Untitled Document
November 8, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
"இந்த தீபாவளிக்கு ஒரு ஸ்பெஷல் விஷயம் செய்யப்போகிறேன்" - த்ரிஷா போட்ட பதிவு!
[Sunday 2026-11-08 06:00]

தமிழ் சினிமாவின் குயினாக கொண்டாடப்படும் த்ரிஷா என்ன செய்தாலும் டிரெண்ட் தான். எங்கு சென்றாலும், என்ன புகைப்படம் வெளியிட்டாலும் த்ரிஷாவிற்கான வரவேற்பு வேற லெவலில் இருக்கும். கடைசியாக அவர் ஒரு பிரபலத்தின் திருமணத்திற்கு சென்றிருந்தார். அந்த திருமணத்திற்காக த்ரிஷா அணிந்த நகை எல்லாம் இப்போது அவரது பெயரில் டிரண்ட் ஆக தொடங்கிவிட்டது. கடைசியாக த்ரிஷா நடிப்பில் சூர்யாவுடன் நடித்த கருப்பு திரைப்படம் வெளியாகி இருந்தது, இப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டை செய்து பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. அடுத்து த்ரிஷா நடிப்பில் ஒரு தெலுங்கு படமும், மலையாள படமும் வெளியாக இருக்கிறது.

தமிழ் மக்கள் அனைவரும் நாளை (நவம்பர் 8) தீபாவளி கொண்டாட தயாராகிவிட்டனர். அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல சென்னையே காலியாக இருப்பதாக நாம் நிறைய பதிவுகள் பார்த்து வருகிறோம்.

இந்த நேரத்தில் தீபாவளி நாளில் ஒரு ஸ்பெஷல் விஷயம் செய்யப்போவதாக நடிகை த்ரிஷா இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்ற நாய் ஒன்றை தத்தெடுத்து அதற்கான உணவு செலவை ஏற்றுக்கொள்வது குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மீட்கப்பட்ட ஆதரவற்ற நாய் ஒன்றின் உணவுக்கு நான் ஸ்பான்சர் செய்கிறேன், வெறும் ரூ. 1000 இருந்தால் மீட்கப்பட்ட ஒரு நாய்க்கு ஒரு மாதம் முழுமைக்கும் உணவளிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அது 30 நாட்களுக்கு வயிற்றுப்பசியை தீர்த்து மகிழ்ச்சியான தருணங்களைத் தரும்.

இந்த தீபாவளிக்கு நீங்களும் என்னுடன் இணைந்து ரூ. 1000 செலுத்தி ஒரு நாயின் உணவுக்கு ஸ்பான்சர் செய்து அவற்றின் வாழ்க்கையில் சிறிய மகிழ்ச்சியைக் கொண்டு வாருங்கள் என பதிவிட்டுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா