.

ஆனால், முதல் பாதி திரைக்கதை சுவாரஸ்யமாக அமையவில்லை. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை எளிதாகவே கணிக்க முடிகிறது. அதேபோல், எமோஷனல் கனெக்ட் ஆகாதது படத்திற்கு மைனஸாக அமைகிறது.

2000 ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷயங்கள் இரண்டாம் பாதியில் காட்டிய விதம் அருமை. ஃபிளாஷ்பேக் கதைக்களம் விறுவிறுப்பாக இருந்தது. இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்திலிருந்து முற்றிலுமாக மாறுபட்டு இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார் சுந்தர் சி. இதனால், தனது திரைப்படங்களில் அதிகம் ரசிக்கப்படும் நகைச்சுவை காட்சிகளை கூட அவர் பெரிதாக இப்படத்தில் வைக்கவில்லை. முழுமையாக அம்மன் vs சாத்தான் என்பதில் கவனம் செலுத்தியுள்ளார்.

சர்ப்ரைஸாக இரண்டு நட்சத்திரங்கள் இப்படத்தில் கேமியோவாக கொண்டு வரப்பட்டு, அவர்களின் கதாபாத்திரத்தை வடிவமைத்த விதம் சிறப்பு. ஒளிப்பதிவு மற்றும் ஹிப் ஹாப் ஆதியின் இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. டெக்னிகல் ஒர்க் எல்லாம் சூப்பர். குறிப்பாக CG ஒர்க்ஸ் வேற லெவல்.

பிளஸ் பாயிண்ட்ஸ்

மூக்குத்தி அம்மனாக வரும் நயன்தாரா, அவரை எதிர்த்து நிற்கும் ரெஜினா

சுந்தர் சியின் இயக்கம்

இரண்டாம் பாதி திரைக்கதை

சண்டை காட்சிகள், குறிப்பாக இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ்

CG ஒர்க்ஸ், ஒளிப்பதிவு, ஹிப் ஹாப் ஆதியின் இசை

கேமியோ

மைனஸ் பாயிண்ட்ஸ்

முதல் பாதி நீளம்

எமோஷனல் கனெக்ட் இல்லாதது

கணிக்கக்கூடிய காட்சிகள்

ஊர்வசியின் கதாபாத்திரத்தில் வலு இல்லை

மொத்தத்தில் இந்த மூக்குத்தி அம்மன் 2 சில குறைகள் இருந்தாலும் ஏமாற்றவில்லை. கண்டிப்பாக தீபாவளிக்கு குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா