Untitled Document
November 10, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
முதல் முறையாக தனது மகனின் முகத்தை காட்டிய நடிகை கத்ரீனா கைஃப்!
[Monday 2026-11-09 17:00]

நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கவுஷல் தம்பதிக்கு பிறந்த குழந்தை விஹானின் முகத்தை இதுவரை காட்டாமல் இருந்து வந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகனின் முகத்தை காட்டினார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமிதாப் பச்சன் நடிப்பில் உருவாகி கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியான Boom திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கத்ரீனா கைஃப். அன்று தொடங்கிய இவரது பயணத்தில், Ek Tha Tiger, தூம் 2, Bang Bang, Tiger 3 உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. கடைசியாக இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து Merry Christmas எனும் திரைப்படத்தில் நடித்தார். மேலும், இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் சந்திப்பு பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமானவர்கள் விக்கி கவுஷல் மற்றும் கத்ரீனா கைஃப். இவர்கள் இருவரும் முதல் முறையாக விருது விழா ஒன்றில் சந்தித்துள்ளனர். அந்த விருது விழாவை விக்கி தொகுத்து வழங்க, கத்ரீனா கைஃப் Guest-ஆக வந்துள்ளார்.

ஆனால், கத்ரீனாவிடம் விக்கி முதல் முறையாக தனது காதலை வெளிப்படுத்தியது ஜோயா அக்தர் வைத்த விருந்தில்தான். இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜோயா அக்தர் ஏற்பாடு செய்த விருந்தில், கத்ரீனா மீதுள்ள தனது ஈர்ப்பையும், காதலையும் ஜோயாவிடம் வெளிப்படுத்தியுள்ளார். பின்னர் கத்ரீனா - விக்கி இருவரும் டேட்டிங் செய்து வந்தனர். கடந்த 2021-ஆம் ஆண்டு கத்ரீனா - விக்கி திருமணம் மிகவும் விமர்சையாக நடைபெற்று முடிந்தது.

கடந்த 2025-ஆம் ஆண்டு நடிகை கத்ரீனா, தான் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்த நிலையில், அதே ஆண்டு நவம்பர் மாதம் இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தங்களின் மகனுக்கு விஹான் என பெயர் சூட்டியுள்ளனர். விஹான் பிறந்தபின் அவருடைய முகத்தை காட்டவில்லை.

இந்த நிலையில், தீபாவளி கொண்டாட்டத்தின் வெளிப்பாடாக முதல் முறையாக தனது மகனின் முகத்தை காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை கத்ரீனா கைஃப். இந்த பதிவில், "Our brightest Diwali yet. Wishing everyone love, light and happiness" என குறிப்பிட்டுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா